மாதம்பட்டி ரங்கராஜ் அப்படி சொல்லி 15 நாள் ஆகிடுச்சு! கண்டா வர சொல்லுங்க! குழந்தையோடு ஜாய் போஸ்ட்!
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜன் பற்றி தொடர்ந்து போஸ்ட் போட்டு கலாய்த்தும் திட்டிக் கொண்டிருக்கும் சாய் கிரிஸில்டா இன்று தன்னுடைய குழந்தையோடு தான் எடுத்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்ட்டா ஸ்டோரியில் போட்டு மாதம்பட்டி ரங்கராஜை மீண்டும் சீண்டி பார்த்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
மாதம்பட்டி ரங்கராஜ்க்கு இது போதாத காலம் போல. அவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த பிறகு அதிக அளவில் பிரபலம் கிடைத்தது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளும் அவரை சுற்றியது. அவர் ஜாய் கிரிஸிடில்லாவை திருமணம் செய்ததாக ஆரம்பத்தில் செய்திகள் பரவி வந்தபோது அதை பலரும் நம்பவில்லை. ஆனால் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் மாதப்பட்டி ரங்கராஜன் தனக்கு காதலர் தினத்தில் கொடுத்த கிப்ட் என்று தொடர்ந்து போஸ்ட் போட்டு கொண்டு இருந்தார்.

அந்த நேரத்தில் மாதம்பட்டி ரங்கராஜன் மனைவி ஸ்ருதி பிரியா மாதம்பட்டி ரங்கராஜனுடன் எடுத்த குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதனால் இது வதந்திக்கு பதிலடி என்று கூறப்பட்டது. ஆனாலும் அடுத்த சில மாதங்களில் ஜாய் தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தார். அப்போது தான் ஆறு மாதமாக கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். தனக்கு ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜனுடன் கல்யாணம் முடிந்து விட்டது, நான் அவருடைய மனைவி என்று அறிவித்திருந்தார். அதற்கு மாதப்பட்டி ரங்கராஜன் எந்த இடத்திலும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்த பிரச்சனை புதாகரமாகி இப்போது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கடந்த வாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஜாய்யின் குழந்தை என்னுடையது என்று டிஎன்ஏ டெஸ்டில் உறுதியானால் அந்த குழந்தையை ஆயுள் காலம் வரைக்கும் கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருந்தார். அதோடு நான் டிஎன்ஏ டெஸ்ட்டுககு தயார் என்றும், ஜாய்யுடன் திருமணம் நடந்தது கட்டாயத்தின் பேரில் தான் அவர் மிரட்டியதால் தான் வேறு வழியில்லாமல் திருமணம் செய்து கொண்டேன் என்பது போன்று அந்த அறிக்கையில் அவர் கொடுத்த விளக்கம் அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது.
இந்த நிலையில் அறிக்கை வெளியிட்டு சில நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ரங்கராஜ் இன்னும் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு வரவில்லை என்று ஜாய் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் யாராவது என் கணவர் மாதப்பட்டி ரங்கராஜை பார்த்தால் டி.என்.ஏ டெஸ்ட்க்கு வர சொல்லுங்கள். டி என் ஏ டெஸ்டுக்கு வருவதாக statement கொடுத்து 15 நாட்கள் ஆகிவிட்டன. இப்போ எங்க தலைமறைவாக இருக்கிறார்? மாதம்பட்டி ரங்கராஜன் உங்களுக்கு தைரியமும், நேர்மையும் இருந்தால் டிஎன்ஏடெஸ்டுக்கு வாங்க என்று அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்க்கு மாதம்பட்டி ரங்கராஜன் என்ன பதில் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஸ்ருதி பிரியா தான் வெளி இடங்களுக்கு டிராவல் செய்து கொண்டிருப்பதாக சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு இருக்கிறார். ஏற்கனவே தன்னுடைய கணவருக்கு தான் உறுதுணையாக இருப்பேன் அவர் மீது எந்த தப்பும் இல்லை என்பது போலவே அவர் அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில் இப்போது மாதம்பட்டி ரங்கராஜ் அவருடைய முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் டிராவலில் இருக்கிறாரா? அதனால் தான் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு இன்னும் போகவில்லையா என்றும் பலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி












Click it and Unblock the Notifications