Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனிமே ஃபுல்லா சேலைதான்.. படுக்கையில் விரித்து வைத்து சிலாகிக்கும் கன்னிகா ரவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடையில் சின்னத்திரையை விட்டு பெரிய திரைக்குப் போயிருந்த கன்னிகா ரவி மறுபடியும் தனது தாய் வீட்டுக்கேத் திரும்பியுள்ளாருங்க.

சீரியல்களில் புதுமுகங்கள் அறிமுகமாவதும் அவர்கள் ஒரு சில சீரியல்களிலேயே டாப்ல வந்து சினிமாவிற்கு போவதும் புதிதானது அல்ல. இது இயல்பாக நடப்பதுதான்

அந்த மாதிரிதான் கன்னிகா ரவி டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரையில் காலடி எடுத்துவைத்து அதிலும் கலக்கிவிட்டு சினிமாக்களில் நடித்துக் கொண்டிருப்பவர்.

கன்னிகா ரவி

கன்னிகா ரவி

இப்போது அவர் சன் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கல்யாண வீடு சீரியல் மூலமாக மீண்டும் டிவியில் நடிப்பதற்கு வருகிறாராம். அதுவும் ஹீரோயின் சூர்யா கேரக்டரில் .இந்த சீரியல் 2018 முதல் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பப்படுகிறது .அதில் திருமுருகன் ஆர் சுந்தர்ராஜன் இப்படிப் பல பிரபலங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

 சூர்யாவுடன் திருமணம்

சூர்யாவுடன் திருமணம்

இந்த சீரியலில் திருமுருகன் ஒரு மார்க்கெட்டிங் பிரதிநிதியாகவும் ஒரு இசைக்குழுவில் ஒரு பகுதி நேரமாக பாடகராகவும் கோபி என்ற பெயரில் தனது குடும்ப உறுப்பினர்களில் நல்வாழ்வுக்காக பல கஷ்டங்களையும் சோதனைகளையும் சந்திக்கிறார். பின்னர் கோபி - சூர்யா திருமணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் லாக்டோன் வந்ததால் தொடர்ந்து சூட்டிங் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 சூப்பர் கேரக்டர்

சூப்பர் கேரக்டர்

ஆனால் மறுபடியும் சூட்டிங் ஆரம்பித்ததும் சூர்யா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த ஸ்பூர்த்தி கவுடா தனக்கு திருமணம் என்று கூறி இந்த சீரியலை விட்டு நின்று விட்டார். அவர் நடித்துக் கொண்டிருந்த கேரக்டர் மிகவும் முக்கியமானது என்பதால் அதில் பிரபலமான ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என்று சீரியல் குழு முடிவு எடுத்து நடிகை கன்னிகா ரவியை அழைத்து இருக்கிறார்கள். அவரும் உடனே ஒத்துக் கொண்டாராம்.

சொந்த ஊரு அருப்புக்கோட்டை

சொந்த ஊரு அருப்புக்கோட்டை

கன்னிகா ரவி அருப்புக்கோட்டையில் பிறந்தவர். அவரது தந்தையின் ஆசையினால் தான் இவர் நடிப்பதற்கு காலடி எடுத்து வைத்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரை தனது ஊரிலேயே படிப்பை முடித்திருக்கிறார் . பிறகு காலேஜில் விஷூவல்கம்யூனிகேஷன் படித்தார். அதுவும் சென்னையில் அவரது பாட்டி வீட்டில் தங்கிப் படித்திருக்கிறார்.

அமுதா ஒரு ஆச்சரியக்குறி

அமுதா ஒரு ஆச்சரியக்குறி

காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போது இசையருவி குழந்தைகளுக்கான ஒரு ஷோ நடத்துவதற்கு .இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை விட்டுவிடாமல் உடனே சரி என்று சொல்லி அதில் சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது பாலச்சந்தரின் இயக்கத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான அமுதா ஒரு ஆச்சரியக் குறி சிரியல் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அழகான கூந்தல்

அழகான கூந்தல்

முதல் சீரியல் என்பதால் அதில் சந்தோஷமாக நடிக்க ஆரம்பித்து விட்டாராம். தொகுப்பாளராக தொடங்கி சீரியல்களிலும் காலடி எடுத்து வைத்த பிறகு 2012ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் இவருக்கு அழகான கூந்தலுக்கான விருது கிடைக்கவே, நிறைய ஷாம்பூ சீயக்காய் விளம்பரங்களும் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்திருக்கிறது.

அடுத்தடுத்து படங்கள்

அடுத்தடுத்து படங்கள்

இப்படி கலக்கிக்கொண்டு இருக்கும் போது தான் இவருக்கு சுந்தர் சியின் இயக்கத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இந்த படத்தில் சின்ன ரோலில் நடித்து இருந்தாலும் இதனை தொடர்ந்து பல படங்களிலும் நடித்திருக்கிறார். சரித்திரம் பேசு ,கெளுத்தி, பொம்மி வீரன் ,சாம்பல், 30 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன், அடுத்த சாட்டை தேவராட்டம் அப்படி பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.

கம்பை எடுத்து சுத்துனா

கம்பை எடுத்து சுத்துனா

படங்களுக்காக சிலம்பமும், பறை இசையும் கற்றிருக்கிறார் இவருக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோ என்றால் அது விக்ரம் தானாம். இப்படி பன்முகத் தன்மையோடு இருக்கும் இவர் நடிகர் மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் கலக்கியிருக்கிறார். கிராமத்து சமையல்களில் கை தேர்ந்தவரான இவர் அதை அப்படியே ஒரு புத்தகமாக போட்டுவிட்டார். கிராமத்து வேடத்தில் நடிப்பதுதான் ரொம்பவும் பிடிக்குமாம்.

அஜீத்தின் தங்கச்சியாகியிருக்கணும்

அஜீத்தின் தங்கச்சியாகியிருக்கணும்

தல அஜித்தின் தங்கச்சியாக நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது ஆனால் அப்போது அவரால் அதில் நடிக்க முடியவில்லையாம். அதனை நினைத்துக் இப்பவும் ஃபீல் பண்ணி கொண்டிருக்கிறார். இப்போ மறுபடியும் கல்யாண வீடு சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது.

சேலை கட்டினால் தனி வாசம்தான்

சேலை கட்டினால் தனி வாசம்தான்

புதிய கேரக்டரில் அதுவும் பாந்தமான கேரக்டரில் நடிக்கப் போவதால் சேலைகளை எடுத்து தூசு தட்டி அணியக் காத்திருக்கிறாராம். இனிமேல் சேலைதான் கட்டுவேன் என்றும் படுக்கையில் விரித்து வைத்து புகைப்படமும் போட்டுள்ளார். இந்த சீரியலில் இதுவரை நடித்துக்கொண்டிருந்தவரின் இடத்தை இவர் பிடிப்பாரா என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+