கேப்டனின் இடத்தை நிரப்ப வந்த ஜூனியர்.. "படைத்தலைவன்” குறித்து நெகிழ்ந்த பிரேமலதா
சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த படைத்தலைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதற்காக நேற்று நடந்த பிரீ ஷோ பார்த்துவிட்டு விஜயகாந்தின் குடும்பத்தினர் படத்தை பாராட்டி இருக்கின்றனர். அதோடு "கேப்டன் விஜயகாந்தின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவருடைய மகன் ஜூனியர் கேப்டன் சண்முக பாண்டியன் வந்துவிட்டான்" என்று விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
யூஎஸ் அன்பு இயக்கத்தில் பல வருடங்களாக உருவான படைத்தலைவன் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் மிருகங்களை மையமாக வைத்தே படம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் உட்பட ஒரு சில நடிகர்களுடன் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு பிரேமலதா நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

பிரேமலதா பேட்டி
அதில் "ஒவ்வொரு விஷயத்தையும் அன்பு அருமையாக பண்ணியிருக்கிறார். இளையராஜா மீண்டும் ராஜா ராஜா தான் என்று நிரூபித்திருக்கிறார். கேமரா மேன் மிகப்பிரமாதமாக ஒர்க் பண்ணி இருக்கிறார். சென்டிமென்ட் ஆக்ஷன் காட்சிகள் இருக்கு. கேப்டனை மறுபடியும் லைவா பார்க்கிறது மிகப்பெரிய சந்தோஷமா இருந்தாலும், எனக்கு ஒரு மன அழுத்தமும் இருந்தது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடணும்னு வாழ்த்துகிறேன்.
படைத்தலைவன் திரைப்படம் காட்சிகள்
காடுகளில் உள்பகுதியில் போய் யானைகளுடன் கஷ்டப்பட்டு ஒர்க் பண்ணி இருக்காங்க. அது பிரேம் பை பிரேம் தெரியுது. ஒட்டு மொத்த குழுவுக்கும் எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசி இருந்தார். பிரேமலதாவை தொடர்ந்து அவருடைய மூத்த மகன் விஜய பிரபாகரன் பேசியிருந்தார். அப்போது "கேப்டன் திரும்பவும் திரையில் வந்த மாதிரி தான் தெரிந்தது. இந்த படத்தை தயாரிப்பாளர், இயக்குனர் என எல்லாருமே கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணி இருக்காங்க.
படைத்தலைவன் திரைப்படம் ரிவ்யூ
ஆரம்பத்தில் இருந்து எல்லா சீனும் சென்டிமென்டா போய்க்கொண்டே இருக்கு. ஆக்ஷன் பிளாக் வரும் போது சண்முக பாண்டியன் ஃபைட் அபாரமாயிருக்கு. "கேப்டனின் வெற்றிடத்தை நிரப்ப வந்த ஜூனியர் கேப்டன் சண்முக பாண்டியன் வந்துட்டாப்ல.. இதை நான் ஒரு அண்ணனா சொல்லல, ஒரு ஆடியன்ஸ்ஸா சொல்லுறேன்" இளையராஜாவின் பிஜிஎம் கேப்டனுக்கு சத்திரியன் உட்பட பல படங்களில் போட்டு இருக்காரு.

பொட்டு வெச்ச தங்க குடம் பாடல்
அதே மாதிரி இந்த படத்திலும் போட்டு இருக்காரு. "நீ பொட்டு வச்ச தங்க கூடம்" பாட்டு பொன்மனச் செல்வதற்கு அப்புறம் ரப்பர் பந்துல ஹிட் ஆச்சு. அதுக்கப்புறம் இந்த படத்தில் ஹிட்டாகி இருக்கிறது. ஆடியன்ஸ் கிளாப் பண்ணுறாங்க. இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும். எப்பவும் மேடையில் சொல்லுவது தான் எங்களுக்கு கேட்கிற உரிமை இருக்கு, நாங்க கேட்கிறோம் நீங்க உங்க அன்பு கொடுங்க.. என்று விஜய் பிரபாகரன் பேசியிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications