ஜெயம் ரவி மனைவி இந்த கம்பெனி ப்ராடக்ட் தான் யூஸ் பண்ணுவாங்களா? அடேங்கப்பா விலை மட்டும் இவ்வளவா?
சென்னை: நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக நேற்று முன்தினம் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். ஆனால் அதை மறுத்து இன்று ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, விவாகரத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில் ஜெயம் ரவியின் மனைவி வாங்கும் சின்ன பொருட்களுக்கும் லட்சத்தில் விலை இருக்கும் பிரபல கம்பெனியின் பொருளை தான் பயன்படுத்துவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ஜெயம் ரவிக்கும் அவருடைய மனைவி ஆர்த்திக்கும் இடையில் விவாகரத்து பிரச்சனை பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் ஆர்த்தி விரும்பி பயன்படுத்தும் பிரபல கம்பெனியின் பொருள் பற்றிய தகவல் தான் இப்போது இணையத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது அதை பற்றி பார்க்கலாம்.

ஹாலிவுட்டில் தற்போது ஹாட் டாபிக்காக ஜெயம் ரவியின் விவாகரத்து பற்றிய செய்திகள் தான் இருக்கிறது. ஜெயம் ரவி பிரபல தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தியை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஜோடி விவாகரத்து செய்து பிரிய முடிவெடுத்திருப்பதாக ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரவி வந்தது.
ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியோடு எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்து இதை உறுதிப்படுத்தியும் இருந்தார். அதற்குப் பிறகு இவர்களுடைய பிரச்சனை அமைதியாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயம் ரவி தான் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
ஆனால் ஆர்த்தி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பு தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் அவரே எடுத்த முடிவு, எனக்கு இதில் விருப்பமில்லை. நான் பலமுறை அவரிடம் பேசுவதற்காக முயற்சி செய்தேன். ஆனால் என்னால் முடியவில்லை என்று நீண்ட ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். இந்த பிரச்சனை பரபரப்பாக பேசபட்டுக் கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஆர்த்தி ஆரம்பத்திலிருந்து செல்வ செழிப்பாக வளர்ந்து வந்ததாலேயே அவர் ஆடம்பரமாகவே வாழ்ந்து இருக்கிறார். ஆர்த்தி அதிகமாக "louis vuitton" கம்பெனி பொருட்களை தான் அதிகமாக பயன்படுத்துவாராம். சின்ன ஹேண்ட்பேக் முதல் பர்ஃப்யூம் வரை அவரின் அனைத்து பொருள்களும் இந்த கம்பெனி பொருட்களாக தான் இருக்குமாம். இந்த கம்பெனியில் குறைந்தபட்சம் ஹேண்ட் பேக்கின் விலை இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக தான் இருக்கிறது.
அதுபோல சாதாரண செருப்புகளும் கூட லட்சக்கணக்குகளில்தான் இருக்கிறது. அதிலும் குழந்தைகளுக்கு தலையில் வைக்கும் எளிமையான தொப்பிகள் கூட 70 ஆயிரத்திற்கும் அதிகமாக இருப்பது பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைக்கிறது. அதிலும் உள்ளாடைகள் முதல் டெய்லியும் யூஸ் பண்ணும் உடைகள் வரை எல்லாமே லட்சக்கணக்கில் இருக்கிறது. இந்த கம்பெனி பொருட்களை தான் ஆர்த்தி விரும்பி யூஸ் பண்ணுவாராம்.
ஆனால் இந்த கம்பெனியில் சோப்பு மட்டும் தயாரிக்கவில்லை என்பதற்காக ஆர்த்தி இந்த கம்பெனிக்கு போன் செய்து நான் உங்கள் கம்பெனி பொருட்களை தான் பயன்படுத்துகிறேன். சோப்பு மட்டும் ஏன் நீங்கள் தயாரிக்கவில்லை?
அதற்காக நான் லக்ஸ் சோப்பா போட முடியும்? எல்லாமே உங்க கம்பெனி பொருட்கள் தான் எனக்கு பிடிக்கும் அதனால் சோப்பு ஏன் தயாரிக்கவில்லை என்று கேள்வி கேட்டதாக பிரபல பாடகியான சுசித்ரா ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

மேலும் சுசித்ரா ஆர்த்தி பற்றி பேசுகையில், ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இவர்கள் இருவரில் என்னுடைய சப்போர்ட் யாருக்கு என்று கேட்டால் ஜெயம் ரவிக்கு தான் உண்டு. ஜெயம் ரவியின் குடும்பம் ரொம்ப ஏழ்மையில் இருந்து வளர்ச்சி பெற்றது. ஆனால் ஆர்த்தியின் நிலைமை அப்படி கிடையாது. அவர் வீட்டில் ரொம்பவும் செல்லமாக வளர்ந்து ஆடம்பரமாகவே செலவு செய்து பழகிவிட்டார்.
அவருடன் ஜெயம் ரவியால் அதிக வருடங்கள் வாழ முடியாது. ஜெயம்ரவி அவருக்காக இரவும் பகலும் வேலை பார்க்கணும். அப்படி வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு போனாலும் ஆர்த்தி என்ன மனநிலையில் இருப்பார்ன்னு தெரியாது. ஆர்த்தி அழகாக இருப்பதால் அவருடைய முகத்தை பார்த்து இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து விட்டார். ஜெயம் ரவி குடும்பம் எப்போதும் மற்றவர்களுக்கு மதிப்பளிப்பவர்கள். ஆனால் ஆர்த்தி ஆடம்பரமாக இருக்கவேண்டும் என்பதில் ரொம்பவும் கவனமாக இருப்பார் என்று சுசித்ரா சொல்லி இருக்கிறார்.
இதை பார்க்கும் போது ஆர்த்தி விவாகரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்னிடம் கேட்காமல் ஜெயம் ரவி எடுத்த முடிவு என்று பதிவு வெளியிட்டு இருக்கும் நிலையில் விவாகரத்துக்கு மறுத்தால் தான் ஜெயம் ரவியிடம் இருந்து ஆடம்பர செலவுக்காக ஜீவனாம்சம் பெற முடியும் என்பதற்காக ஆர்த்தி இப்போது விவாகரத்துக்கு மறுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாரா? என்று கேள்விகள் எழுந்து வருகிறது. ஆரம்பத்தில் ஜெயம் ரவியோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்ததே ஆர்த்தி தான். பிறகு எதற்காக விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என்று ஆர்த்தி சொல்ல வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications