Kanmani serial: அட..சின்னத் திரையில் தல அஜீத் மாதிரி... ஸ்மார்ட் ரசிக்கலாம்!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் புதுசா போலீஸ் இன்பெஸ்பெக்டர் கேரக்டர் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இவரிடம்தான முத்துச்செல்வி குடும்பம் இப்போது அடைக்கலம் புகுந்து இருக்கிறார்கள்.
அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பேரு ஸ்ரீகாந்த். இவர் நல்லவரா கெட்டவரான்னு ரெண்டாவது எபிசோடுலேயே காண்பிச்சாச்சு. நல்லவர்தான்.. அதுவும் ரொம்ப ரொம்ப நல்லவர்.
தன் டிபார்ட் மென்ட் ஆட்கள் ரோந்து போகிறேன் என்று முதியவர் உழைத்த காசை பிடுங்கி வந்துட்டா ,போலீஸ் என்றாலே வெறுப்பிலிருந்த அந்த முதியவர் உழைச்ச பணத்தை தனது ஸ்டேஷனில் வேலை பார்க்கும் கான்ஸ்டபிள்ஸிடம் இருந்து வாங்கித் தருகிறார்.

அழகு ஸ்ரீகாந்த்
ஸ்ரீகாந்தாக நடிக்கும் பையன் படு ஸ்மார்ட்டாக இருக்கான் என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். பார்த்தால் உண்மையும் அதுதான். கொஞ்சம் தல அஜீத் சாயலில் பையன் படு ஸ்மார்ட்டாக இருக்கான்.அட்டகாசம் படத்தில் அஜீத் இருப்பது போல கொஞ்சம் பூசினார் போன்ற உடம்புடன் காக்கி சட்டைக்கு பொருத்தமாக இருக்கிறான்.

ஸ்வேதாவின் அம்மா
முத்துச்செல்வி குடும்பம் இவங்க வீட்டில் அடைக்கலம் புகுந்துட்டாங்க. அங்கு அவர்களுக்கு ராஜ உபச்சாரம் செய்கிறான் ஸ்ரீகாந்த்.கெட்டவனா என்று நினைக்கும்போது, அவனை நல்லவன் என்று காண்பிக்க, இவன் வாழ வைத்த ஒரு பெண்ணின் தகப்பனார் இவனுக்கு பத்திரிக்கை கொடுக்க வந்துட்டு, அவனை புகழ்ந்து பேசறார். சரி, வீட்டிலிருக்கும் பெரிய மனுஷி, ஸ்ரீகாந்தின் மனைவி ஸ்வேதாவின் அம்மா எனும்போது இன்னும் ஷாக் வருகிறது.

வருவாள் ஸ்வேதா
ஸ்ரீகாந்தின் மனைவி பிளம்பருடன் ஓடிவிட்டாளாம். ஆனால், அவளின் அம்மாவை தனது அம்மா மாதிரி கூடவே வச்சுக்கிட்டு பார்த்துக்கறான் ஸ்ரீகாந்த். ஒரு நாள் அவன் ஸ்வேதாவை கைவிட்டுட்டானா, நான் அவளுக்கு ஆதரவாக எப்போதும் இருக்கணும்.. அதனால் என்னை இன்னொரு கல்யாணம் செய்துக்க சொல்லி கட்டாயப் படுத்தாதீங்கன்னு சொல்ல அவன் மேல் மேலும் மதிப்பு கூடுகிறது.

ஃபிட் ஆர்வம்
உடம்பை ஃபிட்டாக வச்சுக்கும் ஆர்வம் வந்து, அதிலும் இந்த பையன் சற்று கவனம் செலுத்தினால், சின்னத் திரைக்கு ஒரு அழகான நல்ல நடிகன் கிடைப்பார். நல்ல நாட்டு ரோஜா பூ நிறத்தில் ரோஸ் கலரிங் இருக்கும் இந்த பையன் சாட்சாத் கொஞ்சம் அஜீத் சாயலில் இருக்கான்.












Click it and Unblock the Notifications