கூட்டை வந்தடைந்த "ஜோதிகா".. ரூ.100 கோடியில் ஈசிஆர் பங்களா? இதுதான் சிவகுமாரின் நல்ல குணம்: பிரபலம்
சென்னை: "நடிகர் சிவக்குமார் சாரை பொறுத்தவரை, எல்லா விஷயத்திலும் பர்ஃபெக்ஷன் பார்க்கக்கூடியவர்.. நேரம் கடைப்பிடிப்பது முதல் அனைத்து விஷயங்களிலும் ஒழுக்கத்துடன் இருப்பார், மற்றவர்களும் சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்" என என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.. அத்துடன் ஜோதிகா - சூர்யா தனிக்குடித்தனம் சென்றது குறித்தும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், தற்போதுள்ள சிவக்குமார் வீடு, பெரிய அளவுக்கான பங்களா இல்லை.. ஓரளவுக்கு மீடியமான அளவுதான் இருக்கும்.. கார்த்தி குடும்பத்தினரும் அதே வீட்டில்தான் உள்ளனர்.. கல்யாணமாகி சூர்யா குடும்பத்தினரும் அதே வீட்டில்தான் இருந்தனர்..

பல வருடங்கள் கழித்துதான் அடையாறில் வீடு ஒன்றை கட்டினார் சூர்யா.. தன்னுடைய காதல் மனைவிக்காக பார்த்து பாரத்து கட்டிய வீடு அதுவாகும்..
அடையாறு வீடு
அந்த வீட்டிலேயே குடும்பத்துடனும் குடியேறினார்.. அதற்காக சிவக்குமாருடன் இணக்கமாக இல்லை என்று அர்த்தம் இல்லை.. அடையாறு வீட்டிற்கு சூர்யா சென்றாலும், பெரும்பாலும் தன்னுடைய வீட்டிலிருந்து கிளம்பி சென்று பிள்ளைகளை ஸ்லுக்கு அழைத்து சென்று விடுவார் சிவக்குமார்.. பேரன் மிகவும் ஸ்மார்ட்.. தன்னுடைய தாத்தாவை போலவே நன்றாக ஓவியம் வரையக்கூடியவர்..
சிவக்குமார் சாரை பொறுத்தவரை, எல்லா விஷயத்திலும் பர்ஃபெக்ஷன் பார்ப்பவர்.. நேரம் கடைப்பிடிப்பது முதல் அனைத்து விஷயங்களிலும் ஒழுக்கத்துடன் இருப்பார்..
நடிகர் சிவக்குமார்
சிவக்குமார் சாரை நிறைய நடிகைகள் விரும்பினார்கள்.. அப்போது இன்னும் அழகாக இருந்தார்.. ஆனால், எந்த நடிகையையும் சிவக்குமார் விரும்பவில்லை.. தன்னுடைய சமூகத்தை சேர்ந்த கிராமத்து பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார்.. அதன்படியே லட்சுமி அம்மாளை திருமணம் செய்தார்.. இன்றுவரைக்கும் சந்தோஷமாக இருக்கிறார்கள்..
தன்னுடைய மகன்களுக்கும், தன் சமூகத்தை சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்து வைக்க நினைத்தார்.. ஆனால் சூர்யா, ஜோதிகாவை காதலிக்க துவங்கிவிட்டார்.. மீடியாவில் விஷயம் வெளிவந்துவிட்டது.. இந்த காதல் வரவேற்கத்தக்கது என்று பத்திரிகையாளர்கள் முதல் ரசிகர்கள் வரை ஏற்றுக் கொண்டார்கள்.. ஆனால் சிவக்குமார் சாருக்கு பிடிக்கவில்லை.. பலவகையில் சொல்லி பார்த்தும் சூர்யா கேட்கவில்லை..
மகள் - மருமகள்
நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் சாரிடமும் வந்து முறையிட்டார்.. அப்போதும் பலனில்லை.. இறுதியில் சூர்யா - ஜோதிகா திருமணம் நடந்தது.
பிறகு ஒருமுறை சிவக்குமார் பேசும்போது, நானே தேடியிருந்தாலும் இப்படியொரு பெண் கிடைத்திருக்க மாட்டார்.. மருமகள் என்பதைவிட மகள் என்றே சொல்லலாம்: என்று ஜோதிகாவை பாராட்டியிருந்தார்.
மீண்டும் நடிக்க வந்ததிலிருந்துதான் கருத்து வேறுபாடு வந்திருக்கிறது.. மும்பையில் ஜோதிகாவின் 2 அக்கா, அம்மா, சகோதரர் என அனைவரும் இருக்கிறார்கள்..
வெப்சீரிஸ் வாய்ப்பு
கணவருக்காக மும்பையிலும் வாய்ப்பு தேடினார் ஜோதிகா.. ஆனால் இந்தி படங்களில் நடிக்க வேண்டுமானால், மும்பையிலேயே இருந்தால்தான் வாய்ப்பை பெற முடியும். எனவே அங்கேயே தங்கியிருந்து கணவருக்காக வாய்ப்பு தேடினார்.. ஆனால், ஜோதிகாவுக்கு நடிக்க வாய்ப்பு வந்துவிட்டது.
அப்போது காஸ்ட்யூம் சர்ச்சை வெடித்தபோதுதான், சிவக்குமார் சத்தம் போட்டுள்ளார்.. எதுக்கு வெப்சீரிஸில் நடிக்கணும்? இன்னும் சம்பாதித்து என்ன செய்ய போறீங்க?
என்றெல்லாம் கண்டித்ததாக தெரிகிறது.
ஆட்டுக்கார அலமேலு
ஆனால், சிவக்குமார் சார், தான் நடிக்கும்போதே மிக குறைவான சம்பளத்தைதான் வாங்கினார். ஆட்டுக்கார அலமேலு நன்றாக ஓடியிருக்கிறது, இனி உனக்கு சம்பளம் 50 ஆயிரம் என்றாராம் சின்னப்பா தேவர் அதற்கு சிவக்குமார், 50 வேணாம், 30 ஆயிரமே போதுமே என்றாராம்.. கடைசிவரையிலும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தவில்லை.. பணத்தின்மீது பேராசை இல்லாதவர் சிவக்குமார்.
சற்று கோபக்காரர்.. அடிக்கடி சிவக்குமார் சொல்வார், "என் மனைவி என்னை தாங்கி கொண்டதற்கு, அடுத்த ஜென்மத்தில் அவர் எனக்கு தாயாக பிறந்து, நான் அவருக்கு சேவை செய்யணும்" என்பார்.
மும்பையில் வெப்சீரிஸில் ஜோதிகா நடித்ததால், குடும்பத்துடன் அங்கேயே தங்கிவிடுவார்களோ? பேரப்பிள்ளைகளை அடிக்கடி பார்க்க முடியாமல் போய்விடுமோ? என்று சிவக்குமார் வருத்தப்பட்டார்.
ஈசிஆர் வீடு
ஆனால், ஒரு வருடம்தான் ஜோதிகா மும்பையில் தங்கியிருந்ததாக தெரிகிறது.. அடையாறு வீடு இருந்தாலும், ஈசிஆரில் புதிய வீடு கட்டியிருக்கிறார்.. அடையாறு வீடு அருகில் மெட்ரோ கட்டிவருவதால், எளிதாக சென்று வரமுடியவில்லை என்பதால், ஈசிஆர் வீட்டுக்கு சென்றுள்ளார்களா தெரியாது.
ஆனால், பிள்ளைகள் வளர்ந்து தனியாக செல்வதால், குடும்பத்துடன் மனம் விட்டு பேசலாம்,.. படங்களையும் இனி அடுத்தடுத்த தயாரிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள்.. இது சம்பந்தமான படகம்பெனி வைக்கவும் இடம் தேவைப்படும்.. எனவே, சிவக்குமார் குடும்பத்திலிருந்து பிரிந்து செல்ல வாய்ப்பில்லை.. சிவக்குமார் சாரும் தன்னுடைய பேரன், பேத்தியை விட்டுட்டு இருக்க மாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications