Kalyana veedu serial: அச்சச்சோ அபத்தமான வசனம் ... இப்படியுமா எழுதுவாங்க?
சென்னை: திருமுருகன் சீரியலான கல்யாண வீடு சீரியலில் புருஷனோட சேர்ந்துட்ட ஸ்வேதாவுக்கு பிரச்சனையாம்.
அதனால், மறுபடியும் கோபி ஸ்வேதாமேல மேல பரிதாபப்பட்டு வாழ்க்கை குடுக்கறேன்னு போயிருவாரோன்னு பயம்னு...
சூரியாவோட அப்பா வசனம் பேசறாருங்க...இது அபத்தமா இல்லை?

கல்யாண வீடு சீரியல்
சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் ஸ்வேதாவின் புருஷன் 5 வருஷமா காணாமல் போயிடறார். ஏதோ கூடவே இருக்கும் கோபி மேல ஆசை வருது. ஸ்வேதாவின் அண்ணனுக்கும் கோபி மாதிரி ஒருத்தன் கிடைச்சா தங்கச்சி வாழ்க்கை நல்லாருக்குமேன்னு தோணுது. கல்யாணம் பண்ணி வச்சுடலாம்னு நினைக்கறார்.

ஸ்வேதா புருஷன்
காலப் போக்கில் ஸ்வேதா புருஷன் திரும்பி வந்துடறார். அவளும் புருஷன்தான் அரசன்னு நினைச்சு ஏத்துக்கிட்டு வாழும்போது கலா அண்ட் சிஸ்டர்ஸ் கோபியுடனான ஸ்வேதாவின் பழக்க வழக்கத்தை தப்பா ஒண்ணுமே நடக்கலை ஆனா இட்டுக்கட்டி சொல்லிடறாங்க. அதனால் ஸ்வேதா குடும்பத்தில் குழப்பம்.

கேவலமான டயலாக்
கோபிக்கு இந்த விஷயம் தெரிய வரும்போது கலா அன்ட் சிஸ்டர்ஸை கழிவி கழுவி ஊத்தறார். இதை கேட்டுகிட்டு இருந்த சூர்யாவின் அப்பா என்ன வருத்தப் படறார்னா... கோபி இளகிய மனம் படைச்சவராம்.. ஸ்வேதா புருஷன் அவளை விட்டுட்டு மறுபடியும் போயிட்டாருன்னா.. அவளுக்கு வாழ்க்கை குடுக்கறேன்னு கோபி மறுபடியும் கிளம்பிட்டா மகள் சூரியா வாழ்க்கை என்னாவது என்று வசனம் பேசுகிறார்.

இளகிய மனம்
ஏங்க உங்களுக்கு இளகிய மனம் இருந்து நீங்க ஆயிரம் பெண்களுக்கு வாழ்க்கை குடுக்க தயாராக இருக்கலாம். புருஷனை விட்டுட்டு உங்களை ஏத்துக்க எல்லா பெண்களும் தயாரா இருப்பாங்களா?வசனம் எழுதும்போது பார்த்து எழுத மாட்டீங்களா? குடும்ப கதைக்கு இப்படித்தான் அபத்தமா வசனம் எழுதுவீங்களா?

திருமுருகனுக்கு உரைக்காது
தனது சீரியலில் எந்த தவறை எப்படி சுட்டிக் காட்டினாலும் திருமுருகனுக்கு உரைக்காது. கண்ணு தெரியாது காது கேட்காது என்று பயணிப்பார். கலா அண்ட் சிஸ்டர்ஸ் கதாபாத்திரத்தை கேவலமா கொண்டு போறார். எல்லாத்துக்கும் சேர்த்து மறுபடியும் சானல் மூலமா மன்னிப்பு கேட்க சொல்லும்போது கண்களை சிமிட்டிக்கிட்டே மன்னிப்பு கேட்பார்.
எத்தனை முறை சுட்டிக் காட்டியும் இன்னும் அடுத்தவன் பொண்டாட்டி ஸ்வேதாவோட கோபி இருக்கும் போஸ்டரை மாற்றாதது ஏன்?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications