சர்ச்சைக்கு பிறகு பட்டம் பெற்ற கஜோலின் மகள்.. தாயாக மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து
சென்னை: பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர ஜோடிகளான அஜய் தேவ்கன் மற்றும் கஜோலின் மகள் நைசா தேவ்கன், சுவிட்சர்லாந்தின் மாண்ட்ரீக்ஸ் நகரில் உள்ள க்ளியோன் உயர்கல்வி நிறுவனத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை நடிகை கஜோல் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாயின் நெகிழ்ச்சி
மாண்ட்ரீக்ஸ் ஏரிக்கரையின் அழகிய பின்னணியில் நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவில், நைசா ஊதா நிற உடையில் பட்டம் பெற்றுள்ளார். நீல நிற புடவையில் வந்திருந்த தாய் கஜோல், தனது மகளின் சாதனையைப் பார்த்து உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தார். அஜய் தேவ்கன் மற்றும் மகன் யுக் தேவ்கன் ஆகியோர் நேர்த்தியான உடையில் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்த வீடியோவை வெளியிட்ட கஜோல், "இது மிகவும் சிறப்பான தருணம், பெருமையாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். தனது மகள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
நைசாவின் கடந்த கால சர்ச்சை
நைசா தேவ்கனுக்கு நடிப்பின் மீது விருப்பம் இல்லை என்று முன்னதாகப் பேட்டி அளித்த கஜோல் தெரிவித்திருந்தார். தனது குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், சமீபத்தில் நைசா தனது பிறந்தநாள் பார்ட்டியை முடித்துவிட்டு வெளியே நடக்க முடியாதபடி குடிபோதையில் தள்ளாடிக்கொண்டே நடந்து வந்து காரில் ஏறிச்சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இது இணையவாசிகள் மத்தியில், "பிரபலங்களின் குழந்தைகள் மது அருந்துவது, போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவது எல்லாம் சாதாரணமாகிவிட்டது. நடிகர்களின் கலாச்சாரமே வேறு, தினமும் பார்ட்டி, பப் என போனால் குழந்தைகளும் அதைத்தான் செய்வார்கள்," என்று பல விமர்சனங்களை எழுப்பியதுடன், நைசாவின் பெற்றோரான கஜோல் மற்றும் அஜய் தேவ்கனையும் கடுமையாக விமர்சித்தனர். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, தற்போது நைசா தனது பட்டப்படிப்பை முடித்திருப்பது ரசிகர்களிடையே ஆறுதலையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கஜோலின் திரை வாழ்க்கை மற்றும் குடும்பம்
பாலிவுட்டில் கொடி கட்டிப்பறந்த நடிகை கஜோல், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், அஜய் தேவ்கன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழில் அரவிந்த் சாமி, பிரபுதேவா நடித்த 'மின்சார கனவு' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடல் இன்றும் பலரின் விருப்பமான பாடலாக உள்ளது. 'மின்சார கனவு' மட்டுமல்லாமல், தனுஷ் நடித்த 'விஐபி 2' படத்திலும் கஜோல் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கஜோல், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு 22 வயதில் நைசா என்ற மகளும், 14 வயதில் யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளனர். பிரபலங்களின் குழந்தைகள் என்பதால், இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாவது வழக்கம்.
கஜோல் பெற்ற விருதுகள்
தனது சிறப்பான நடிப்புத் திறமைக்காக கஜோல் பல தேசிய விருதுகளையும், ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார். குறிப்பாக, 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே', 'குச் குச் ஹோதா ஹை', 'கபி குஷி கபி கம்', 'ஃபனா', 'மை நேம் இஸ் கான்' போன்ற படங்களில் இவரது நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது.
தற்போதைய படங்கள்
கஜோல் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், 'சலாம் வெங்கீ' (Salaam Venky) என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், 'தோ பட்டி' (Do Patti) என்ற நெட்ஃபிளிக்ஸ் படத்திலும், 'சர்வாஸ்ட்ரா' (Sarvastra) என்ற படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து, ஓ.டி.டி தளங்களிலும் தனது தடத்தைப் பதித்து வரும் கஜோல், ஒரு அழுத்தமான கதைக்களம் கொண்ட கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications