தற்கொலை செய்த கயல் சீரியல் நடிகையின் கடைசி பதிவு இதுதான்! இப்படி பண்ணிட்டாங்களே! வருத்தத்தில் பிரபலங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கயல் சீரியல் நடிகை சுபாஷினி மரணம் குறித்து தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அதில் மிகவும் மனதை பதற வைக்கும் விஷயம் என்ன தெரியுமா? அவர் உயிரிழப்பதற்கு முன்பு போட்டிருந்த கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு தான்.

Subashini Kayal Serial Sun TV

கலங்க வைக்கும் பதிவு

"Life lately..." என்று ஒரு சாதாரண கேப்ஷனுடன் சுபாஷினி பகிர்ந்த அந்த வீடியோ - அதைப் பார்த்தால் யாருக்கும் இது ஒரு சோக முடிவிற்கு முன்னோட்டம் என்று கூட தோன்றாது. அந்த பதிவில் ஹேப்பி மியூசிக் பேக்ரவுண்டில் ஓட, சுபாஷினி, ஒரு குட்டியான ஷாட்ஸும், ஒரு டி-சர்ட்டும் போட்டுகிட்டு, ஜாலியாக மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் வாக்கிங் போற மாதிரி இருக்கிறது. ஆப்பிரிக்க நாட்டிலுள்ள கென்யாவில் அவர் இப்படி ஜாலியாக சுற்றி திரிந்திருக்கிறார்.

'இவ்வளவு ஜாலியா போஸ்ட் போட்டவரா இப்படி செஞ்சிருப்பாங்க?'ன்னு ரசிகர்கள் இப்போ வரைக்கும் நம்ப முடியாம தவிக்கிறாங்க. வெளிநாட்டில், இயற்கை அழகை ரசித்தபடி, சிரித்துக் கொண்டே சுற்றி பார்க்கும் காட்சிகள்... ஒரு ரெஸ்டாரண்டில் அமைதியாக உணவு சாப்பிடும் தருணங்கள்... எல்லாமே ஒரு சந்தோஷமான வாழ்க்கையை காட்டுவது போல இருந்தது.

ஆனால் அந்த வீடியோ வெளியான ஒரு நாள் கூட ஆகாமல், அவர் மரணமடைந்த செய்தி வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Kayal Serial

36 வயதான சுபாஷினி ஸ்ரீலங்கா நாட்டை சேர்ந்தவர். இவர் பெங்களூரில் தன்னுடைய கணவர் உடன் வசித்து வந்த நிலையில் ஷூட்டிங் காரணமாக போரூரில் தங்கி வந்திருக்கிறார். கயல் சீரியலில் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கால் பேசிய போது ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சின்ன கேரக்டரில் நடிக்கும் நடிகர்கள் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பிடித்து விடுகிறார்கள். அந்த வரிசையில் சுபாஷினியும் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர்தான்.

எப்போதும் ஆன்லைனில் இருந்தவர்

சுபாஷினி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்தவர். தினமும் ஏதாவது ஒரு பதிவு - புகைப்படம், வீடியோ, ரீல்ஸ் என ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தார். குறிப்பாக அவருடைய கணவருடன் எடுத்த வீடியோக்கள், ஜாலியான தருணங்கள், சிரிப்புகள்... இவை எல்லாம் அவருடைய பக்கத்தில் நிறைய இருந்தது.

ஒரு பதிவில் அவர், "நான் என் கணவரை கண்களாலே கைது செய்த தருணம்" என்று ரொமான்டிக் கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார். அந்த அளவிற்கு தனது உறவை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் காட்டியவர்.

அதுமட்டுமில்லை, குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்கள், நண்பர்கள், சீரியல் கூட்டணி நடிகர்களுடன் எடுத்த ஸ்னாப்கள் - இவை அனைத்தும் அவர் ஒரு சமூகமாக இணைந்த மனிதர் என்பதையே காட்டியது.

இப்படி வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருந்தவர், ஏன் திடீரென இப்படிப் பட்ட முடிவை எடுத்தார்? இதுதான் இப்போது அனைவரையும் துரத்திக் கொண்டிருக்கும் கேள்வி. நேற்று வரை சிரித்த முகம்... இன்று இல்லையே என்ற உணர்வு தான் ரசிகர்களை அதிகமாக பாதித்துள்ளது.

சக நடிகர்களின் உருக்கமான அஞ்சலி

சுபாஷினியுடன் நடித்த நடிகர்கள், நண்பர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். "எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பவர்...", "செட்டில் எல்லாரையும் குஷிப்படுத்துவார்...", "இது நம்ப முடியாத விஷயம்..." என்றெல்லாம் அவர்கள் பகிரும் பதிவுகள், அவர் எவ்வளவு உற்சாகமான மனிதர் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறது.

Subashini Kayal Serial Sun TV

உள்ளே என்ன வேதனை?

சமூக வலைத்தளங்களில் நாம் பார்க்கும் வாழ்க்கை எல்லாமே உண்மையானது அல்ல என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது. சிரிக்கும் முகத்தின் பின்னால் எவ்வளவு வலி இருக்கிறது என்பதை நாமே பல நேரங்களில் கவனிக்காமல் விடுகிறோம்.

இந்த சம்பவம் ஒரு செய்தி மட்டுமல்ல... ஒரு எச்சரிக்கையும் கூட. எந்த பிரச்சனை வந்தாலும், அது தற்கொலை போன்ற முடிவுக்கு காரணமாக இருக்கக்கூடாது. பேசுங்கள்... பகிருங்கள்... உதவி கேளுங்கள்... ஒரு நிமிட தைரியம், ஒரு வாழ்க்கையை காப்பாற்றும். சுபாஷினியின் கடைசி "Life lately" வீடியோ இன்று ரசிகர்களுக்கு ஒரு கேள்வியை மட்டும் விட்டுச் சென்றுள்ளது, "நாம் பார்க்கிற வாழ்க்கை உண்மையா... அல்லது மறைக்கப்பட்ட வலியா?"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+