ஷிகான் ஹூசைனி செய்ததை மறக்கலாமா? யாருமே போய் அவரை பார்க்கலயா? கொத்தோடு ரவிச்சந்திரனை அள்ளி.. பிரபலம்
சென்னை: எந்த கட்சிக்காக, எந்த அம்மாவுக்காக ஷிகான் ஹூசைனி பேரன்பு செலுத்தினாரோ, அந்த கட்சியிலிருந்தே யாரும் வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கம் ஹூசைனிக்கு இருப்பதாக தெரிகிறது.. ஆனால், எதிர்பாராத விதமாக துணை முதல்வர் உதயநிதி, 5 லட்சம் ரூபாய் ஹூசைனி சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளார். திரையுலகில் பலரும் சென்று ஆறுதல் சொன்னால், அந்த ஆறுதல் ஹுசைனியை சில நாட்கள் வாழவைக்கும்" என்று மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.
Valai pechu Anthanan என்ற சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் அந்தணன், "ஷிகான் ஹூசைனி பற்றி இன்றைய 2K கிட்ஸ்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், 25 வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய ஹீரோவாக இருந்தவர் ஹூசைனி ..
எங்கே திரும்பினாலும், ஹூசைனியின் போட்டோக்கள் இருக்கும்... அதற்கு கீழே, போன் நம்பர் தரப்பட்டிருக்கும்.. அவரிடம் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான கராத்தே மாணவர்கள், இந்தியா முழுக்க இருக்கிறார்கள்..

இந்த மாணவர்களிடம் கராத்தே பயின்றவர்கள், தனித்தனியாக கராத்தே பள்ளிகளை துவங்கி நடத்தி வருகிறார்கள். அந்தவகையில், கராத்தே பயிற்சி மையத்தையே, கிட்டத்தட்ட ஒரு இயக்கம் போல கொண்டு போனவர் ஷிகான் உசைனி,.
தமிழகத்தின் புரூஸ்லீ
கராத்தே மணி, ஷிகான் ஹூசைனி இவர்கள் இருவரும்தான், தமிழக இளைஞர்களிடம் கராத்தே ஆர்வத்தை ஏற்படுத்தியவர்கள்.. நம்ம ஊர் புரூஸ்லீயாக திகழ்ந்தவர் ஹூசைனி.. கராத்தே தவிர, ஏகப்பட்ட வித்தைகளையும் செய்தார்.. மேஜிக் மூலம் பல விஷயங்களை செய்து வியப்பை பலருக்கு ஏற்படுத்தினார் ஹூசைனி. தன்னுடைய ரத்தத்திலேயே ஜெயலலிதாவின் படம் வரைந்தது, அன்று பரபரப்பாக பேசப்பட்டது.
அஞ்சாநெஞ்சன். எதற்குமே ஹூசைனி கலங்கியது கிடையாது.. இப்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.. அந்தவகையில் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்.. ஆனால், அவருக்குள்ள தைரியம் உலகத்தில் யாருக்குமே இல்லை என்றுதான் சொல்வேன்.. அவரது முகத்தில் மரண பயம் இல்லை.. அச்சமும் இல்லை.
கவலையில் ஹூசைனி
ஆனால் சில கவலைகள் உள்ளது.. தன்னுடன் பழகியவர்கள் வந்து மருத்துவமனையில் பார்க்கவில்லையே என நினைக்கிறார்.. குறிப்பாக, விஜய் வந்து பார்த்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார். ஏனென்றால், பத்ரி படத்தில் விஜய்க்கு ஹூசைனி தான் கராத்தே கற்று தந்துள்ளார்.
அதேபோல, தமிழ் திரையுலகம், ஹூசைனிக்கு நன்றி கடன் பட்டுள்ளது.. ஜீன்ஸ் படத்தில் ஹூசைனி பெரும் பங்கு செலுத்தினார்.. அந்த நேரத்தில் திரைப்பட உலகை அச்சுறுத்தக்கூடிய திருட்டு விசிடி புழக்கம் அதிகமாக இருந்தது. அன்று விஜயகாந்த் முதல் இன்று விஷால் வரை திருட்டு விசிடிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனாலும், பர்மா பஜார் உள்ளிட்ட இடங்களில் திருட்டு விசிடி அதிகமாக விற்கப்பட்டன.
திருட்டு விசிடி ஒழிப்பு
ஜீன்ஸ் படத்தின் ஒவ்வொரு பிரிண்ட்டும் FMS போகும்போது, தன்னுடைய கராத்தே வீரர்களை பாதுகாப்புக்கு அனுப்பி வைத்தார் ஹூசைனி.. ஜீன்ஸ் வெளியாகும்போது, ஒவ்வொரு தியேட்டருக்கும் தன்னுடைய கராத்தே மாணவர்களை வைத்து, பாதுகாப்பு தந்து, திருட்டு விசிடி வெளிவராமல் தடுத்தார்.
எங்கெல்லாம் திருட்டு விசிடியோ அங்கெல்லாம் அதிரடியாக இறங்கி சோதனை நடத்துவார்.. திருட்டு விசிடி இருந்தால், உடனே அவர்களை போலீசில் ஒப்படைப்பார்..
அப்படித்தான் ஒருமுறை ஒருகடையில் சோதனை நடத்த சென்றிருக்கிறார்.. அந்த கடையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் வந்துள்ளார்.. அவரை அறியாத ஹூசைனி, கடைக்குள் சென்று சோதனை நடத்தி, அந்த கடைக்காரருடன் சேர்த்து ஆஸ்கார் ரவிச்சந்திரனையும் சேர்த்து கொத்தோடு அள்ளி, தன்னுடைய ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும்தான், அவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்பதே ஹூசைனிக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.
ஆச்சரியப்பட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரன்
ஹுசைனியின் கடமை உணர்ச்சியை கண்டு ஆச்சரியப்பட்டாராம் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.. அந்த நிகழ்வுக்குபிறகு இருவரும் நண்பர்களாகி விட்டனர். அந்தவகையில் ஹூசைனி கிட்டத்தட்ட ஒரு போலீஸ்காரர் போலவே செயல்பட்டார். இதனால் திருட்டு விசிடி விற்பவர்கள் ஹூசைனியை கண்டு பயந்தார்கள்.
ஹூசைனியால் பல படங்கள் தப்பித்துள்ளன.. அதுமட்டுமல்ல, பவன் கல்யாணுக்கு அந்த பெயரை வைத்ததே ஹூசைனிதான்.. அதுவரை அவரது பெயர் கல்யாண் பாபு என்றிருந்ததாம்.
ஆறுதல் வார்த்தைகள்
இன்னைக்கு ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் ஹூசைனி. ஆனால் யாருமே சென்று ஹூசைனியை சென்று பார்க்கவில்லை.. அந்தவகையில் திரையுலகம் அவரை கைவிட்டுவிட்டது என்றே தெரிகிறது.
எந்த கட்சிக்காக, எந்த அம்மாவுக்காக பேரன்பு செலுத்தினாரோ, அந்த கட்சியிலிருந்தே யாரும் வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கம் ஹூசைனிக்கு இருப்பதாக தெரிகிறது.. ஆனால், எதிர்பாராத விதமாக துணை முதல்வர் உதயநிதி, 5 லட்சம் ரூபாய் ஹூசைனி சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளார். திரையுலகில் பலரும் சென்று ஆறுதல் சொன்னால், அந்த ஆறுதல் ஹுசைனியை சில நாட்கள் வாழவைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications