காதலனை அறிமுகப்படுத்திய நடிகை தீபிகா..அந்த கைரேகை..கடைசியில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனா காணும் காலங்கள் சீரியலில் அபி கேரக்டரில் நடிக்கும் தீபிகா தனக்கு எங்கேஜ்மென்ட் முடிந்துவிட்டது என பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதுவரைக்கும் தான் யாரை காதலிக்கிறேன் என கூறாமல் இருந்த தீபிகா இன்று இன்ஸ்டாகிராமில் ராஜ வெற்றி பிரபுவை தான் காதலிக்கிறேன் என உண்மையை உடைத்திருக்கிறார்.

kana kanum kalangal serial Deepika Venkatachalam, actor Raja Vetri Prabhus engagement

தீபிகா வெங்கடாசலம் ஆரம்பத்தில் பிரபலம் அடைந்தது இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற செயலி மூலமாகத்தான். அதில் பல வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதன் மூலமாகத்தான் இவருக்கு கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

இந்த சீரியலில் தீபிகா, அபி கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு நபரை காதலித்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். தான் ஏற்கனவே ஒரு நபரை காதலித்து வந்தேன் ஆனால் அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை. எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அதற்குப் பிறகு என் கூடவே இருக்கும் என் நண்பர் தான் என்னை புரிந்து கொண்டு எனக்கு ஆறுதலாக இருந்தார். என்னை பழையபடி சந்தோசமாக மாற்றியது அவர்தான் என்று கூறியிருந்தார்.

அதே நேரத்தில் எனக்கு வீட்டில் திருமண மையத்தில் மூலமாக திருமண வரன் பார்த்துக் கொண்டிருந்தனர். அதுபோல என்னுடைய நண்பருக்கும் பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் நாம் இருவருமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார். நானும் சரி என்று கூறிவிட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் கடைசி வரைக்கும் தான் யாரை காதலிக்கிறார் என்பதை பற்றி மட்டும் சொல்லாமல் அந்த நண்பரின் பெயரை ரகசியமாக வைத்து மறைமுகமாக சில க்ளூ கொடுத்துக் கொண்டிருந்தார்.

kana kanum kalangal serial Deepika Venkatachalam, actor Raja Vetri Prabhus engagement

அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அது தீபிகா உடன் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் ராஜ வெற்றி பிரபு தானா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அது பற்றி தீபிகா எந்த கருத்தும் கூறாமல் இருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனக்கு இன்னும் ஐந்து நாட்களில் திருமணம் என்று தெரிவித்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து தனது திருமணத்திற்காக டிரஸ் எடுப்பது, மெஹந்தி போடுவது என ஒவ்வொரு செயலையும் வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு கைவிரல் ரேகைகள் ஒன்று சேர்ப்பது போன்ற புகைப்படத்தை வைத்து தான் காதலிக்கும் நபர் ராஜ வெற்றி பிரபு தான் என்று அறிவித்திருக்கிறார்.

kana kanum kalangal serial Deepika Venkatachalam, actor Raja Vetri Prabhus engagement

அதைத்தொடர்ந்து அதற்கு ஒரு கேப்ஷனையும் கொடுத்து இருக்கிறார். அதில் எங்களுக்குள் எப்போதும் நிலைத்திருப்பது நட்பு மட்டும்தான். நாங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முடிவு எடுத்த காரணமே எப்போதும் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாது. ஆனால் குடும்பமாக இருக்க முடியும்." நண்பனே எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ"... இப்போதுதான் இதற்கு உண்மையான அர்த்தம் எனக்கு தெரிகிறது.

காதல் ஒரு தென்றல் போல எங்களை தாக்கியது. இப்போது எங்களால் உற்சாகத்தை அடக்க முடியாது. ஆனால் இறுதியாக உங்கள் தீபிகா மற்றும் ராஜ வெற்றி பிரபு நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றது. திருமணம் செய்து கொள்ள நாங்கள் தயாராகி விட்டோம். இதனை உங்களிடம் தெரிவிக்கும்போது பதட்டமாகவும், ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். மேலும் எனக்குள் ஒரு மில்லியன் உணர்வுகள் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

kana kanum kalangal serial Deepika Venkatachalam, actor Raja Vetri Prabhus engagement

இந்த தருணம் நான் முதலில் ராஜ வெற்றி பிரபுவை சந்தித்த நாளுக்கு என்னை அழைத்து செல்கிறது. எல்லா சிரிப்புடனும், புன்னகையுடனும் சிறந்த நண்பர்களாக நாங்கள் சுற்றி திரிந்தோம். ஆனால் அது விதி அழகாக விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அப்போது உணரவில்லை. பிரபஞ்சம் சரியான நேரத்தில் எங்களை ஆசீர்வதித்ததை நாங்கள் முழு மனதோடு நம்புகிறோம். இப்போது ஒரு அழகான தருணம் எங்கள் கண்களுக்கு முன்பாக உருவாக்கப்படுகிறது.

உங்கள் எல்லா அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, மேலும் காத்திருக்கும் உங்கள் எல்லோரையும் என்னால் ஏமாற்ற முடியாது. அதனால் தான் என்னுடைய மகிழ்ச்சியை இன்று உங்களோடு பகிர்ந்து இருக்கிறேன். அடுத்த நான்கு நாட்களுக்கு என்ன நடக்க இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள நீங்களும் ஆவலோடு காத்திருக்கிறீர்களா? என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு பல பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+