Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Karthik: அப்பாவை பற்றி பேசுறது வருத்தமா இருக்கு! நேரிலேயே சொல்லி இருக்கலாமே! கார்த்திக் மகன் கௌதம் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில நாட்களுக்கு முன்பு நடிகர் கார்த்திக் பற்றி இயக்குனர் பாரதி கண்ணன் பேசிய வீடியோ தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டானது. கார்த்திக் போலவே மிமிக்கிரி செய்து, கார்த்திக் படத்திற்கு அட்வான்ஸ் வாங்கி விட்டு திரும்பி தர முடியாது என்று சொல்லிவிட்டார் என்று பாரதி கண்ணன் பேசியிருந்தார். இது கார்த்திக் ரசிகர்களை வருத்தம் அடைய செய்தது. இந்த நிலையில் கார்த்திக்கின் மகன் தன்னுடைய தந்தை பற்றி சோசியல் மீடியாவில் பரவும் செய்திக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

சினிமாவில் பல வாரிசு நடிகர்கள் களமிறங்கி இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தங்களுடைய பெற்றோர்களை போலவே ஜொலிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக பலரை சொல்லலாம் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் இயக்கத்தில் பலர் நடித்திருக்கிறார்கள். அவர் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் ஆனால் அவருடைய மகன் நடிப்பு திறமை இருந்தாலும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்

Karthik Gautham Karthik

அதேபோல நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதமும் சினிமாவில் அறிமுகமானாலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கிறார். கார்த்திக் நடிகர் முத்துராமனின் மகனாக சினிமாவில் அறிமுகமானாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். அதிலும் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் அவருடைய ஸ்டைலுக்காகவே அவருக்கு அதிகமான ரசிகர்கள் உண்டு.

அதே நேரத்தில் கார்த்திக் பற்றி ஆரம்பத்தில் இருந்தே பல பல சர்ச்சைகள் உண்டு. அவர் சூட்டிங்கு சரியான நேரத்தில் வர மாட்டார். கால் சீட் கொடுத்த நாளில் சூட்டிங் வரமாட்டார் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஒரு சிலர் கார்த்திக்கு பற்றி பெருமையாகவும் பேசி இருக்கிறார்கள். அதிலும் சமீபத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்படும் இயக்குனர் ராஜகுமாரன், கார்த்திக் குறித்து பெருமையாக பேசி இருந்தார்.

அதாவது தான் உதவி இயக்குனராக பணியாற்றிய திரைப்படத்தில் கார்த்திக் நடித்துக் கொண்டிருந்தபோது முழு படத்திற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து டப்பிங் பேசி முடித்தார். சாப்பிடுவதற்கு தூங்குவதற்கும் கொஞ்சமான நேரம் மட்டும்தான் எடுத்துக் கொண்டார். மீதம் நேரத்தில் அவர் பேசிக்கொண்டே இருந்தார் என்றெல்லாம் பாராட்டி இருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதி கண்ணன் கார்த்திக் பற்றி பேசிய வீடியோவை நீங்களும் பார்த்து இருப்பீங்க.

அந்த வீடியோவில் கூட நான் உதவி இயக்குனராக இருந்தபோது கார்த்திக்கிடம் ஒரு படத்திற்கு கதை சொல்லி 5 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன். ஆனால் இரண்டு நாள் கழிச்சு அவர் இன்னும் அஞ்சு லட்சம் வேணும்னு சொன்னாரு. பிறகு ப்ரொடியூசர் கார்த்திக் ஒழுங்கான ஷூட்டிங் வரமாட்டாருனு சொல்லி அந்த பணத்தை திரும்பி வாங்க சொன்னாரு. நான் போய் கார்த்திக் சாரிடம் பணம் கட்ட போது அவர் கார்த்திக்கிடம் பணம் போனால் திரும்பி வராதுன்னு சொல்லி இருப்பாங்க, உங்களுக்கு தெரியாதானு கேட்டாரு என்று கார்த்திக் போலவே பாரதி கண்ணன் பேச அவரை தொடர்ந்து ஒரு சில யூடிபர்களும் கார்த்திக் பற்றி அப்படி இப்படி என்று பேச தொடங்கி விட்டார்கள்.

இது பற்றி கௌதம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் சொல்லும்போது, என்னுடைய அப்பா கார்த்திக் மீதான விமர்சனம் தொடர்ந்து வரும் போது எனக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு. அது என்ன காயப்படுத்துது. அதை கேட்பதற்கு வருத்தமாகவும் இருக்கு. ஆனால் வெளியே இருந்து பார்க்கும்போது தான் தெரியும் அவரவர் வலி அவரவருக்கு தான். உன்னுடைய பிரச்சனை பெருசு என்னுடைய பிரச்சனை பெருசுன்னு நாம சொல்ல முடியாது.

என்னுடைய வேண்டுகோள் என்னன்னா இப்போ அப்பா பற்றி இப்படி பேசுறவங்க எல்லோருமே சீனியர்ஸ். நாங்க அவங்களை பார்த்து தான் வளர்கிறோம். எங்க அப்பா தலைமுறையில் இருந்தவர்கள் அவர்களுக்கு உண்டான நெருக்கம் அதிகமாக இருந்திருக்கும். இந்த இன்றைய தலைமுறையாவது அவரவர் வேலைய பாத்துட்டு போயிடுறாங்க.

ஆனால் அந்த காலகட்டத்தில் அப்படி இல்ல. அண்ணன் தம்பிகளாக, தாய் தந்தைகளாக பழகினார்கள். அப்படி இருக்கும் போது இந்த பிரச்சனையை நேருக்கு நேரா பேசி இருக்கலாம் அதை விட்டுட்டு இப்போ பொதுத்தளத்தில் பேசி இருக்க வேண்டாம். பொது தளத்தில் பேச எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கு என்று கௌதம் வருத்தத்தோடு பேசி இருக்கிறார். கௌதம் கார்த்திக் பேசியது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+