அன்று கன்னம் சிவந்தது.. இன்று கண்கள் "சிவந்தன".. குஷ்புவின் கோபத்திற்கு என்ன காரணம்?
சென்னை: பல இடங்களில் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போக ஈகோ பார்க்கும் ஆண்களே காரணமாக இருக்கிறார்கள் என நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு கடும் கோபத்துடன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
1980களில் கனவுக் கன்னியாக இருந்தவர் குஷ்பு. இவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டும் அளவுக்கு மிகவும் பிரபலமடைந்தார். இவர் புஸு புஸு என தோற்றத்துடன் அழகாக இருப்பார்.
இதனால் இவரது பெயரில் குஷ்பு இட்லி என்று மிகவும் பிரபலமடைந்தது. இதுவரை யாருக்கும் கிடைக்காத ஒரு அங்கீகாரம் குஷ்புவுக்கு கிடைத்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் குஷ்பு, தனது கணவர் சுந்தர் சி இயக்கும் படங்களில் கவுரவ தோற்றத்தில் நடித்து வருகிறார்.

மாநில அரசியல்
இவர் மாநில அரசியல், தேசிய அரசியலிலும் கலக்கி வருகிறார். இவரது தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொலைகாட்சி தொடர்களும் வந்துள்ளன. தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் மீரா என்ற சீரியலை இயக்கி நடித்து வரும் குஷ்பு அண்மையில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகை தயாரிப்பாளர்
ஒரே நேரத்தில் நடிகை, தயாரிப்பாளர், கதாசிரியர், அரசியல் என பல துறைகளில் பயணிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் எனக்கும் கணவர் சுந்தர் சி-க்கும் முடியாதது எதுவும் இல்லை என்ற எண்ணம் அதிகம். அதே சமயம் இதை செய்ய வேண்டாம் என மனதில் லேசாக தோன்றினால் அதை நாங்கள் செய்யவே மாட்டோம்.

ஒரே நேரத்தில் பல வேலைகள்
எனக்கு ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் மல்டிடாஸ்கிங் மிகவும் பிடித்தமான ஒன்று. சின்னத்திரையை பொருத்தவரை பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. ஏராளமான பெண் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அதே போல முன்பெல்லாம் சின்னத்திரைக்கு ஒரு நடிகை வந்து விட்டால் சினிமா மார்க்கெட் போய்விட்டது என்கிறார்கள்.

பெரிய நடிகர்கள்
ஆனால் அது தவறு. இன்று பெரிய நடிகர்கள், நடிகைகளே இன்று சினிமா மற்றும் சின்னத்திரையில் இருக்கிறார்கள். எனவே இரண்டு திரைக்கும் இனி வேறுபாடே கிடையாது. இன்றைய இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் வெற்றியை சீக்கிரமே எதிர்பார்க்கிறார்கள்.

பொறுமை பொறுப்பு
கொஞ்சம் பொறுமை, பொறுப்பு, தைரியம், எல்லாமே இருந்தால் எல்லாவற்றிலும் சாதிக்க முடியும். பல இடங்களில் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருக்க ஈகோ பார்க்கும் ஆண்களே காரணமாக இருக்கிறார்கள்.

பிரச்சினைகள்
அதே போல் வீட்டில் தங்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை சகித்து கொண்டு அது பற்றி வெளியில் பேசாமல் பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் பிரச்சினைகளை கண்டு அஞ்சாமல் தைரியமாக குரல் கொடுத்தால் மட்டுமே தீர்வு காண முடியும். நான் இயக்கி வரும் மீரா சீரியலும் பெண்களின் தைரியத்தை குறித்ததாகவே இருக்கும் என்றார் குஷ்பு. குடும்ப வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்க கலர்ஸ் தமிழ் சேனல் மற்றும் குஷ்பு இணைந்து ஒரு புரோமோவை உருவாக்கினார்கள். அதில் குஷ்புவின் கன்னத்தில் கைரேகை பதிந்து சிவந்த நிலையில் இருந்த புகைப்படம் இன்ஸ்டாவில் வெளியானது. அந்த படத்தில் வன்முறை வேண்டாம், என்னுடன் சேர்ந்து தைரியமாக பேசுங்கள் மீரா என கேப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications