ஏங்க.. இது எல்லாம் நம்புற மாதிரியா இருக்குங்க.. ஜூலியை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை : நாடி ஜோசியம் பார்க்க போன இடத்தில் அப்படியே ஒரு செல்பி எடுத்து தனக்கு நல்வாக்கு கிடைச்சிருக்கு என போஸ்ட் போட்ட ஜூலியை ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
அடடா 100% நம்புங்கப்பா என்று ஜூலியும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். இருந்தாலும் விடாத குசும்புக்கார ரசிகர்கள் ஜூலியை ஜாலியாக கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
அதைப் பார்த்ததும் இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என மீம்ஸ்களை பரப்பும் இணைய குறும்பர்களின் சேட்டைகள் ஆரம்பம் ஆகிடுச்சி.

போஸ்ட் பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்
சும்மாவே ஜூலியின் ஒரு போட்டோ கிடைச்சா கூட நெட்டிசன்கள் தொல்லை தாங்க முடியாது. அதை வைத்து ட்ரோல் செய்து இணையதளத்தை கதிகலங்க வைத்து விடுவார்கள். அந்த மாதிரி தான் இப்போ ஜூலியின் லேட்டஸ்ட் போட்டோக்களும் வைரலாக இன்ஸ்டாகிராமில் வருகிறது. அதுவும் இவருடைய நம்பிக்கையை சமூக வலைத்தளத்தில் இவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதைப்பற்றியே இப்போ ஒரு டாப்பிக்காக எடுத்து அவருடைய ரசிகர்களுக்குள் ஒரு போரே நடந்து கொண்டிருக்கிறது.

அப்போ தொடங்கியது இன்னும் முடியல
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலிக்கு மாடலிங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நெகட்டிவ் கேரக்டர் தான் கிடைத்திருக்கிறது. ஆனால் அப்படி எல்லா ரசிகர்களும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. ஒரு சில ரசிகர்களும் இவரை தவறாக புரிந்து கொண்டு நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு வந்தாலும் அவருக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. ரசிகர்களின் ஊக்குவிப்பால் ஒவ்வொரு படியாக முன்னேறி வந்து கொண்டுதான் இருக்கிறார்.

முன்ன மாதிரி இப்போ இல்லையே
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் இவர் முன்ன மாதிரி போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதில்லை என்று ரசிகர்கள் அதிகமாக கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர் ஒரு போஸ்ட் போட்டாதும் போட்டோ சூட் போட்டோஸ்கள் தானா என்று ஆர்வமுடன் எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி தான் காத்திருந்தது. அதில் இவர் ஒரு நாடி ஜோசியம் பார்க்க சென்று இருக்கிறாராம். அப்போது அவருடைய வாழ்க்கையில் இதுவரைக்கும் நடந்ததையும், நடக்கப் போவதையும் துல்லியமாக கூறியிருக்கிறாராம். இதைப் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு இவர் அந்த ஜோதிட நிலையத்தில் இருக்கும் போது அவரும் அந்த ஜோதிடரும் எடுத்த போட்டோவை அப்லோட் பண்ணி இருக்கிறார்.

நம்பிக்கை ..அதானே எல்லாம்
அந்த இன்ஸ்டாகிராம் போஸ்டில் இவர் 'இன்று வடபழனியில் நாடி ஜோதிடர் ராமமூர்த்தியை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உண்மையில் நம் முன்னோர்கள் மிகச்சரியாக கணித்துள்ளார்கள். அவரை போன்ற உண்மையான மற்றும் உண்மையான வார்த்தைகள் இன்று என்னை நம்ப வைத்தது. உங்கள் கடந்த காலத்தை மட்டுமல்லாமல் உங்கள் எதிர்காலத்தையும் 100% யதார்த்தத்துடன் ஒரு நபர் உங்களிடம் சொன்னால் நீங்கள் உற்சாகம் அடைய மாட்டீர்களா?சுவடியிலிருந்து அவருடைய உண்மையான வார்த்தைகள் அனைத்தும் உண்மையானவை. மற்றும் நான் ஆச்சரியத்தில் திகைத்து போனேன்! அவருடைய வார்த்தைகளில் இருந்து மட்டுமல்லாமல் அவர் உங்கள் வாழ்க்கையை முன்னறிவித்து உங்கள் எதிர்காலத்தை பற்றி சொல்லும் விதத்திலும் நான் நேர்மறையாக உணர்ந்தேன். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை பார்க்கவும் அவர்களின் எதிர்காலத்தை அறியவும் அவரை பரிந்துரைப்பதில் நான் நிச்சயமாக மகிழ்ச்சி அடைவேன் என்று அந்த ஜோதிட நிலையத்தின் அட்ரஸையும் பதிவிட்டிருக்கிறார்.

வேண்டான்னா விட்டுட்டு போங்க
சும்மாவே இவர் என்ன செஞ்சாலும் கலாய்க்கும் நெட்டிசன்கள் இப்போ மீண்டும் களத்தில் குதித்து விட்டனர். இதையெல்லாம் உள்ளூர் சேனல்களிலேயே நிறைய பார்த்தாச்சு என்று ஒரு ரசிகரும், இப்படியே பலரும் இவரை கலாய்த்து இருந்தாலும் இவருடைய உண்மையான ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். என்னதான் இவர்களுக்குள் போட்டி நடந்து கொண்டிருந்தாலும் அப்படி என்னதான் எதிர்காலத்தைப்பற்றி கணித்து கூறியிருப்பார் என்று நமக்கும் நினைவில் தோன்றத்தான் செய்கிறது. என்ன சொல்லியிருந்தாலும் சரி இனி நடப்பதெல்லாம் நன்மையாகவே முடிந்தால் சந்தோஷம் தான்.












Click it and Unblock the Notifications