சூட்டிங் கேப்பில் தூங்கிய "அஞ்சலி".. மூக்கில் விரலை விட்டு.. என்ன விளையாட்டு இது!
சென்னை : தூக்கம் வந்து தூங்குவது ஒரு குத்தமா அதுக்கு போய் வீடியோ எடுத்து இப்படி சந்தி சிரிக்க வச்சிட்டீங்களே என கண்மணி மனோகரனின் ரசிகர்கள் செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளனர்.
பாரதி கண்ணம்மா சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் எல்லாம் போட்டு கொண்டு அமைதியாக ஒரு ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்தார் அஞ்சலியாக நடித்து வரும் கண்மணி.
அப்போது அருகே இருந்த சக நடிகை கலாய்க்கிறேன் என்று அஞ்சலி மூக்கில் விரலை விட்டு ஆட்ட.. அவர் தூக்கம் கலைந்து எழுந்து செல்லமாக சிணுங்குகிறார்.

மூக்கில் விரலை விடலாமா
என்னாது அஞ்சலி தூக்கம் கெட்டுப் போச்சா.. அவர் சிணுங்கிட்டாரா என்று கிளம்பி வந்து விட்டனர் அவரது ஆத்மார்த்தமான ரசிகர்கள்.. பிறகென்ன எப்படி எங்க அஞ்சலி மூக்கில் விரலை விடலாம் என்று உரிமைக் குரல் எழுப்பி வருகின்றனர். ரசிகர்களின் கனவு நாயகி தற்போது எக்ஸ்பிரஷன் குயின் ஆக கலக்கி இருக்கிறார் .எதிர்பாராத நேரத்தில் இப்படி நடந்து இருந்தாலும் அழகாக தானே இருக்கிறது என்று ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

ஐயோ பாவம் அஞ்சலி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்போடு ஓடிக் கண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலின் அஞ்சலியை அனைவருக்கும் தெரியும். அவர் இப்போ ரசிகர்களின் மனதில் ஐயோ பாவம் என்று ஒரு இடத்தை பிடித்து விட்டார் .இதற்கு முன்பு இந்த சீரியலின் வெண்பாவை விடவும் கூடவே இருந்து சொந்த அக்காவிற்கு வில்லத்தனத்தை செய்துகொண்டு ரசிகர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொண்டு இருந்தவர் .தற்போது மனம் திருந்தியதும் ரசிகர்கள் இந்த கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கிறதே என்று கூறிவருகின்றனர்.

கிடைத்த வாய்ப்பை விடலயே
இவர் கல்லூரி முடித்ததும் மாடலிங்கில் கவனத்தை செலுத்தி இருக்கிறார் . இவர் காலேஜ் படிக்கும் போதே கூட படிக்கும் நண்பர்கள் எல்லாம் நீ செம அழகாக இருக்கிறாய். அதனால் மாடலிங்கில் திறமையை காட்டு என்று இவரை உசுப்பி விட இவர் மாடலிங் போட்டோ ஷூட் களை எடுக்க ஆரம்பித்திருக்கிறார் .இதில் கிடைத்த ஒரு வாய்ப்பு தான் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடிக்கும் வாய்ப்பு .கிடைத்த வாய்ப்பை விட்டுவிடாமல் முதல் சீரியலில் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து விட்டார் .இந்த சீரியலில் முதலில் இவரை திட்டுன அதே ரசிகர்கள் தான் தற்போது இவரை உச்சுக் கொட்டி ரசித்து வருகின்றனர்.

பிள்ளைதாச்சி பெண்னாச்சே
பாரதிகண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவின் ரசிகர்களும் கூட அஞ்சலியை ரசிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனாலும் தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருப்பதற்கு இவரும் ஒரு காரணம் தான் .இவருடைய மனமாற்றம் ரசிகர்களின் இடத்தில் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருந்தாலும் தற்போது சீரியலில் இவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இவருக்கு உடல் நிலை சரி இல்லாததை பார்த்து அடுத்து என்ன நடக்குமோ என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

அப்படியே ஷாக் ஆகிவிட்டேன்
இந்த நிலைில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் கண்மணி தலை காட்டவுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஒரு குட்டி்த தூக்கமும் போட்டுள்ளஆர். சேரில் உட்கார்ந்தபடியே ஃபுல் மேக்கப் போட்டுக்கொண்டு லேசாக கண் அசந்து தூங்கி இருக்கிறார் .அதை பொறுத்துக் கொள்ளாத அவருடைய சக நடிகை அப்படியே இவரை வீடியோ எடுத்து கொண்டே இவரை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். எப்படி தெரியுமா.. அவரோட அந்த அழகான மூக்கை நோண்டி!

தூக்கத்தில் கூட செல்லம் அழகுதான்
திடீரென கண்விழித்ததும் வீடியோவை பார்த்ததும் ஷாக் ஆகி விட்டார் கண்மணி . உடனே ம்ம்ம்.. என்று செல்லமாக அவர் சிணுங்கவே.. வெட்கத்தோடும் பயத்தோடும் க்யூட்டான எக்ஸ் பிரஸனை அவர் காட்ட ரசிகர்கள் எமோஷனல் ஆகி விட்டார்கள். தூக்கத்தில் கூட செல்லம் எத்தனை அழகு என்று கொஞ்சி வருகின்றனர் .இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications