Kanmani Serial: ஆற போட்ட விஷயத்தை செம சூடாக்கி சுடச்சுட காட்சிகள்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல், ஞாயிறு அன்று சிறப்பு ஒரு மணி நேரத்தில் இரவு 9:30 முதல் 10:30 வரை ஒளிபரப்பானது. சீரியல் கதைக்குழு பிளான் பண்ணி அந்த ஒரு மணி நேரத்தை சரியாக பயன்படுத்தி அதிரடி காட்சிகளாக ஷூட் செய்து இருந்தார்கள்.

பரபரன்னு நகர்ந்த காட்சிகளில் நடிகர் நடிகைகள் எல்லாருமே தங்கள் பங்குக்கு நன்றாக நடித்து இருந்தார்கள். டயலாக் அவ்வளவு இல்லை என்றாலும் சஞ்சீவ் சின்னத்திரை சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கும் விதமாக நடிப்பில் அசத்தி விட்டார்.

ஒரு வீட்டில் வேறு வேறு லொக்கேஷன்ஸ் என்று எங்கும் வெளியில் செல்லாமல் ஒரு மணி நேரத்தை விறுவிறுப்பு காட்சிகளாக்கி கொடுத்திருந்தனர். கண்மணி சீரியல், குடும்பத்தில் நடக்கும் யதார்த்தமான கதையாக காட்டப்பட்டு வந்தாலும், தர்மதுரை ஐயாவின் மரணம்தான் கதையில் ஹைலைட்.

பூர்ணிமா பாக்யராஜ் சஞ்சீவ்

பூர்ணிமா பாக்யராஜ் சஞ்சீவ்

சஞ்சீவ் தான் நல்ல நடிகன் என்பதை அவ்வப்போது நிரூபிக்கிறார். எந்த இடத்தில், எந்த டயலாக்கின் போது கண்களில் நீரை குளம் மாதிரி தேக்கி வைத்து இருக்க வேண்டும் என்பதெல்லாம் இவருக்கு கை வந்த கலையாக இருக்கிறது.பூர்ணிமா பாக்யராஜூக்கு ஆரம்பத்தில் இருந்தே கதைக்கு முக்கியத்துவமான கதாபாத்திரம்தான் என்றாலும், நேற்றைய எபிசோடில் இவரின் கோபம் முக்கிய அம்சமாகி இனி வரும் எபிசோடுகளிலும் அதே நீடித்து இருக்கும்படியான கதை அமைப்பில் கண்மணி சீரியல் இருக்கிறது.

கண்ணன் சவுந்தர்யா

கண்ணன் சவுந்தர்யா

சவுந்தர்யா வளர்மதி மோதலாக இருக்கும். இல்லை கண்ணன் முத்துச்செல்வியால், கண்ணனுக்கும் சவுந்தர்யாவுக்கும் குடும்ப வாழக்கையில் பிரச்சனை ஏற்படும் என்றெல்லாம் நினைக்கும்படி கதையை கொண்டு சென்று, இப்போது கண்ணனுக்கும் வளர்மதிக்கும்தான் பிரச்சனை என்று நேற்றைய டிவிஸ்ட் எபிசோட் ஒளிபரப்பாகி இருக்கிறது.

விஜயலட்சுமி கிருஷ்ணவேணி

விஜயலட்சுமி கிருஷ்ணவேணி

உள்ளுக்குள் விஜயட்சுமிம், கிருஷ்ணவேணிக்கும் கோல்டன் வார் என்று சொல்லும்படியம்.. வளர்மதி சவுந்தர்யா மோதல் என்பது போலவும், வளர்மதி கிட்டத்தட்ட சைக்கோ மன நிலைக்கு மாறி விடுவாள் என்றும் பல திசைகளில் கதை பயணிப்பதால், பார்க்க போரடிக்காமல் கண்மணி சீரியல் நன்றாக இருக்கிறது.

பெண் கொலை செய்வது

பெண் கொலை செய்வது

வீட்டில் பெரிய மனுஷியாக இருக்கும் ஒரு பெண், ஊரே மதிக்கும் தங்கள் வீட்டு பெரிய மனிதரை முகத்தில் தலையணை அமுக்கி எல்லாம் கொலை செய்வது என்பது பார்க்க கஷ்டமாக இருக்கிறது. இது மாதிரி கட்சிகளைத் தவிர்த்தால் எபிசோட் விறுவிறுப்பாக நகராதா என்ன? வீட்டில் எல்லாரும் பார்க்கும்படியாக சீரியல்களில் இதை எல்லாம் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+