Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயை சப்புனு அறைந்த எஸ்ஏசி.. மரத்தடியில் மேக்கப் போடும்போது ஒரே பரபரப்பு.. இதுவே பக்குவம்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், 3 எழுத்து நடிகருக்கும் தொடர்பு உள்ளதாக செய்திகள் சோஷியல் மீடியாவில் வலம் வந்தவண்ணம் உள்ளன.. இதுகுறித்து தன்னுடைய கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. அத்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த உதாரணம் ஒன்றையும் விரிவாக சொல்லி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

நடிகர் ஸ்ரீகாந்த் கைதுக்கு பிறகு, போதைப்பொருள் வழக்கில் தற்போது சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். கொக்கைன் போன்ற ஹை-டெக் போதைப்பொருளை விற்பனை செய்பவர்கள், அதை பயன்படுத்துபவர்கள், என அத்தனை பேரையும் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள்.

Television vijay sac

அதேபோல, நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குழுவில் இடம் பெற்றுள்ள நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் யார் யார்? என்பது குறித்தும் போலீசாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை நகர்கிறது..

நடிகைகள், நடிகர்கள்

அந்தவகையில், கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குழுவில் 3 எழுத்து நடிகர் ஒருவரும், 3 எழுத்து நடிகை ஒருவரும், 4 எழுத்து இசையமைப்பாளர் ஒருவரும் தொடர்பில் உள்ளதாக தெரியவந்துள்ளதாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு செய்திகள் கசிந்தன.. எனவே அது தொடர்பான விசாரணையையும் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

இதனிடையே, யாரந்த 3 எழுத்து நடிகர்? என்று சோஷியல் மீடியாவில் பலரும் பலவிதமான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.. 3 எழுத்தில் பல நடிகர்கள் உள்ளதால், எதையுமே பொத்தாம் பொதுவாக, உறுதியாக கூற முடியாது என்று மூத்த பத்திரிகையாளர்களும் கருத்து சொல்லி வருகிறார்கள்.

சித்தரிக்க வேண்டாம்

இந்நிலையில், Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "3 எழுத்து நடிகர் என்றதும், விஜய்யை சிலர் டார்கெட் செய்து, அவர் மீது ஒரு அவப்பெயரை உண்டாக்கி, அவரை ஒரு குடிகாரர் போல சித்தரிக்கும் முயற்சியில் நடந்து வருவதாக தெரிகிறது.

தேர்தல் நெருங்க நெருங்க, தவெகவின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே போகிறது என்பதால், விஜய்க்கு டேமேஜ் செய்வதற்காகவே, தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து வருகிறார்கள். விஜய் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது.. போதையால் வண்டி ஓட்டி சிக்கினார், எங்காவது கலாட்டா செய்தார், என்று ஒருமுறையாவது புகார் வந்திருக்கிறதா?

அவதூறுகள் - விமர்சனங்கள்

அரசியல்ரீதியான மனிதனை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு, தனிமனித விஷயத்தில் தலையிடுவதும், அவதூறு பரப்புவதும் கூடாது.. இதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன்.

கோயம்புத்தூர் மாப்ளை படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.. பாடல் காட்சிக்காக விஜிபி அருகில் ஓரிரு சீன்கள் மட்டுமே படமாக்க வேண்டியிருந்தது.. கதாநாயகிக்கு ரூம் போட்டு தரப்பட்டது.. அரைநாள் ஷூட்டிங் என்பதால், விஜய்க்கு ரூம் எதுவும் இல்லை..

இதை விஜய்யும் பெரிதாக கண்டுகொள்ளாமல், அங்கிருந்த ஒரு மரத்தடியில் நின்று மேக்கப் போட்டுக் கொண்டார். உடனே விஜய்யிடம் ஒட்டிக்கொண்டிருந்த சிலர், "ஹீரோயினுக்கு மட்டும் ரூம் போட்டு தந்துள்ளார்கள், உங்களுக்கு மரத்தடியா? ஒரு பிரபல டைரக்டரின் மகனை இப்படி நடத்தலாமா?" என்று என்னன்னவோ பேசி உசுப்பேற்றிவிட்டார்கள்..

கோபப்பட்டு கிளம்பிய விஜய்

அதுவரை அமைதியாக இருந்த விஜய், இதைக்கேட்டதுமே கோபம் கொண்டு, கையிலிருந்த துணியை இரண்டாக கிழித்தெறிந்துவிட்டு, கோபத்தில் கார் எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.. இதைப்பார்த்து மொத்த பேரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.. டைரக்டர், தயாரிப்பாளர்களுக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை.

உடனே அவரது அப்பா எஸ்ஏசிக்கு போன் போட்டு தகவலை சொல்லியிருக்கிறார்கள்.. பிறகு அடுத்த ஒரு மணி நேரத்தில் விஜிபி-க்கே எஸ்ஏசி காரில் பறந்து வந்தார்.. பின்னாடியே விஜய்யுடன் காரில் வந்தார்..

என்ன நடந்தது? என்று அங்கிருந்தவர்களை விசாரித்த எஸ்ஏசி, பிறகு அடுத்த நொடியே, விஜய்யின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்..

நடிகைக்கு மட்டும் ரூம்

"உன்னைவிட ஜூனியர் நடிகைக்கு ரூம் போட்டு தந்து, உனக்கு மரத்தடி தந்திருக்கிறார்கள் என்றால், அதைத்தாண்டி நீ வைராக்கியமாக உயரணும், இதை வெறியாக எடுத்து கொண்டு முன்னேறணும், அடுத்தடுத்த படத்தில் உன் பின்னால் அனைவரும் வரவேண்டும், காரை எடுத்து வந்துவிட்டால், தயாரிப்பாளர்களின் நிலைமை யோசித்து பார்த்தாயா? என்று சத்தம் போட்டார்.

பிறகு தயாரிப்பாளர், டைரக்ரிடமும், "ஹீரோ, ஹீரோயின் இருவருமே சின்ன பிள்ளைகள்.. இருவருக்குமே ஈகோ இருக்கும், கோபமும் இருக்கும்.. இருவரையுமே ஒரே மாதிரி நடத்தலாமே? ஒரு நபருக்கு ரூம் போட 1000 ரூபாய் செலவாக போகிறது.. இதுலதான் நீங்க செலவை மிச்சப்படுத்துவீர்களா? என்று கேட்டு அறிவுறுத்தினார்.

கன்னத்தில் அடி

இதற்கு பிறகு, கன்னத்தில் அடி வாங்கிய விஜய், மறுநொடியே எதுவுமே பேசாமல், எந்த வருத்தத்தையும் காட்டிக் கொள்ளாமல், ஷூட்டிங்கில் எஞ்சியுள்ள காட்சிகளை முழுமையாக நடித்து தந்தார்..

இப்படி விஜய் எங்கெல்லாம் துவண்டு போனாரோ, எங்கெல்லாம் உருவகேலி செய்யப்பட்டாரோ அங்கெல்லாம் அரணாக நின்று தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தியவர் எஸ்ஏசி மட்டும்தான்.. டைரக்டர், தயாரிப்பாளர் பேச்சை கேட்டு இன்றுவரை மதிக்கும் பாங்கு, அரசியலிலும் விஜய்க்கு உள்ளது. எனவே தேவையில்லாமல் விஜய் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+