விவசாயம்... பச்சை பசேல் கிராமம்.. வெள்ளந்தி மனிதர்கள்.. பார்க்கவே கூல் கூல் கண்மணி!
சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியல் கிராமத்தில் எங்கும் நீரோட்டம், விவசாயம், பசுமை என்று கண்களை குளிர்ச்சியாக்குது. கிராமத்துல வசிச்சாலும் படிச்ச படிப்புக்கு வேலை பார்க்கலாம்னு உணர்த்தற மாதிரி, வேலை வாய்ப்புக்கு மில்க் புராடக்ட் தயாரிப்பு கம்பெணிகள்னு நம்பிக்கை தர மாதிரியும் இருக்கு.
கண்ணனின் அக்கா பொண்ணு சவுந்தர்யா காதலித்த ஆகாஷை மெதுவாக மறந்து, கண்ணன் மாமாவே கதி என்று, கண்ணனை நினைத்து உருக ஆரம்பிக்கறா.இது புரியாத கண்ணன் முதலில் சவுந்தர்யா ஆகாஷை காதலித்ததுதான்... அவள் மனசு மாறி இருக்காது என்று, சுந்தரியாவின் சைகைகளை புரிந்து கொள்ளாத மங்குனியாக இருக்கான்.
இதற்கிடையில் பஞ்சம் பொழைக்க வந்த சிறுக்கிதானேன்னு அவ்வப்போது சொல்லிக்கொண்டாலும் சின்னவரே சின்னவரேன்னு சொல்லிக்கிட்டு திரியும் முத்து செல்விக்கு சின்னவர் மேல் ஆசை என்று சொல்லும் அளவுக்கே இதுவரையான காட்சிகள் அமைஞ்சு இருக்கு.

முடி பிரேஸ்லெட்
சவுந்தர்யா மாமாவுக்கு தானே யானை முடி பிரேஸ்லெட் போட்டுவிடறா . கண்ணன் வயற்காட்டில் வேலை செய்துகொண்டிருக்க, ரெண்டு பொண்ணுங்க சின்னவரை கட்டிக்க எந்த பொண்ணுக்கு குடுத்து வச்சுருக்கோன்னு பேச, முத்து செல்வி, தன் மையை திருஷ்டிப்பு பொட்டாக வைக்கறா.

எனக்கு போட்டது
அட நீ என்ன புள்ள.. என் சவுண்டு எனக்கு இந்த பிரேஸ்லெட் போட்டு இருக்கு ..திருஷ்டி படக்கூடாதுன்னு என சொல்லி சந்தோஷப்படுகிறேன். சவுந்தர்யா மனசுல கண்ணன் மாமா புகுந்துட்டார்னு சரியா சீன காமிச்சுட்டாங்க. இப்போ முத்து செல்வி கண்ணனை நினைக்கற ,மாதிரியும் இருக்கு நினைக்காத மாதிரியும் இருக்கு...

பிளஸ்
இப்படி சீரியல் கதை எப்படி வேணும்னாலும் போகட்டும்...ஒரு வியவசாயியா சஞ்சீவ் நடிச்சுருக்கார். கிராமத்து பச்சை பசுமை காட்சிகள் மட்டுமே சீரியலில் கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பதால், எந்த காட்சியை எப்படி வச்சு எடுத்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியா எதோ நம்ம குடும்பத்தோட கதையை நாமே பார்க்கற மாதிரி இருக்கு.

நோ மைனஸ்
மைனஸ்ன்னு பார்த்தா எதுவும் இல்லை, இந்த காலத்துக்கு இப்படி விவசாயத்தை பேஸ் செய்து, கிராமத்து மக்களின் மனதை மட்டுமே வெளிக்கொணர்வது போல சீரியல் கதை அமைந்திருப்பது ரொம்ப நல்லா இருக்கு. இதை இப்படியே கொண்டு போகணும், கதையை கொஞ்சமும் நகரத்துக்கு மாத்தவே கூடாது. மாத்தினா நிச்சயம் ஃபெயிலாராயிரும்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications