“ஜோடி ஆர் யூ ரெடி” நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள் யார் தெரியுமா? பரிசு மட்டும் இத்தனை லட்சங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 செமி பைனல் பிரம்மாண்டமாக நடந்து முடிவடைந்து இருக்கிறது. இதில் வின்னராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? அவர்களுக்கு எவ்வளவு பரிசு தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது? என்ற தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ் ரசிகர்களின் மத்தியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது. அதனாலேயே விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் வந்துவிடுவது வழக்கமான சம்பிரதாயமாக இருக்கிறது.

அந்த வகையில் தான் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் முதல் பாகம் முடிவடைந்ததும் இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திறமையாக நடனம் ஆடும் கலைஞர்களை ஜோடியாக ஆடவைத்து அவர்களுக்கு பரிசளிப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கியமாக இருக்கிறது. அதிலும் சாதாரண டான்ஸர்களோடு சின்னத்திரை பிரபலங்கள் ஜோடியாக டான்ஸ் ஆடி வருகிறார்கள்.
அதுபோல இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், சங்கீதா கிரிஷ் நடுவர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை நடிகரும் தொகுப்பாளருமான ரியோ தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகரும் இயக்குனருமாக பன்முகத்திறமை கொண்ட பார்த்திபன் கலந்து கொண்டிருக்கிறார்.
அதுபோல நடிகை ஆயிஷா, டான்ஸ் மாஸ்டர் சாண்டி போன்றோர் கலந்து கொண்டிருக்கின்றனர். இப்படியாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் செமி ஃபைலானது நடைபெற்று முடிவடைந்தது. இதில் ஐந்து ஜோடிகள் கலந்து இருந்த நிலையில் ஒரு ஜோடி எலிமினேட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த சீசனில் தனுஷ் மற்றும் ஜஸ்டினா டைட்டில் வின்னர் ஆக முதல் இடத்தை பிடித்திருக்கின்றனர். இவர்களுக்கு பரிசாக 7 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து விக்னேஷ் மற்றும் ரவீனா ஜோடி இரண்டாவது இடத்தை பிடித்து முதல் ரன்னர் அப் ஆக தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களுக்கு மூன்று லட்சம் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து பிரித்துவால் மற்றும் ரம்யா ஜோடி மூன்றாவது இடத்தை பிடித்து இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications