நம்ம முருகனை ஞமஞமஞமன்னு நடுரோட்டில் புலம்ப விட்ட சந்தியாவா இது.. அடடா!
சென்னை: காதல் சந்தியாவும் ஒரு வழியாக சீரியல் உலகுக்குள் புகுந்து விட்டார். சன் டிவியின் பாப்புலரான சீரியலான கண்மணி சீரியலில் அவர் நடிக்கிறார்.
அறிமுகமான முதல் படத்திலேயே டாப்பர் டூப்பர் ஹிட்டாகி ஜொலிக்கும் நடிகர்கள் சிலர். அந்த வகையில் சந்தியாவும் முதல் படத்திலேயே கொடிகட்டிப் பறந்தார். அதன் பிறகும் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், பின்னர் மார்க்கெட் சரிந்து காணாமல் போய் விட்டார்.
தற்போது திடீரென சீரியல்களில் காலடி எடுத்து வைத்துள்ளார். காதல் சந்தியாவின் சொந்தப் பெயர் ரேவதி ஆகும். சினிமாவுக்காக சந்தியான என பெயர் மாற்றி நடித்து தவந்தார்.

காதல் நாயகி சந்தியா
இவரது முதல் படமான காதல் படத்தில் இவர் செம ஹிட் ஆனதால் இவரது சந்தியா பெயரோடு காதல் சந்தியா என்று மாறிவிட்டார் .தமிழ் மலையாளம் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்திருந்தாலும் 2004ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான காதல் திரைப்படத்தில் அறிமுகமாகி அந்தப் படத்தின் மூலம் இவருக்கு பிலிம்பேர் விருது மற்றும் தமிழக அரசின் சிறப்பு விருதினையும் பெற்றிருக்கிறார்.

அம்மாவால் வந்த நடிப்பு
சென்னையில் பிறந்து இருந்தாலும் அவரது தந்தை அஜித் ஐஓபிஇன் ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது அம்மா ஒரு அழகு கலை நிபுணர் இவரால் தான் இவருக்கு நடிப்பதில் ஆர்வமே வந்ததாம். சின்ன வயதிலிருந்தே ஸ்கூல் காம்பெடிஷன் எல்லாம் கலந்து கொண்டு பட்டையை கிளப்பி இருக்கிறார். இவருக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார் இவரது குடும்பத்தில் சந்தியா தான் ரொம்பவும் செல்லமான பொண்ணாம்.

சரிந்து போன மார்க்கெட்
காதல் படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு முதல் படத்தில் கிடைத்த வெற்றி பிறகு நடித்த படங்களில் அவ்வளவாக கிடைக்கவில்லை. டிஷ்யூம், கூடல்நகர், மகேஷ் சரண்யா மற்றும் பலர், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் இப்படி பல படங்களில் நடித்திருக்கிறார், இதில் டிஷ்யூம் படத்திற்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்திருக்கிறது.

நல்ல மனசு
அது போல மஞ்சள் வெயில் எனும் படத்தில் இவர் நடித்து அதில் ஒரு பாடலையும் பாடியுள்ளார், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குருவாயூரில் இவரது திருமணம் நடைபெற்றது. அந்த நேரத்தில் சென்னையில் பெரும் வெள்ளம் வந்தால் மக்கள் எல்லாரும் பெரும் இழப்புகளையும் கஷ்டங்களையும் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் இவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சேர்த்து வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண பணிக்கு கொடுத்துவிட்டார்.

இப்போது தாய்
இது அந்த நேரத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. தற்போது இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் இவர் சீரியலில் நடிக்க உள்ளார் என்ற செய்தி பரவியது. அடடா என்று பலரும் ஆச்சரியப்பட்ட நேரத்தில்தான் இப்போது இவர் கண்மணி சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார். பிரபலமான சீரியல் மூலம் சின்னத்திரைக்கு காலடி எடுத்து வைத்து வந்துள்ளார் இந்த காதல் நாயகி சந்தியா.

கண்மணியில் காதல் நாயகி
சன் டிவியில் எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் முன்னணி தொடராக கண்மணி சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் இவர் ஒரு நடிகையாக அறிமுகமாகிறார். ஊரடங்கு நேரத்தில் பல நடிகைகள் சீரியலில் களமிறங்க தொடங்கி கொண்டிருக்கும் போது இவரும் இதில் காலடி எடுத்து வைத்திருப்பது வைரலாக பரவி வருகிறது.

அறிமுகமே அட்டகாசம்
அவர் அறிமுகமாகும் முதல் எபிசோடில் அவருக்கு தாரை தப்பட்டை ரோடு கரகாட்டம் எல்லாம் வைத்தும் திருவிழாவைப் போல வரவேற்பு வைத்திருக்கிறார்கள். இந்த சீரியல் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு சீரியல்களில் சந்தியா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியாகவே ஒரு சோலோ ஹீரோயினாக இவரைப் போட்டும் சீரியல் வரக் கூடும் என்றும் சொல்கிறார்கள். கண்மணியில் இவருக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அது அமையலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications