KPY பாலா பண்ணுனது தப்பு! அந்த வண்டியில் இருக்கும் பிரச்சனை! ஆதவன் வெளியிட்ட ஆதாரம்! அடுத்த பஞ்சாயத்து
சென்னை: சின்னத்திரை ரசிகர்களுக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர் பாலா. தனது அசாத்தியமான பஞ்ச், கவுண்டர்களால் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். அவருடைய தனித்துவமான திறமையை கண்டறிந்த விஜய் டிவி, அவரை தொடர்ந்து அனைத்து ரியாலிட்டி ஷோக்களிலும் சப்போர்ட் செய்தது. ஒரு கட்டத்தில் பாலா இல்லாத ரியாலிட்டி ஷோ பார்க்கவே முடியாது என்ற நிலை உருவானது. ஆனால், அவர் செய்த சமூக சேவைகள்தான், அவரை மக்களின் மனசுக்கு நெருக்கமாக கொண்டு சென்றது.

பாலாவின் வளர்ச்சி
சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் கிடைத்த வருமானத்தை, பாலா தனக்காகச் செலவு செய்யவில்லை. மக்களுக்காக, பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வந்தார். வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைத்தது, வயதில் பெரியோர்களுக்கு உதவுவது, மருத்துவமனைக்குச் செல்ல முடியாதவர்களுக்கு உதவுவது எனப் பல சேவைகளைச் செய்தார். முக்கியமாக, மலைவாழ் பகுதி மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இவருடைய இந்தப் பயணத்தைப் பார்த்து, சிலர் இவரை கர்ணன் பாலா என்று அழைக்க ஆரம்பித்தனர்.
இவருடைய இந்த நல்லெண்ணம், இவருக்கு வெள்ளித்திரையில் ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுத்தது. இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சென்டிமென்ட், எமோஷனல் டிராமா கதையில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
சர்வதேச கைக்கூலி சர்ச்சை
சினிமாவிலும், சமூக சேவையிலும் பிஸியாக இருந்த பாலா, திடீரெனப் பல சர்ச்சைகளில் சிக்கினார். இவரைப் பற்றி, "இவர் சர்வதேச கைக்கூலி... இவரால் தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்து..." என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வதந்திகள் நாளுக்கு நாள் பேசும் பொருளாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. இப்படிப் பரப்பப்படும் வதந்திகள் பற்றி, பாலாவின் நெருங்கிய நண்பரும், கே.பி.ஒய் புகழ் ஆதவன், தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆதவன் பேசும்போது, "பாலா தொடர்ந்து நல்லது செய்து கொண்டு வருகிறான். ஆனால், அவன் மீது தொடர்ந்து அவதூறு வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதற்கான ப்ரூஃப் இல்லை. அது வந்தால் தான் உண்மை வெளியே வரும். என்னைப் பொறுத்தவரை, பாலா ஒரு நல்ல பையன் தான்" என்று கூறினார்.
ஆதவன் கேட்ட ஆதாரம்
பாலாவுக்கு ஆதரவாகப் பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், ஆதவன் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. பாலா வாங்கி கொடுத்த வண்டி எதுவும் புதுசு கிடையாது, எல்லாமே யூஸ்டு வெஹிக்கிள் தான். அதன் மீது தற்போது புகார் வருகிறது. அதற்கான சரியான ஆவணங்கள் இருந்தால், பாலாவை கேட்டுத்தான் ஆகணும்" என்று கூறினார்.
மலைவாழ் மக்களுக்காக பாலா கொடுத்த ஆம்புலன்ஸில் இருந்த நம்பர் வைத்து தான் முதலில் சர்ச்சை கிளம்பியது. ஆனால் அந்த நம்பர் தப்பு அதில் இரண்டு D இல்லை ஒரு D தான் என்று பாலா சொன்னார். அந்த நம்பரை செக் பண்ணி பார்க்கும்போது அது 1990 மாடலில் இருக்கிறது. அப்பாடி பார்க்கும்போது அந்த வண்டி வாங்கி எத்தனை வருடம் ஆகிவிட்டது என்று நீங்களே கணக்கு போட்டு பாருங்கள். சாதாரணமாக நம்ம ஊரு சாலைக்கு ஒரு வண்டி வாங்கினால் 8 வருடங்களுக்கு மேலே அது சரிப்பட்டு வராமல் போய்விடுகிறது. ஆனால் இத்தனை வருடம் பழமையான வண்டியை பாலா வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதுவும் ஆம்புலன்ஸ் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எப்படி பழைய பொருளை வாங்கி கொடுப்பது சரியா வருமா என்று எனக்கு தெரியவில்லை.
அதுபோல இன்னொரு ஆம்புலன்ஸ் நம்பரை செக் பண்ணி பார்க்கும்போது அது 2016 வண்டியாக இருக்கிறது. அது ஒரு ஓனர் தான் காட்டுகிறது. பாலா பணம் கொடுத்து வாங்கி இன்னொருவருக்கு கொடுத்திருந்தால் இரண்டாவது ஓனர் பெயர் மாறி இருக்க வேண்டும் ஆனால் அப்படி மாறாமலேயே இருக்கிறது இது பற்றி ஆதாரத்தை பாலா வெளியிட வேண்டும் என்று ஆதவன் கூறியிருக்கிறார்.
மேலும் ஆதவன் பேசும்போது, "மூத்த பத்திரிகையாளர் உமாபதிக்கு பதிலடி கொடுத்து பாலா ஒரு வீடியோவை வெளியிட்டான். அது ஒருமையில் பேசியது போல் இருந்தது. பாலா அப்படிச் செய்திருக்கக் கூடாது. அவர் வயதில் பெரியவர். அது ரொம்ப தப்பு, பாலா அப்படிப் பேசியிருக்க கூடாது. அதைத் தவிர்த்திருக்கலாம்" என்று ஆதவன் கண்டிப்புடன் பேசினார்.
பிரஸ் மீட்டில் கூட பாலா தவறாகப் பேசிவிட்டார் என்று ஆதவன் கேள்விப்பட்டாராம். "அப்படிப் பண்ணக் கூடாது, அது தப்பு. இளம் வயது என்றாலும் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். அவன் மீது தவறு இருக்கும்பட்சத்தில், பாலாவுக்கு நான் எப்போதும் சப்போர்ட் செய்ய மாட்டேன். ஒரு அண்ணனாக, 'பாலா நீ நல்லவன்' என்று சொல்ல மாட்டேன். அவனை அங்கே உட்கார வைத்து விடுவேன். நாளைக்கு ஏதாவது பிரச்சனை என்றால், கண்டிப்பாக எனக்கும் சில கமெண்ட்டுகள் வரும்" என்று ஆதவன் வெளிப்படையாகப் பேசினார்.
"பாலா செய்யும் உதவிகள் அனைத்தும், அவனுடைய சொந்த விருப்பத்தின் பெயரில் தான் செய்கிறான். வேறு ஏதோ நோக்கம் இருக்கிறதா என்பது அவனுக்கு தான் தெரியும். பாலா உதவி செய்யும்போது, இந்த மாதிரி வீடியோ எடுத்துத் தாருங்கள் என்று ஏதோ ஒரு சேனல் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் தான் இப்போது யார் என்று தெரியவில்லை. அந்தச் சேனல் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்?" என்று ஆதவன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பாலா செய்த நல்ல காரியங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவரது பேச்சு, நடவடிக்கைகள் என அனைத்தும் இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. அவரது நண்பரே இப்படிப் பேசியுள்ளது, சர்வதேச கைக்கூலி வதந்திகளுக்கு ஆதாரமாக இருக்குமோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. உண்மை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications