கெட்டி மேளம் சீரியலில் நடந்த எதிர்பாராத சம்பவம்.. திருமணத்தில் நடந்த குழப்பம்.. இன்றைய அப்டேட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேரமான தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் லட்சுமி மற்றும் வெற்றி என இருவரும் உறவினர் என்று தெரியாமலேயே நெருக்கமாகிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சிவராமன் மற்றும் லட்சுமி என இருவரும் துளசியின் கல்யாணத்திற்காக எம்எல்ஏ வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க வருகின்றனர். எம்எல்ஏவும் அவரது அம்மாவும் இருவரையும் அவமானப்படுத்தி பேசுகின்றனர். ஆனால் எம்எல்ஏவின் மனைவி லட்சுமியிடம் அன்பாக பேசி காபி எடுத்து வரச் சொல்ல எம்எல்ஏ தடுத்து நிறுத்தி விடுகிறார்.

உங்க பொண்ணோட கல்யாணம் முறைப்படி நடக்கணும். என் பொண்ணு உங்க இஷ்டத்துக்கு கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணுவிங்களா என கோபப்படுகிறார். இதையெல்லாம் மீறி எம்எல்ஏ மனைவி லட்சுமி அழைத்து ஒரு புடவையை கொடுத்து குங்குமத்தை கொடுத்து அனுப்புகிறாள்.
அடுத்ததாக சிவராமன் வேலை செய்யும் ஷோரூம்க்கு வந்து மேனேஜர் உட்பட எல்லோருக்கும் பத்திரிக்கை வைக்கிறார். அப்போது மேனேஜர் சிவராமனை தனியாக கூப்பிட்டு கம்பெனியில கிராஸ் கட்டிங் நடக்குது. இன்னும் ரெண்டு வருஷத்துல ரிட்டயர்மென்ட் ஆகுறவங்களுக்கு எல்லாம் விஆர்எஸ் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்.

மேலும் சிவராமனிடம் கையெழுத்து வாங்க சிவராமன் அதிர்ச்சி அடைகிறார். வெளியே காத்திருக்கும் லட்சுமியிடம் இந்த விஷயம் தெரியாமல் சமாளித்து எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுக்கிறார்.
அதன் பிறகு ஸ்ரீகாந்த் வீட்டில் ராஜேஸ்வரி நான் நினைச்ச மாதிரியே உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப் போகிறது. தியாவிற்கு நல்ல அம்மா வர போறாங்க என்று சந்தோஷப்படுகிறாள். அடுத்ததாக இந்த பக்கம் துளசி குடும்பத்தினர் கல்யாணத்திற்கு தயாராக மறுபக்கம் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் கல்யாணத்திற்கு கிளம்புகின்றனர்.

அஞ்சலி துளசியிடம் போனை கொடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு போன் போட்டு எங்க வராங்கனு விசாரி என சொல்கிறாள். துளசியும் ஸ்ரீகாந்த்திற்கு ஃபோன் போட்டு விசாரிக்க வந்துகிட்டே இருப்பதாக சொல்கிறான். மேலும் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்கிறான்.
இன்னொரு பக்கம் வெற்றியும் அப்பாவிற்கு கட்சித் தொண்டன் ஒருவன் போன் போட்டு எதிர்க்கட்சிக்காரர்கள் காசு கொடுத்து நம்ம ஆளுங்க எல்லாரையும் அவங்க பக்கம் இருக்கிறார்கள் என்று சொல்ல முன்னாள் எம்எல்ஏ வெற்றியை கூப்பிட்டுக்கொண்டு வேக வேகமாக காரில் வருகிறார். வெற்றி கார் ஓட்ட வேகமாக போடா என சொல்லிக் கொண்டே வருகிறார்.

மண்டபத்தில் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க இங்கே ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் காரில் வந்து கொண்டிருக்க திடீரென அவர்களது கார் மீது லாரி ஒன்று மோதிவிட்டு சென்று விடுகிறது. இதைத் தொடர்ந்து பின்னாடியே வந்த வெற்றியின் காரும் மோத பெரிய விபத்து ஏற்படுகிறது.
வெற்றி யாருக்கு என்ன ஆச்சு என பார்க்க செல்வதாக சொன்னதும் எம்எல்ஏ அவனை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்று விடுகிறார். மேலும் தனது பிஏ-விடம் நாங்க தான் இந்த விபத்த பண்ணதா தெரிய கூடாது. நம்ம ஆளுங்க வேற யாரையாவது மாத்தி விடு என்று சொல்லி சென்று விடுகிறார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் பாருங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications