மருமகள் இப்படித்தான்.. என் மகன் ரொம்ப கோபப்படுவான்.. ஜெயம் ரவியின் அம்மா எமோஷனல் பேட்டி
சென்னை: ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கும் நிலையில் ஜெயம் ரவியின் அம்மா சில மாதங்களுக்கு முன்பு பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் என்னுடைய மகன் ரொம்ப கோபப்படுவான். ஆனால் ரொம்பவும் பாசக்காரன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்றும் குடும்பத்தை விட்டு தனியாக ஜெயம் ரவி வசிக்கிறார் என்றும் செய்திகள் பரவி வந்தது. அந்த நேரத்தில் ஜெயம் ரவி உடைய மனைவி ஆர்த்தி ஜெயம் ரவி உடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்திருந்தார். அதனால் இவர்கள் விவாகரத்து செய்யப்போவது உண்மையா என்று கேள்விகள் எழும்பி வந்தது.

அதற்கு பிறகு சில மாதங்களாக அமைதியாக இருந்த பிரச்சனையில் திடீரென்று ஜெயம் ரவி தன்னுடைய twitter பக்கத்தில் தான் ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாகவும் தன்னை சார்ந்தவர்களின் நலனுக்காக தான் இந்த முடிவெடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதை மறுத்து ஆர்த்தி ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் ஜெயம் ரவி என்னிடம் கலந்து ஆலோசிக்காமல் விவாகரத்து முடிவு எடுத்திருக்கிறார். நான் அவரோடு பேச முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை என்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது நான் ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அதை ஆர்த்தி வாங்கி இருக்கிறார் ஆனால் விவாகரத்து முடிவு எனக்கு தெரியாது என்று சொல்வதை கேட்கும் போது குழப்பமாக இருக்கிறது. எனக்கும் விவாகரத்து முடிவு கஷ்டமாகத்தான் இருக்கிறது ஆனால் இதற்கு மேல் இந்த வாழ்க்கையில் தொடர முடியாது என்பதால் இந்த முடிவெடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பிரச்சனையில் ஜெயம் ரவிக்கு பாடகி கெனிஷாவோடு தொடர்பு இருப்பதாகவும் வதந்திகள் பரவி வந்தது. இப்படியான நிலையில் ஜெயம் ரவியின் அம்மா சில மாதங்களுக்கு முன்பு பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் என்னுடைய இரண்டு மகன்களும் மருமகள்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். இரண்டு மருமகள்களில் யாரை பிடிக்கும் என்று சொல்ல முடியாது. இரண்டு பேருமே திறமையானவர்கள் தான்.
என்னுடைய மூத்த மருமகள் ரொம்பவும் பாசமானவர். அதுபோல இரண்டாவது மருமகள் ஆர்த்தியும் வெளிநாட்டில் படித்திருக்கிறார். என்னுடைய மகன்களில் மூத்த மகன் ராஜா இயக்குனராக இருக்கிறார். இரண்டாவது மகன் ஜெயம் ரவி ரொம்பவும் ஒர்க்அவுட் பண்ணவான். எனக்கு என்னுடைய இரண்டு மகன்களை எப்போது பார்த்தாலும் அவர்கள் மெலிந்திருப்பது போல தான் தோன்றும்.
அதனால் அவர்களை பார்க்கும்போது என்னடா இளைச்சு போயிட்ட என்று கேட்டால் என்னுடைய இரண்டாவது மகன் ஜெயம் ரவி ரொம்பவே கோபப்படுவான். நான் கஷ்டப்பட்டு ஒர்க்அவுட் செஞ்சு உடம்பை குறைச்சிட்டு இருக்கிறேன் நீங்க என்னன்னா இப்படி கேக்குறீங்களே என்று சொல்லுவான். நான் இன்னும் கொஞ்சம் சாப்பிடுடா என்று சாப்பாடு வச்சா கூட வேண்டாமா இதுவே போதும் வெயிட் போட்டு விடுவேன் என்று பயப்படுவான்.
என்னுடைய மகன்கள் எப்போது வெளியே போகும்போது எங்களிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு தான் வெளியே போவாங்க. எந்த இடத்திலும் எங்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்று ரொம்பவும் யோசிப்பாங்க என்று அந்த பேட்டியில் ஜெயம் ரவியின் அம்மா எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications