Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்திரமுகி ஓவியத்தில் அந்த ஹீரோயின் முகம்..சிம்ரனை சீண்டியவர் ஜோதிகா? ராதிகா போல நடிக்கணும்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் எந்த கேரக்டர் தந்தாலும் நடிக்க வேண்டும்.. மேக்கப்பை வைத்து தங்களை இளமையாக காட்டிக் கொள்ளவில்லையா? ஒரிஜினல் வயதுடன் யாரும் இங்கு நடிப்பதில்லையே? கேரக்டர் பற்றி குறையாக கமெண்ட் செய்வதை பார்த்தால், இன்னும் நடிப்பில் முதிர்ச்சி அடையவில்லை என்று தெரிகிறது. திருடன் சைக்கோ, வக்கீல், போலீஸ்., என எந்த கேரக்டராக இருந்தாலும் அதை நடிப்பில் கொண்டு வருவதே நடிப்பு என்று சிம்ரன் பேசிய பேச்சு குறித்து கருத்து கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா.

சமீபத்தில் ஒரு விழாவில் சிம்ரன் பேசியபோது, "என்னுடன் சம காலகட்டத்தில் நடித்த நடிகைக்கு ஒருமுறை, உங்களை அந்த கேரக்டரில் பார்த்தது சர்ப்ரைஸாக இருந்தது என மெசேஜ் அனுப்பினேன். உடனே அவர், "ஆண்ட்டி ரோலில் நடிப்பதைவிட இந்த ரோல் பெஸ்ட்" என்று ரிப்ளை பண்ணியிருந்தார்..

Television Jyothika Radhika

இதை பார்த்ததுமே ஷாக்காகி விட்டேன். 20, 25 வயதுக்காரர்களுக்கு அம்மாவாக நடித்தால் தவறா என்ன? கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அம்மா வேடம் ஏற்று நடித்தேன். என்னை பொறுத்தவரை டப்பா ரோல்களில் நடிப்பதைவிடவும் ஆண்ட்டி ரோலில் நடிப்பது மேல்" என்றார்.

கார்ட்டெல் வெப்சீரிஸ்

சிம்ரனின் இந்த பேச்சு பெரிய சலசலப்பை தந்துவிட்டது. சிம்ரன் சொல்வது யாரை? ஜோதிகாவா? என்ற யூகம் கிளம்பியது.. நெட்டிசன்கள் பலரும், டப்பா கார்ட்டெல் என்ற வெப்சீரிஸில் நடித்தது ஜோதிகா என்பதால், டப்பா என்று அவரைதான் சொல்வதாகவும் கமெண்ட் பதிவிட்டனர்..

இதுகுறித்துதான், Vaagai Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "சிம்ரன் -ஜோதிகா இவர்கள் இருவருக்குள்ளும் நீண்ட காலமாகவே பிரச்சனை இருந்து வருகிறது. சந்திரமுகி கேரக்டருக்கு முதலில் நடிக்கவிருந்தது சிம்ரன்தான். சந்திரமுகி ஓவியம்கூட சிம்ரனை மையப்படுத்திதான் வரையப்பட்டிருக்குமே, தவிர, ஜோதிகாவின் முகஜாடை சிறிதும் இருக்காது.

கர்ப்பம் - சந்திரமுகி

டைரக்டர் பி.வாசு சிம்ரனை அணுகி கேட்டதற்கு, தான் கர்ப்பமாக இருப்பதால், சந்திரமுகி பட கிளைமாக்ஸில் தன்னால் டான்ஸ் ஆட முடியாது என்று சிம்ரன் திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். நாங்கள் எவ்வளவோ சிம்ரனிடம் நடிக்க கேட்டோம், இறுதியில் சிம்ரனின் "தாய்மைதான் வென்றது" என்று பி.வாசுவே பல பேட்டிகளில் கூறியிருந்தார். அதற்கு பிறகுதான்,ஜோதிகாவை அதில் நடிக்க வைத்திருந்தார்கள். ஆனால், சிம்ரனைவிட ஜோதிகா நன்றாக நடித்திருக்கிறார் என்று பலரும்கூட அப்போது சொன்னார்கள்..

தற்போது சிம்ரனை பேசியதுகூட ஜோதிகாவாகத்தான் இருக்கும் என்று யூகித்து சொல்ல காரணமே இதுதான்.. நெருப்பில்லாமல் புகையாது.. இருவருமே சமகால நடிகைகள்தான்.. தலைக்கணமான பதிலை தருவது ஜோதிகாதான் என்பதால், அவரையே அனுமானிக்கிறார்கள்.

பொதுவாக, ஜோதிகா உட்பட சிவகுமார் குடும்பத்தினர் பேசுவதும் சர்ச்சையைதான் வருகிறது.. ஃபேமிலி ஸ்டைலே அப்படியாகிவிட்டது.. விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது என்றால், அதற்கு தீனி போடுவது போல பேசக்கூடாது.

விமர்சனங்கள்

அதேபோல, சிம்ரன் திருமணமாகிவிட்டு சென்றதால் அவர் நடிக்க வேண்டிய பல படங்கள், ஜோதிகாவுக்கு கிடைத்தன.. அதனால்கூட, ஜோதிகாவின் பெயர் முணுமுணுக்கப்படுகிறது. எனினும், சிம்ரனே அந்த நடிகையின் பெயரை வெளிப்படையாக சொல்லியிருக்கலாம்.. இதனால் மற்ற நடிகைகளையும் தேவையில்லாமல் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

ஆண்ட்டி ரோல் தரம் குறைவானதா? பாட்டி ரோல் என்றாலும் அது நடிப்புதானே? விபச்சாரியாகவும் நடிக்கிறார்கள்.. நடிப்புதானே இங்கே முக்கியம்.

முரளி நடித்த இதயம் படத்தின் ஷூட்டிங் பீச்சில் நடந்தபோது, நான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். அதில், 8ம் வகுப்பு படிக்கக்கூடிய 2 பள்ளி மாணவிகளை வைத்தும் ஷூட்டிங் எடுக்கப்பட்டது. அந்த சீன் முடிந்ததுமே, அந்த 2 மாணவிகளும் தங்களது காஸ்ட்யூம் மாற்றிக் கொண்டு கிளம்பி செல்லும்போது, வயதான பெண்கள் போல இருந்தார்கள். எனவே, மேக்கப் இங்குதான் முக்கியம்..

அசத்தும் ராதிகா

அதுபோல, இந்த நடிகைகளும் மேக்கப்பை வைத்து தங்களை இளமையாக காட்டிக் கொள்ளவில்லையா? ஒரிஜினல் வயதுடன் நடிப்பதில்லையே? இப்படியெல்லாம் கேரக்டர் பற்றி கமெண்ட் செய்வதை பார்த்தால், இவர்கள் இன்னும் நடிப்பில் முதிர்ச்சி அடையவில்லை என்று தெரிகிறது. திருடன் சைக்கோ, வக்கீல், போலீஸ்., என எந்த கேரக்டராக இருந்தாலும் அதை நடிப்பில் கொண்டு வரணும்.

சின்ன கேரக்டர் என்றாலும், அதில் நடித்து பெயர் வாங்க வேண்டும். பிரகாஷ் ராஜ் அப்படி நடித்து மேலே உயர்ந்தவர்தான்.. ராதிகாவுக்கு பாட்டி உட்பட எந்த ரோல் தந்தாலும் தூக்கி சாப்பிட்டுவிடுவார்.. எனவே, சிம்ரனை கிண்டல் செய்தது எந்த நடிகையாக இருந்தாலும்சரி, தங்களது கருத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+