
மீண்டும் சின்னத்திரைக்கு வந்த கார்த்திக் ராஜ்.. இந்த முறை சீரியலில் இல்லையாம்.. என்ட்ரி வெறித்தனம்
சென்னை: செம்பருத்தி சீரியல் கதாநாயகனாக நடித்த கார்த்திக் ராஜ் மீண்டும் ஜீ தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.
ஆதி கேரக்டரில் நடித்த கார்த்திக் தற்போது ஜீ தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
திரைப்பட நடிகராக மாறி இருக்கும் கார்த்திக் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தாலும் அவருடைய ரசிகர்கள் வரவேற்பைதான் கொடுத்து வருகிறார்கள்.
சீரியலில் மீண்டும் களமிறங்கும் “செம்பருத்தி” கார்த்திக்..!!ஆனால் கண்டிஷன் தான் பெருசாம்..!!

பெண் ரசிகைகள் அதிகம்
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலின் மூலமாக ஆதி கேரக்டரில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான கார்த்திக் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். 90ஸ் கிட்ஸ்களில் ஃபேவரைட் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் கார்த்திக் செம்பருத்தி சீரியல் க்கு பிறகு சீரியல் பக்கமே வரவில்லை என்று இவருடைய ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். செம்பருத்தி சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்து இவருக்கு அதிகமான பெண்கள் ரசிகைகள் கிடைத்து இருந்தனர்.

நெட்டிசன்கள் கலாய்ப்பு
என்னதான் கார்த்திக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தாலும், இவருடைய நடிப்பை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள் இருக்கத்தான் செய்கின்றனர். பலர் மீம்ஸ்களில் இவருடைய நடிப்பு எல்லா உணர்வுகளுக்கும் ஒரே போல இருப்பதாக பங்கமாக கலாய்த்து வந்தனர். காதல், அழுகை, சோகம், பாசம் என கார்த்திக் ராஜா அனைத்து உணர்வுகளுக்கும் ஒரே விதமாக முகபாவனை காட்டி விடுவதாக நெட்டிசன்கள் கலாய்த்தாலும் இவருடைய ரசிகர்கள் இவருக்கும் ஷபானாவிற்கும் இருந்த கெமிஸ்ட்ரி பொருத்தத்தை அதிகமாக ரசித்து வந்தனர்.

டி ஆர் பி யில் கீழே வர காரணம்
ஆபீஸ் சீரியலில் கார்த்திக் நடிக்கும் போதே இவர் பலதரப்பட்ட பெண் ரசிகைகளையும் கவர்ந்திருந்தார். அதற்கு பிறகு செம்பருத்தி சீரியலில் மூலமாக வீட்டில் அம்மா பாட்டி வரைக்கும் அனைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்து இப்படி ஒரு பிள்ளை வேண்டும் என்று இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இவர் செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்தி விலகியதும் அவருடைய தீவிரமான ரசிகர்கள் பலர் அந்த சீரியலை பார்ப்பதை விட்டு விட்டார்களாம். அதனால் செம்பருத்தி சீரியல் டிஆர்பி யில் பின்னுக்கு சென்றது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

மீண்டும் அதே இடத்தில்
தற்போது ஒரு சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கார்த்திக்குராஜ் சின்னத்திரைக்கு வருகிறார். அதுவும் ஜீ தமிழில் தான் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான். தற்போது ஜீ தமிழில் 50ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு கார்த்திக் கலந்து கொண்டு இருக்கிறார். விரைவில் இந்த ப்ரோமோ வெளியாக இருக்கிறது. விரைவில் கார்த்திக் கலந்து கொள்ளும் எபிசோடுகள் ஒளிபரப்பாகும். ஏற்கனவே ஜீ தமிழ் சீரியலில் கார்த்திக் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இந்த செய்தியும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்.