Indian 2: ஓடிடி விதிகளை மீறியது இந்தியன் 2? அடுத்த பஞ்சாயத்து வந்துடுச்சு.. இப்படி ஒரு காரணமா?
சென்னை: இயக்குனர் சங்கர் இயக்கிய கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன நிலையில் அப்போதிருந்தே இந்த படத்திற்கு பெரும் பிரச்சனைகள் வந்த நிலையில் இப்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் நிலையில் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் எதிர்ப்பையும் சம்பாதித்து இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமா வரலாற்றையே புரட்டிப்போட்ட இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்த படத்தில் முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்தில் இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. ஆனால் இந்த படம் வெளியான பிறகு எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை.

இந்தியன் திரைப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு மாதத்திற்கு மேல் ஆகி இருக்கும் நிலையில் நெட் பிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்தியா மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் சார்பில் இந்தியன் 2 படம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதில் இந்தியா மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது ஒரு படம் வெளியான பிறகு எட்டு வாரங்கள் கழித்து தயாரிப்பாளர்கள் ஒடிடியில் வெளியிட வேண்டும். இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற விதிகள் உள்ளது. அதோடு இந்த வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் நாட்டின் டாப் மல்டிபிளக்ஸ் சைனாக இருக்கும் பிவிஆர்ஐ மேக்ஸ், ஐநாக்ஸ், சினிபொலீஸ் ஆகியவற்றின் வெளியீட்டைப் பெற மாட்டார்கள்.
அந்த வகையில் இந்தியன் 2 பட தயாரிப்பு நிறுவனம் மேற்கொள்ளப்பட்ட வழிகாட்டுதலுக்கு ஒப்புக்கொண்டு மல்டிபிளக்ஸில் வெளியிடப்பட்டது. ஆனால் இந்தியன் 2 ஹிந்தி இப்போது netflix ott-யில் ஸ்டீமிங் ஆவது கண்டு மல்டிபிளக்ஸ் சங்கம் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். காரணம் ஓடிடி வெளியிடுவதற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட எட்டு வாரங்களுக்கு முன்பே அந்த படம் வெளியாகி இருக்கிறது.
அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி தான் அந்த படம் ஓடிடி வரவேண்டும். ஆனால் அதற்கு முன்பே வந்துவிட்டது இதனால் தியேட்டர் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயத்தில் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் சங்கம் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு தயாரிப்பாளரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் மற்ற தயாரிப்பாளர்களும் இதுபோன்று தொடங்குவார்கள் என்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு எட்டு வார காலக்கெடு என்பதை பராமரிப்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆங்கில ஊடகத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
-
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications