ஆண் குழந்தையை பெற்றெடுத்த கயல் சீரியல் நடிகை.. குழந்தை பிறந்த சிறிது நேரத்திற்குள் இப்படி ஒரு பதிவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கயல் சீரியலில் கதாநாயகி கயலின் தங்கை கேரக்டரில் நடிக்கும் அபிநவ்யாவிற்கு இன்று ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.

அபிநவ்யாவின் கணவரும் சீரியல் நடிகர் தான். அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வருகிறார்.

கயலை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

கயலை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிக்கும் நடிகை அபிநவ்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. கயல் சீரியலில் நடிகர்கள் பலரும் ரசிகர்களின் மத்தியில் நல்ல பிரபலமாகிவிட்டனர். காரணம் இந்த சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருக்கிறது. ஒரு வீட்டின் மூத்த மகள் தனது மொத்த குடும்பத்தின் சுமைகளையும் தாங்கிக் கொண்டு படும் அவமானங்கள், வேதனையான பாசத்தை பற்றியதாக இந்த சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலை பார்த்த ரசிகர்கள் பலர் எங்கள் வீட்டிலும் இப்படி ஒரு கயல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து கூறி வருகின்றனர்.

ரகசியம் தெரியலையே

ரகசியம் தெரியலையே

ஆனால் ஒரு சில ரசிகர்கள் இந்த மாதிரி ஒரு நபர் இருந்தால் இப்போ உள்ள காலத்தில் அனைவரும் ஏமாற்றி விடுவார்கள் என்று கயலை கடிந்து கொண்டாலும் சீரியலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் அந்த சீரியலில் கயலின் தங்கையாக அமைதியாகவே வீட்டில் அக்காவுக்கு துணையாக இருக்கும் அபிநவ்யா ரசிகர்களின் மத்தியிலும் நல்ல இடத்தை பிடித்து விட்டார். அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது ஆனால் இந்த செய்தியை யாருக்கும் தெரியாமல் தான் இருந்து வந்தது. சீரியலில் இவருடைய வயிறு பெரியதாக தெரிய ஆரம்பித்த பிறகு தான் பிறருக்கு இவருக்கு திருமணம் முடிந்து தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை தெரிந்தது.

சொல்லவே இல்லையே

சொல்லவே இல்லையே

தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை மறைத்து தான் அபிநவ்யா கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு வயிறு நன்றாக தெரிந்த பிறகு ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தின் மூலமாக தன்னுடைய மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டிருந்தார். அவருடைய கணவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் ஜீவா மற்றும் கார்த்திக்கின் தம்பியாக நடித்து வருகிறார். சீரியல்களில் இருவர்களும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளத்திலும் ரசிகர்களோடு பேசி வருகின்றனர்.

நெகிழ்ச்சியான மகிழ்ச்சி

நெகிழ்ச்சியான மகிழ்ச்சி

இப்ப வரைக்கும் அபிநவ்யாவின் எபிசோடுகள் கயல் சீரியலில் வந்து கொண்ட தான் இருக்கிறது. அந்த சீரியலில் இருந்து அவர் இன்னும் விலகவில்லை. இந்த நிலையில் இன்று இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அபிநவ்யா மற்றும் தீபக் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில், "கடவுள் நம்மீது பொலிந்த கருணையின் விளைவாக விலைமதிப்பற்ற ஒரு பரிசை தந்திருக்கிறார். ஒரு சிறு குழந்தையை செவிலியர் என் கையில் வைத்த போது நான் உயிரோடு, உற்சாகத்தோடும் உணர்ந்தேன் என்று தனக்கு ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை இருவரும் தெரிவித்திருக்கின்றனர். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+