
கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்கும் தீபாவின் மறுபக்கம்."அந்த பிரபலத்தால்” தான் வாய்ப்பு கிடைத்ததாம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் தீபா கேரக்டரில் நடிக்கும் நடிகையின் நிஜப் பெயர் அர்திகா, இந்த சீரியலில் நடிப்பதற்கு காரணம் சின்னத்திரை நடிகை தானாம்.
சீரியலில் கருப்பான நடிகையாக நடிக்கும் அர்திகா நிஜ வாழ்க்கையில் ஒருவர் நல்ல கலராக ஒரு நடிகையாக தான் இருந்து வருகிறாராம். ஆனால் இந்த சீரியலின் மூலமாக கருப்பாக இருக்கும் நபர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு அவமானங்கள் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டதாக கூறி இருக்கிறார்.
"இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது" கன்னிகா பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி.. குவியும் வாழ்த்துக்கள்

ரீ என்ட்ரி கொடுத்த கார்த்திக்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிய ஒரு சில நாட்களிலே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக கார்த்திக் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே செம்பருத்தி சீரியல் மூலமாக ஜீ தமிழ் ரசிகர்களை கட்டி இழுத்து வைத்திருந்த இவர் ஒரு சில வருடங்களாக சீரியலில் இருந்து விலகி இருந்து மீண்டும் இந்த சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இதனாலே இவருடைய சீரியல் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு அமோகமாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இந்த சீரியலுக்கு புது நடிகை கதாநாயகியாக கொடுத்திருக்கின்றனர் ஆனாலும் இவருடைய காஸ்டியூம் மற்றும் கெட்டப் எதிர்பார்க்காத விதமாக இருக்கிறது.

கருப்பு அழகு
கார்த்திகை தீபம் சீரியலில் தீபா கேரக்டரில் நடிக்கும் அர்திகா நிஜத்தில் இந்த சீரியலில் வருவது போல கருப்பாக இருக்க மாட்டாராம். நிஜத்தில் இவர் கலராக இருந்தாலும் இந்த சீரியலுக்காக தான் இப்படி நடிக்கிறார் .ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ரச்சிதா இப்படி தான் அறிமுகமானார். அதேபோல இப்போது இவரும் பாவாடை தாவணியில் இந்த சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார். ஒரு பாடகியாக இருக்கும் இவர் அழகு இல்லாமல் இருக்கிறார் என்று இவரை பின்னாடி வைத்துக் கொண்டு அழகாக இருக்கிறார் என அழகாக இருக்கும் ஒரு நடிகையை முன்பு வைத்து இவருடைய திறமை மறைக்கப்படுகிறது. இந்த சீரியலில் ஒரு சில எபிசோடுகளில் இவர் ரசிகர்களின் மத்தியில் அனுதாபங்களை பெற்றிருக்கின்றார்.

வாய்ப்பு கிடைக்க காரணம்
அர்திகா சுமார் நான்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்களில் இன்னும் வெளியாகாமல் தான் இருக்கின்றது. குறிப்பாக கார்த்திக் ராஜ் நடித்த பிளாக் அண்ட் ஒயிட் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறாராம். இந்த நிலையில் இந்த சீரியலுக்கு இவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது சேதுபட நடிகையான அபிதாதனாம். அபிதா இப்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும், இந்த சீரியலின் வாய்ப்பு அவரால் தான் அர்திகாவுக்கு கிடைத்திருந்ததாம். அபிதாவும் அர்த்திகாவும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் அர்திகாவுக்கு இந்த வாய்ப்பைப் பற்றி அபிதா தான் கூறி இருந்தாராம்.

சமுதாயத்தை புரிந்து கொள்ள முடிந்தது
அது மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடிக்கும் கார்த்திக் மூலமாகவும் இவருக்கு இந்த வாய்ப்பு நிரந்தரமாகி இருக்கிறதாம் . அர்திகா ஏற்கனவே கார்த்திக் உடன் மாதவி என்ற ஷார்ட் ஃப்லிம் மில் நடித்திருக்கிறாராம். இந்த ஷார்ட் பிலிம்யில் இவரை பார்ப்பதற்கும் இப்போது இந்த சீரியல் பார்ப்பதற்கும் அதிகமாக வித்தியாசம் இருக்கிறதாம் அந்த சீரியலில் படுமார்டன் பெண்ணாக வந்த இவர் இந்த சீரியலில் எப்படி ஒரு கேரக்டரில் நடித்து இருக்கிறார் என்பது பலருக்கும் பார்த்ததும் தெரிந்து கொள்ள முடியாத வகையில் தான் இருக்கிறதாம். ஆனால் இந்த சீரியலில் இவர் நடிக்கும் போது தான் கருப்பாக இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் எவ்வளவு அவமானங்களும், புறக்கணிப்புகளும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.