விவசாயிகளுக்கு உதவி செய்த KPYபாலா.. பொது இடத்தில் சொன்ன வார்த்தை.. இது பல பேருக்கு பாடம்
சென்னை: பலர் சினிமாவில் நாங்கள் விவசாயத்தை காக்கிறோம் என்று சொல்லி ஹீரோயிசம் காட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாலா கலக்கி இருக்கிறார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பாலா மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்திருந்தார். இப்போது விவசாயிகளுக்கு தன்னால் முடிந்த விவசாய உபகரணங்கள் வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதற்கு அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பாலா என்ன சொல்கிறார் என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
ஒரு சில நடிகர்கள் பொதுமக்களிடம் கொஞ்சம் பிரபலமாகிவிட்டால் உடனே youtube சேனல் தொடங்கி வீடியோக்கள் போட்டு விளம்பரம் செய்து சம்பாதித்து கொண்டிருக்கின்றனர். அதுபோல பலர் சினிமாக்களில் மட்டும் தான் ஹீரோயிசம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் தங்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை என்பதை பல நேரங்களில் நிரூபித்து இருக்கிறார்கள்.
ஆனால் விஜய் டிவி பாலா செய்திருப்பது மிகப்பெரிய விஷயம். பெரிய நடிகர்கள் கூட இது போன்ற சேவைகளை செய்வதில்லை. அது குறித்து ரசிகர்களின் மத்தியிலும் பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தான் பாலா பிரபலம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அவரை அதிகமானோர் வெட்டுக்கிளி பாலா என்று கலாய்ப்பதும் உண்டு. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் போட்டியில் இவர் ஒரு கோமாளியாக கலந்து கொண்டு பிரபலம் அடைந்தார்.
அதற்குப் பிறகு தான் வாங்கும் சம்பள பணத்தில் பல ஆதரவற்றவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் அதிகமாக சம்பளம் வாங்காத போதும் தனக்கு கிடைக்கும் சின்னத்தொகையில் இவர் சேவை செய்து வருவது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. இந்த நிலையில் அறந்தாங்கி பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து சமீபத்தில் ஈரோடு சத்தியமங்கலம் மலை கிராமத்தில் இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது கூட மலை கிராம மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்வேன் என்று சொல்லி இருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 5 லட்சம் ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் வழங்கி இருக்கிறார். மேலும் இந்த ஆம்புலன்ஸ் 24 மணி நேரம் இயங்கும் என்றும் சொல்லியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் 125 விவசாயிகளுக்கு மண்வெட்டி மற்றும் கடப்பாரை போன்ற வேளாண் உபகரணங்களையும் தன்னுடைய சொந்த செலவில் வழங்கி இருந்தார். இது குறித்து அவர் நிகழ்ச்சியில் பேசும் போது தன்மீது எவ்வளவோ விமர்சனங்கள் வந்தாலும் இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்வேன். நாம் கஷ்டப்பட்டு உழைக்கும் சம்பளத்தில் பலருடைய சந்தோசத்தை பார்க்கும்போது அதில் கிடைக்கும் போதை வேறு எதிலும் கிடைக்காது என்று பேசி இருந்தார். இது பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. அதுபோல இதை பார்த்தாவது கோடிகளில் சம்பளம் வாங்குபவர்கள் இல்லாத ஏழைகளுக்கு உதவி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications