பாண்டியன் ஸ்டோரை விட்டு விலகும் கயல் பாப்பா.. இனி கதை இதுதானா? எதிர்பாராத திருப்பங்கள்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கயல் பாப்பா பற்றி அவருடைய அம்மா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
தொடர்ந்து நான்கு வருடங்களாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கயல் நடித்து வருகிறார்.
கயல் பாப்பாவின் நிஜப்பெயர் ஹாசினிதானாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் சமீபத்தில் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் தற்போது அடுத்தடுத்து பிரிந்து போய் இருக்கின்றனர். இந்த நிலையில் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் வந்திருக்கிறது.
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டனர். அந்த வகையில் இந்த சீரியலில் குட்டி குழந்தையாக அதாவது மீனா மற்றும் ஜீவாவின் மகள் கேரக்டரில் கயல் பாப்பாவாக நடித்து வரும் ஹாசினியும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இந்த சீரியலில் ஹாசினி பிறந்த கொஞ்ச நாட்களிலே நடிக்க தொடங்கி இருக்கிறார்.

ஆரம்பத்தில் கயல் பாப்பாவாக ஆண் குழந்தை தான் நடிக்க வைத்திருந்தார்களாம். அந்த குழந்தை அடிக்கடி அழுது கொண்டே இருக்கிறது என்பதால் அந்த குழந்தையை மாற்றிவிட்டு ஹாசினியை நடிக்க வைத்திருக்கிறார்கள். இப்போது வரைக்கும் கயல் கேரக்டரில் ரசிகர்களை மட்டுமல்லாமல் அந்த சீரியல் நடிக்கும் பிரபலங்களையும் கவர்ந்திருக்கிறார். அதனால் தான் அந்த சீரியல் நடிகர்கள் கயல் பாப்பாவோடு எடுக்கும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருவார்கள்.
இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து கயல் பாப்பா விளக்குவதாக தகவல்கள் பரவி வருகிறது. அது குறித்து சமீபத்தில் அவருடைய அம்மா பேட்டி ஒன்றில் அப்படித்தான் பேசி இருக்கிறார்கள், இனி அதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி இருக்கும்போது கயலுக்கு பதிலாக அவருடைய அக்கா நடிப்பதற்காக கேட்டிருக்கிறார்கள். நாங்களும் சரி என்று சொல்லி இருக்கிறோம். கயலின் அக்காவும் நடிப்பதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் இந்த சீரியல் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று தகவல்கள் ஏற்கனவே பரவி வந்தது. அதை நிரூபிப்பது போல தான் இப்போது கண்ணனுக்கு உதவி செய்வதற்காக கதிர் பேங்க் ஆபீஸர்களை அடித்ததால் ஜெயிலில் இருக்கிறார். கதிரை வெளியே எடுக்க வேண்டும் என்பதற்காக ஜீவாவும் மூர்த்தியிடம் பேசி அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
மூர்த்திக்கு தான் கண்ணன் மீது கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் இனி கண்ணன் அந்த பேங்க் ஆபிஸர்ஸ் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு பிறகு கதிரை வெளியே எடுத்து மொத்த குடும்பமும் ஒன்று சேர்க்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தனத்திற்கு ஏற்கனவே அடிக்கடி நெஞ்சுவலி வந்து கொண்டிருப்பதால் தனம் உடல்நிலை சரியில்லாமல் போகவே அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே வீட்டில் மீண்டும் வாழ்வதோடு இந்த கதை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications