கோலங்கள் “ஆதி”யின் மனைவி இந்த சீரியல் நடிகையா? விஜய் பட வாய்ப்பை மறுத்த காரணம்.. அவரே சொன்ன தகவல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் ஆதி கேரக்டரில் பிரபலமடைந்த அஜய் கபூர் மனைவி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியலில் நடித்து வரும் நிலையில் தான் விஜய் பட வாய்ப்பை எதற்காக மறுத்தேன் என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக சீரியல்கள் சினிமாக்களில் பலருக்கும் பிரபலமானவர்களின் குடும்பங்கள் வெளியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து அவர்கள் பற்றிய விவரங்கள் வெளியே தெரியும் போது ரசிகர்களுக்கு வியப்பை கொடுக்கும். அதுபோலத்தான் சீரியல் நடிகர் அஜய் கபூர் அதாவது கோலங்கள் சீரியலில் ஆதி கேரக்டரில் வில்லனாக நடித்து மிரட்டியவர். அஜய் கபூரின் மனைவி சீரியல் நடிகை என்பது பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.

அஜய் கபூரின் மனைவி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியலில் நடித்து வருகிறார். அதுபோல அவர் ஏற்கனவே வெளியான ருத்ரவீணை என்ற சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருக்கிறார். விஜய் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்த நிஷா கபூர் இப்போது சன் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது அதில் நிஷா கபூர் பேசுகையில் நான் ஸ்கூல் படித்து முடித்ததும் மாடலிங் பண்ண தொடங்கிவிட்டு கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் மூலமாக நிறைய விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அந்த நேரத்தில் நான் எதிர்பார்க்காத வகையிலே எனக்கு சினிமா பட வாய்ப்புகளும் வந்தது. ஸ்கூல் படிக்கும் போதே கேமரா முன்பு நடிக்க வேண்டும் என்று தான் எனக்கு ஆசை. அதற்கான முயற்சிகளை நான் எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்.
அதற்கு காரணம் எனக்கு சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை. சீரியலில் நடிப்பது தான் பிடித்திருந்தது சீரியலில் நடித்தாலே போதும் என்று நினைத்திருந்தேன். அந்த நேரத்தில் தான் எனக்கு ருத்ரவீணை சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சீரியலில் நான் நடித்தேன். ஆரம்பத்தில் விஜய் பட வாய்ப்பு நான் நிராகரித்து இருந்தாலும் இப்போ வருத்தமாக இருக்கிறது. அந்த படம் பெரிய அளவில் விஜய்க்கு வெற்றி பெற்றிருந்தது.
அதுபோல அந்த படத்தில் நடித்த நடிகைக்கு பிரபலத்தை கொடுத்து இருந்தது. ஆனால் எனக்கு அது ஏனோ அந்த நேரத்தில் சினிமா வேண்டாம் என்று தோன்றியது. அதனால் சினிமாவில் நடிக்கவில்லை. இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். நான் முதல் முதலில் நடித்தது டாடா டீ விளம்பரம் தான். ருத்ர வீணை சீரியலுக்குப் பிறகு 20 வருடங்கள் கழித்து இப்போது மல்லி சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறேன் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் நடிகர் அஜய் கபூர் மனைவி நிஷா தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications