காலில் விழுந்து கேட்கிறேன்.. யாழ்ப்பாணத்தில் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்ட கலா மாஸ்டர்.. என்னாச்சு?
சென்னை: உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன், தயவு செய்து அமைதியாக இருங்கள் என இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ரசிகர்களிடம் நடன இயக்குநர் கலா மாஸ்டர் மன்றாடி கேட்டார்.
நடிகை ரம்பா இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இந்திரனை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஐரோப்பாவில் வாழும் இந்திரன், யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் நோர்தன் யூனி என்ற பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டன.

இந்த பல்கலைக்கழகத்தை விளம்பரப்படுத்த ஹரிஹரன் தலைமையில் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நடன கலைஞர் கலா மாஸ்டர் தெரிவித்திருந்தார்.
நிகழ்ச்சியில் பங்கு பெற நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் யோகி பாபு, ரெடிங்டன் கிங்ஸ்லி,டிடி உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் ரசிகர்களுக்கு இலவசம் என்றாலும் விஐபிக்களுக்கு டிக்கெட் வசூலிக்கப்பட்டது.
அந்த பணத்தை கல்விக்கு செலவிடுவது என ரம்பா கணவர் முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஜரூராக தொடங்கியது. அப்போது விஐபிக்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு தடுப்புகளை தாண்டி சில இளைஞர்கள் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களை போலீஸார் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.
அது போல் நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்ய அமைக்கப்பட்ட மேடைகளிலும் ஏராளமான ரசிகர்கள் பாதுகாப்பற்ற முறையில் நின்றுக் கொண்டனர். அப்போது கலா மாஸ்டர் "உங்களை பார்க்கத்தானே நாங்கள் வந்துள்ளோம். ஒத்துழைப்பு தாருங்கள். உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். எல்லாரும் கொஞ்ச நேரத்திற்கு பொறுமையாக இருங்கள் என கோரியும் அங்கிருந்தவர்கள் கேட்கவில்லை. இதனால் இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications