தமிழா தமிழாவை விடுங்க.. பிக் பாஸில் பவா செல்லத்துரை முதல் நாள் செய்தது சரியா? கரு. பழனியப்பன் கேள்வி
சென்னை: இயக்குனர் கரு பழனியப்பன் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் சின்னத்திரை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தான் அவர் தொகுத்து வழங்கி வந்த தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியிலிருந்து விலகி இருந்தார். இப்போது கலைஞர் சேனலில் வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் கரு பழனியப்பன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பவா செல்லதுரை கலந்து கொண்டது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது சமூக வலைதளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி விவாதம் வேகமாக பரவி வருகிறது. ஒரு பக்கம் இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யம் என்கிற பெயரில் சண்டை சச்சரவுகள் மட்டுமே இருந்து வரும் நிலையில் இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் குறித்தும் ஆரம்பத்திலேயே நிகழ்ச்சியில் அடிப்படை கல்வி குறித்து எழுந்து வந்த பிரச்சனைகள் பற்றியும் பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் எழுத்தாளர் பவா செல்லதுரை கலந்து கொண்டது பற்றியும் பலர் விவாதித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும் கரு பழனியப்பன் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார். அதில் நான் இப்போது உள்ள இளைஞர்கள் என்ன மாதிரி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இணையத்தை அதிகமாக தெரிந்து கொண்டு இணையத்தில் எதுவெல்லாம் வைரல் ஆகிறது எது பற்றி அதிகமாக பேசப்படுகிறது என்பதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
அந்த வகையில் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் எந்த நிகழ்ச்சியும் தொடர்ந்து பார்ப்பது கிடையாது. ஒரு சில நாள் பார்ப்பேன் அப்போது அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதானே நாமும் அப்டேட் ஆக இருக்கிறோம் என்று அர்த்தம் அதற்காகவே எல்லா நிகழ்ச்சிகளையும் பார்ப்பேன். அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும்போது தான் எனக்கு மனதிற்குள் ஒரு உறுத்தல் ஏற்பட்டது.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பவா செல்லத்துரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து பலர் விவாதித்து வருகிறார்கள். ஆனால் அது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதில் யாரும் கருத்து சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. அவர் ஒரு எழுத்தாளராக இருந்தாலும் அவருக்கென்று சில கமிட்மெண்ட் இருக்கலாம். அது அவரை இன்னும் தனக்கு பெயரும் புகழும் வேண்டுமென்றும் நினைத்திருக்கலாம்.
அதனால் அது அவருடைய விருப்பம் ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது போட்டிருந்த உடை தான் எனக்கு உறுத்தலாக இருந்தது. அவர் ஒரு எழுத்தாளர் எப்போதும் அவர் இருப்பது போன்றே அந்த நிகழ்ச்சியிலும் இருந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. எழுத்தாளராக தன்னை நிரூபிக்க வேண்டும் என்று அவர் நினைத்தது போலவே எழுத்தாளர்குரிய அடையாளத்தோடு அவர் போயிருக்க வேண்டும்.
பிறரைப் போன்று சாயத்தோடு அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாரோ? அதனால் தான் அவர் பிக் பாஸ் லாஞ்ச் போது ஷர்வானி உடையோடு வந்திருந்தாரோ என்று எனக்கு தோன்றுகிறது. எது இருந்தாலும் சரி அவருக்கு பிடிக்கவில்லை என்பதால் நிகழ்ச்சியில் இருந்து வந்துவிட்டார் என்று கரு. பழனியப்பன் பேசி இருக்கிறார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications