கயல் சீரியல் நடிகை தற்கொலையில் திருப்பம்.. கணவர் உருக்கமாக வெளியிட்ட பதிவு!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சுபாஷினியின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை ஐயப்பன்தாங்கலில் இருக்கும் வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, உயிரிழப்பதற்கு முன்பு கணவர் பிபின் சந்திராவுடன் வீடியோ கால் மூலம் பேசியிருந்ததாக கூறப்படுவது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக மாற்றியுள்ளது.

ரசிகர்கள் கருத்து
இந்த சம்பவத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பலரும் நேரடியாக பிபின் சந்திராவையே குற்றம் சாட்டி விமர்சித்து வருகின்றனர். "என்ன நடந்தது?", "ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்?" என்ற கேள்விகளுடன், சிலர் அவரை கடுமையாக திட்டியும் வருகின்றனர். எந்த தகவலும் உறுதியாக தெரியாத நிலையிலும், ஊகங்களின் அடிப்படையில் கருத்துகள் பரவி வருகிறது.
நடிகையின் கணவர் பதிவு
இதற்கிடையில், பெங்களூரில் வசித்து வரும் பிபின் சந்திரா தனது இன்ஸ்டாகிராமில் போட்ட உருக்கமான பதிவு தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில், சுபாஷினியை இழந்த வேதனையை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். "நீ இல்லாமல் நான் இல்லை", "நான் இதை நம்ப முடியவில்லை", "நீ இன்னும் என்னுள் வாழ்கிறாய்" போன்ற வார்த்தைகளால் அவர் தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர்களின் பிறந்தநாள், திருமணநாள் போன்ற முக்கிய தினங்களை ஒன்றாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆசையையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நடந்தது என்ன
இதனால், ஒரு பக்கம் பிபினை குற்றம் சாட்டும் குரல்கள் எழுந்தாலும், மற்றொரு பக்கம் அவர் உண்மையிலேயே துயரத்தில் இருக்கிறார் என்ற அனுதாபக் குரலும் எழுந்து வருகிறது. இதனால் சமூக வலைதளங்களில் கருத்து வேறுபாடு தெளிவாக தெரிகிறது.

கயல் சீரியல் நடிகை இன்ஸ்டா பதிவு
மேலும், சுபாஷினியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவுகளும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன. அவற்றைப் பார்த்த ரசிகர்கள், "இவ்வளவு சந்தோஷமாக இருந்தவர் திடீரென இப்படிச் செய்வாரா?" என்று குழப்பம் தெரிவித்து வருகின்றனர். அவரும், கணவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால், அவர்களுக்குள் பெரிய பிரச்சனை இருந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என பலர் கூறுகின்றனர்.
வழக்கு விசாரணை
இதனால், உண்மையில் என்ன பிரச்சனை நடந்தது, அந்த வீடியோ காலில் என்ன பேச்சு நடந்தது, ஏன் இப்படியான கடுமையான முடிவை எடுத்தார் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், முழு உண்மை வெளிவருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications