நீயா நானா நிகழ்ச்சி, தொகுப்பாளரை பற்றியும் பேசிய கரு பழனியப்பன்... இவ்வளவு ஓபனா ஒத்துக்கிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கரு பழனியப்பன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை குறித்து கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

நீயா நானா நிகழ்ச்சியை காப்பி அடித்து தான் தமிழா தமிழா நிகழ்ச்சி எடுக்கப்பட்டதா என்று பல்வேறு தரப்பினர் கேள்வி கேட்டு வருவதாகவும் அதற்கு என்னுடைய பதில் இதுதான் என்று முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஒரு நடிகராகவும் அரசியல்வாதியாகவும் தொகுப்பாளராகவும் பல்வேறு முகங்களை கொண்ட கரு பழனியப்பன் தற்போது நகைச்சுவையாக பேசியதை குறித்து பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.

ஒப்பிட்ட மீம்ஸ்

ஒப்பிட்ட மீம்ஸ்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கரு பழனியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை குறித்து பல்வேறு கருத்துக்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் இடம்பெறும் குறிப்பாக இவருடைய கருத்துக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் கருத்துக்களையும் ஒன்றாக வைத்து அதிகமான மீம்ஸ்கள் கலாய்த்து வரும். சில மாதங்களுக்கு முன்பு கூட கோபிநாத் ஒரு அப்பாவின் பாசத்தை பாராட்டி இருப்பார். அதே நேரத்தில் இதை கரு பழனியப்பன் இப்படித்தான் செய்திருப்பார் என்று பல்வேறு மீம்ஸ் போட்டு அவரை கலாய்த்து வந்தனர்.

உண்மைதானாம்

உண்மைதானாம்

இந்த நிலையில் ஒரு சேனல் ஒன்றுக்கு கரு பழனியப்பன் பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது நீயா நானா நிகழ்ச்சியை காப்பி அடித்து தான் தமிழா தமிழா நிகழ்ச்சியை எடுக்கப்பட்டிருக்கிறதா? என்று கேட்டதற்கு ஆமாம் அதில் என்ன சந்தேகம். இது பொதுவாக நடப்பது தானே? நீயா நானா நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அதனுடைய வெற்றி அனைவருக்கும் தெரிந்துதான். அதுவும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் திறமை அனைவருக்கும் தெரியும். அவர் சரியாக தன்னுடைய பேச்சுத் திறமையின் மூலமாக உள்ளே இருக்கும் அனைவரையும் சரியாக கனித்து விடுவார்.

புது அனுபவம்

புது அனுபவம்

பல வருடங்களாக இந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்து அந்தத் திறமை ஏற்பட்டிருக்கிறது. ஒரு டிவி சேனலில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று ரசிகர்கள் அதை ரசிகர்கள் என்றால் அதே சாயலில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி விடுவது புதிதல்ல. இதுதான் காலம்காலமாக வந்து கொண்டிருக்கிறது. அதுபோலத்தான் தமிழா தமிழாவும் வந்தது. தற்போது சில வருடங்களாக நானும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். ஆரம்பத்தில் இருந்ததற்கும் இப்போதும் எனக்கு அதிகமான அனுபவம் கிடைத்திருக்கிறது. இன்னும் போக போக வரும் காலங்களில் அதிகமாக கற்றுக் கொள்ளலாம் என்பது எனக்கு தெளிவாக தெரிகிறது என்று கூறி இருக்கிறார்.

பொய் சொல்ல விரும்பவில்லை

பொய் சொல்ல விரும்பவில்லை

நான், தமிழா தமிழா நிகழ்ச்சி அப்படியெல்லாம் இல்லை, நீயா நானா நிகழ்ச்சியை விட இது வேறுபட்டது என்று சொன்னால் யாரும் நம்பவா போகிறீர்கள். இதையும் ஒரு மீம்ஸாக போட்டு கலாய்த்து கொண்டிருப்பார்கள். உண்மை இரண்டுமே ஒன்றுதான். நீயா நானாவே போன்று தான். தமிழா தமிழா நிகழ்ச்சியும் தொடங்கப்படப்பட்டது. அதில் ஒரு தவறு இல்லையே அது போல நான் ஏமாற்றவும் விரும்பவில்லை. ஏமாற்றி நான் வேடம் போட வேண்டியது எனக்கு அவசியமும் இல்லை என்று வெளிப்படையாக இவர் பேசி இருக்கிறார். இந்த கருத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+