விஜய்- சங்கீதா விவாகரத்து பற்றிய கேள்வி.. ஒரே வார்த்தையில் குஷ்பு கொடுத்த பதில்! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் நேற்று முதல் ஒரே பேசுபொருளாக மாறியிருக்கிறது நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து மனு. இந்த விவகாரம் குறித்து பல தரப்பிலிருந்து கருத்துகள் மழையாக விழும் நிலையில், நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஷ்புவின் நேரடி பதில்
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது குஷ்பு மிகவும் தெளிவாக,"இது விஜய் சாரின் பர்சனல் விஷயம். இதில் நாம யாரும் கருத்து சொல்ல கூடாது. கணவன்-மனைவி இருவரும் பேசிக்கிட்டு தீர்மானிக்க வேண்டிய விஷயம். வெளியில இருந்து யாரும் மூக்க நுழைக்க கூடாது"
என்று கூறியுள்ளார்.
சோசியல் மீடியாவில் விஜய் குறித்து கடும் விமர்சனங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், அவருடன் பணியாற்றிய சக நடிகையாகவும், அரசியல் முகமாகவும் இருக்கும் குஷ்பு இப்படிச் சொல்லியது சமநிலையான மற்றும் மரியாதையான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
25 வருடங்களை கடந்த வாழ்க்கை
விஜய் - சங்கீதா திருமணம் 1999 ஆம் ஆண்டு நடந்தது. ரசிகையாக இருந்த சங்கீதாவை விஜய் காதலித்து திருமணம் செய்துகொண்டது அப்போது பெரிய செய்தியாகவே பேசப்பட்டது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் - இருவரும் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில் குடும்பம் மிகவும் தனிமையாகவும், பப்ளிசிட்டியிலிருந்து விலகியும் வாழ்ந்து வந்தது.
பல வருடங்களாக "சினிமாவின் ஸ்ட்ராங் கப்பிள்" என்று சொல்லப்பட்ட இந்த ஜோடி, சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து வராதது ரசிகர்களிடையே ஏற்கனவே சந்தேகத்தை எழுப்பியிருந்தது.
சங்கீதா தாக்கல் செய்த மனு
செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் மனுவில் சங்கீதா பல முக்கிய விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார் என்று தகவல்கள் பரவி வருகிறது. அதில்:
திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில் நடிகை ஒருவர் வந்த பிறகு மனகசப்பு ஏற்பட்டது, 2021 முதல் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வாழ்ந்தோம். அந்த உறவை நிறுத்துவதாக விஜய் உறுதி அளித்தார், ஆனால் மாற்றம் இல்லை. பலமுறை எடுத்துக்கூறியும் பயனில்லை.
மனஅழுத்தம் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறேன், பொது நிகழ்ச்சிகளுக்கு கூட என்னை அழைத்துச் செல்லவில்லை. அவரது வருமானத்திற்கேற்ற நிரந்தர ஜீவனாம்சம் வேண்டும் என்ற வகையில் சுமார் 28 பாயிண்டுகள் குறிப்பிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த தகவல்கள் வெளியானதிலிருந்து விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியிலேயே உள்ளனர். சிலர் இது அரசியல் நுழைவுக்குப் பிறகு ஏற்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்று கூற, மற்றொரு தரப்பு "இது முழுக்க குடும்ப விஷயம்" என்று அமைதியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறது.
சினிமா, அரசியல், குடும்பம் - மூன்றும் சந்திக்கும் இடம்
விஜய் தற்போது முழுமையாக அரசியலுக்குள் வந்துள்ள சூழல். அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கை குறித்து இப்படி ஒரு விவகாரம் பேசப்படுவது இயல்பாகவே பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. அவருடைய அமைதியான தனிப்பட்ட வாழ்க்கை இப்போது பொது விவாதமாக மாறிவிட்டது.
பலர் விமர்சனம் செய்த நேரத்தில், "இது அவர்களுடைய வாழ்க்கை - அவர்கள் முடிவு" என்று கூறிய குஷ்புவின் நிலைப்பாடு சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு பெண்ணாகவும், குடும்ப வாழ்க்கை என்ன என்பதைக் கண்டவராகவும், அரசியல் அனுபவம் கொண்டவராகவும் அவர் அளித்த பதில் முதிர்ச்சியானதாக பார்க்கப்படுகிறது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி












Click it and Unblock the Notifications