இரண்டாவது மனைவியின் முதல் கணவரின் குழந்தை.. ஸ்ருதி பேரைகூட மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் சொல்லக்கூடாது
சென்னை: ஸ்ருதிகிட்ட இருந்து நேரா என்னிடம் வரவில்லை.. பல பெண்களிடம் பழகிவிட்டுதான் என்னிடம் மாதம்பட்டி வந்தார் என்கிறார் ஜாய்.. இது எப்படி ஜாய்க்கு தெரியும்? அப்படி தெரிந்தும் ஏன் ஜாய் பழக வேண்டும்? மாதம்பட்டியிடம் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்? அப்படியானால் ஜாய் யார்? தவறானவர் என்றால் தொழில்ரீதியாக கூட மாதம்பட்டியிடம் என்ன தொடர்பு?" என்றெல்லாம் பத்திரிகையாளர் சேகுவேரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
2nd Floor Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "வியாபார நிமித்தமாக இருக்கக்கூடிய நபரின் பாஸ்வேர்டு தெரிந்திருந்தால், அந்த செல்போனிலிருந்து வீடியோ, போட்டோவை யார் வேண்டுமானாலும் அனுப்ப முடியும்,..

ஓய் பொண்டாட்டி
மாதம்பட்டி ரங்கராஜ் பேசியதாக, ஜாய் வெளியிட்டிருந்த அந்த வீடியோவில், பொண்டாட்டி என்றுதான் சொல்றாரே தவிர,பெயரை சொல்லவில்லை.. மாதம்பட்டிக்கு பொண்டாட்டி இருப்பது ஊரறிந்த தெரிஞ்ச விஷயம்தானே? 2வது மனைவி இருப்பதாக இதுவரை மாதம்பட்டி சொல்லவேயில்லை.. ஜாய்தான் சொல்லி வருகிறார்.. இந்த 2 வது மனைவிக்கு, முதல் புருஷன் இருக்காரு.. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.. இதெல்லாம் உண்மைதானே?
நித்யானந்தா வீடியோ
ஜாய் தான் தன்னுடைய மனைவி என்று எங்காவது மாதம்பட்டி ரங்கராஜ் சொல்லியிருக்கிறாரா? இன்றிருக்கும் ஏஐ டெக்னாலஜியில் ஐலவ்யூ என்றுகூட சொல்ல முடியும்.. வாயசைப்பது ஒன்றாக இருக்கும், உண்மையான வார்த்தை வேறாக இருக்கும்.. பொதுவாக, இந்த போட்டோ ஆதாரம், வீடியோ ஆதாரம், ஆடியோ ஆதாரம் இதெல்லாமே செல்லாத போன விஷயங்கள்தான்..
காரணம், அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.. அவை அனைத்துமே ஒரிஜினல்தானா? என்பதை கண்டறிய சோதனை செய்ய வேண்டும்.. நீதிமன்றம்செல்ல வேண்டும்.. இதற்கு கால அவகாசம் பிடிக்கும்.. நித்யானந்தா ரஞ்சிதா வீடியோ வெளியாகி, அது உண்மை என்று நிரூபணமாக பல வருடங்களானது.. எனவே இன்றைய டெக்னாலஜியில் ஆடியோ, வீடியோக்களை நம்பக்கூடிய விஷயங்களாக இருக்காது.
ஜாயின் பூர்வீகம், வரலாறு என்ன
மாதம்பட்டி ரங்கராஜ் யார் என்பதும், பூர்வீகமும் அனைவருக்கும் தெரியும்.. அழகும், அதிர்ஷ்டம், திறமை, உழைப்பு இருக்கும் நபர்.. இதனால் பல பெண்கள் அவரிடம் விழத்தான் செய்வார்கள்.. அப்படி விழும்போது, ஏற்கனவே திருமணமான மாதம்பட்டி ரங்கராஜ், அவர்களை நிராகரித்திருக்க வேண்டும்..
அதேபோல ஜாய் கிரிஸ்டிலா என்பவர் யார்? குடும்ப வரலாறு என்ன? பெற்றோர் யார்? ஏற்கனவே இருந்த வாழ்க்கை என்னானது? ஏற்கனவே இருந்த குழந்தை நிலைமை என்ன? இதெல்லாம்கூட ஜாய் பேசணும் இல்லை? நேர்காணலில் இந்த கேள்விகளை கேட்கணும் இல்லை?
தவறானவரிடம் என்ன உறவு
ஸ்ருதிகிட்ட இருந்து நேரா என்னிடம் வரவில்லை.. பல பெண்களிடம் பழகிவிட்டுதான் என்னிடம் மாதம்பட்டி வந்தார் என்கிறார் ஜாய்.. இது எப்படி ஜாய்க்கு தெரியும்? அப்படி தெரிந்தும் ஏன் ஜாய் பழக வேண்டும்? உறவு வைத்துக்கொள்ள வேண்டும்? அப்படியானால் ஜாய் யார்? தவறானவர் என்றால் தொழில்ரீதியாக கூட மாதம்பட்டியிடம் என்ன தொடர்பு?
ஸ்ருதியுடன் வாழ்ந்து வந்தார்.. அவருடன் உறவு குலைந்ததும் என்னுடன் வாழ்ந்தார் என்றால் பரவாயில்லை.. தனக்கு முன்பேயே பல பெண்களிடம் பழகி வந்தார் என்றால் என்ன அர்த்தம்? ஸ்ருதி என்ற இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்ததுடன், அவருடைய கணவரையே அபகரித்துவிட்டார் ஜாய்..
இதுவரை ஸ்ருதி ஒரு வார்த்தைகூட அதை பற்றி பேசியதில்லை.. அதற்கு காரணம் அவரது நல்ல வளர்ப்பு.. பிள்ளைகளுக்காக வாழ வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருக்கிறார்..
ஸ்ருதி பெயரை உச்சரிக்க கூடாது
அப்படிப்பட்ட ஸ்ருதியின் பெயரைகூட ஜாய் உச்சரிக்கக்கூடாது.. கடந்த 7 வருடத்தில் தம்பதிகளுக்குள் இணக்கமாக இல்லை என்கிறார் ஜாய்.. அப்படியானால் 7 வருடத்தில் வேறு யாரையுமே ஸ்ருதி திருமணம் செய்ய நினைத்திருக்க மாட்டாரா? ஆனால், தன்னுடைய பிள்ளைகளுக்காக ஸ்ருதி வாழ்ந்து வருகிறார். ஒரு நெறியுடன் வாழ்ந்து வருகிறார்.. இதுவரை ஜாய் என்ற பெயரைகூட ஸ்ருதி எங்குமே சொல்லியதில்லை
ஸ்ருதி இதுவரை சரியாக இருப்பதால்தான், மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் இருவரையுமே விட்டு வைத்திருக்கிறார்.. இல்லாவிட்டால் இந்நேரம் இருவரையுமே கூண்டில் நிறுத்தியிருக்க முடியும்.. எனவே ஸ்ருதியின் பெயரை மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் இருவருமே உச்சரிக்க தகுதியற்றவர்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications