Kantara Chapter 1 box office: காந்தாரா சாப்டர் 1 ப்ரீமியர் ஷோவிலேயே எதிர்பார்க்காத வசூல்! அதுவும் இத்தனை கோடி
சென்னை: 'கே.ஜி.எஃப்.' மற்றும் 'காந்தாரா' போன்ற பிரம்மாண்டப் படைப்புகளைத் தந்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், தற்போது 'காந்தாரா சாப்டர் 1' (Kantara Chapter 1) படத்தின் மூலம் அடுத்த மெகா பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பட்டையைக் கிளப்பத் தயாராகிவிட்டது. வெறும் ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவாகி, உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்த 'காந்தாரா' படத்தின் ப்ரீக்வெல் (Prequel) ஆக, ரூ.125 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'காந்தாரா சாப்டர் 1', முதல் நாள் ப்ரீமியர் காட்சிகளிலேயே வசூல் வேட்டையை ஆரம்பித்துவிட்டது.

காந்தாரா சாப்டர் 1 கதை
நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி உருவாக்கிய முதல் பாகமான 'காந்தாரா' திரைப்படம், கர்நாடகக் கடலோரப் பகுதியின் 'பூத கோலா' சடங்கு மற்றும் பழங்குடியின மக்களின் நிலப் போராட்டத்தைச் சுற்றிய ஆன்மிகக் கதையாக அமைந்தது. அதன் ப்ரீக்வெல் ஆன 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம், முதல் பாகத்தில் பேசப்பட்ட தெய்வமான பஞ்சூர்லி/காளி தேவி-யின் வரலாறு, காட்டுக்குள் இருக்கும் கிராமங்களுக்குள் அந்த தெய்வத்தின் வருகை மற்றும் அதன் பின்னணியில் உள்ள பழங்காலக் கதைகளை விரிவாகப் பேசுகிறது.
இந்தக் கதை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புராணக் காலத்தையும், காளி தேவி தனது பக்தர்கள் மூலம் இந்தப் பூமியில் நிகழ்த்தும் அதிசயங்களையும், அந்த மனிதர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையையும் மையமாகக் கொண்டுள்ளது. ரிஷப் ஷெட்டியின் பிரம்மாண்டமான கற்பனை மற்றும் செதுக்கப்பட்ட உழைப்பில், இந்தப் படம் ஒரு பக்தி-ஆக்ஷன் காவியமாக உருவாகி இருக்கிறது.
வரலாறு காணாத ப்ரீமியர் வேட்டை
'காந்தாரா'வின் வெற்றிக்குப் பிறகு, இந்த சாப்டர் 1 படத்துக்குக் கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு இமாலயமானது. சமீபத்தில் வெளியான 'மகாவதார் நரசிம்மா' திரைப்படமே ரூ.300 கோடி வசூலை ஈட்டியுள்ள நிலையில், 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் உலகளவில் ரூ.1000 கோடி வசூலைத் தொடும் என்று சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நேற்று (புதன்கிழமை) நள்ளிரவில் படம் வெளியாகத் தொடங்கிய நிலையில், ப்ரீமியர் காட்சிகளின் வசூல் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது.
வட அமெரிக்காவில் ரூ.4 கோடி
வெளிநாட்டு விநியோகஸ்தரான பிரத்யங்கரா சினிமாஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தபடி, வட அமெரிக்காவில் மட்டும் முதல் நாள் ப்ரீமியர் ஷோவில் சுமார் $450K அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்) வசூல் ஈட்டப்பட்டுள்ளது.
உலகளவில் ரூ.15 கோடி
கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மற்றும் வட இந்தியாவில் திரையிடப்பட்ட ப்ரீமியர் காட்சிகளில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், ஒட்டுமொத்தமாக உலகளவில் ப்ரீமியர் ஷோக்களில் மட்டுமே 'காந்தாரா சாப்டர் 1' சுமார் 15 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது.
முன்பதிவு மட்டுமே இந்தியாவில் ரூ.25 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், முதல் நாள் முடிவில் இந்தியாவில் மட்டும் இந்தப் படம் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் தசரா பண்டிகைக் கால விடுமுறையை சரியாகப் பயன்படுத்தி, இந்தப் பான் இந்தியா திரைப்படம் கர்நாடகத் திரையுலகிற்கு அடுத்த மெகா பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
ரிஷப் ஷெட்டியின் இந்தப் பிரம்மாண்ட படைப்பு, விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் பாகத்தைவிட கதை சொல்லும் உத்தி, தொழில்நுட்பத் தரம் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் என எல்லாவற்றிலும் 'சாப்டர் 1' பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், கிளைமேக்ஸில் வரும் காளி தேவியின் கோரத் தாண்டவம் ரசிகர்களை உறைந்து போகச் செய்துள்ளது என்றும் விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications