5 ரூபாய் சம்பளம், தினக்கூலியான வாழ்க்கை.. கோலங்கள் சீரியல் நடிகருக்கு இந்த நிலைமையா?
சென்னை: கோலங்கள் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் அபிஷேக் சங்கர் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதோடு சினிமா துறைக்கு தான் வருவதற்கு முன்பு என்ன மாதிரி வேலை செய்து கொண்டிருந்தேன் என்பதைப் பற்றியும் அபிஷேக் சங்கர் பகிர்ந்து இருக்கிறார்.
ஐந்து ரூபாய் சம்பளத்தில் தினக்கூலியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி காதல் திருமணம் செய்து கொண்டது குறித்து அபிஷேக் சங்கர் பகிர்ந்திருக்கும் தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அது பற்றி பார்ப்போம்.

சினிமாவாக இருந்தாலும் சரி சீரியல் ஆக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் நடிகர்களின் கேரக்டர் படியே அவர்களுடைய வாழ்க்கை இருக்கும் என்று நாம் நினைத்து வருகிறோம். ஆனால் நடிப்பு என்பது வேறு நிஜ வாழ்க்கை என்பது வேறு என்று பலர் பேசும் போது தான் தெரிகிறது. அந்த மாதிரி தான் கோலங்கள், புது புது அர்த்தங்கள் போன்ற பல சீரியல்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அபிஷேக் சங்கர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பகிர்ந்து இருக்கும் தகவல் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
அதாவது ஞானசேகரன் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான மோகமுள் என்ற படத்தின் மூலமாகத்தான் அபிஷேக் சங்கர் அறிமுகமாகி இருந்தார். அதற்குப் பிறகு பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதோடு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மொழிகளிலும் அபிஷேக் சங்கர் நடித்து வந்தார். 2010 ஆம் ஆண்டு கதை என்ற படத்தை இயக்கி இருந்தார்.
அதுபோல சின்ன திரையில் 2003 ஆம் ஆண்டிலிருந்து சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் என்று சீரியலில் தேவயானியோடு நடித்திருந்தார். சீனிமா சீரியல் என்று நடித்துக் கொண்டிருக்கும் அபிஷேக் சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவிற்கு வரும்போது இவருக்கு சினிமா பின்புலம் கிடையாதாம்.
தினகூலி வேலைக்காரராக தான் இருந்திருக்கிறார். முதல் படம் நடித்த பிறகு அந்த படம் ரிலீஸ் ஆகுமா என தெரியாமல் தான் அபிஷேக் ராஜா மேற்கு மாம்பழத்தில் ஒருவருக்கு டிரான்ஸ்லேட் பண்ற வேலையை பார்த்து இருக்கிறார்.ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மொழிமாற்றம் செய்து கொடுத்தால் ஒரு பக்கத்துக்கு ஐந்து ரூபாய் பணம் கிடைக்குமாம்.
ஒரு பத்து பக்கம் பண்ணி கொடுத்துவிட்டு கிடைக்கும் 50 ரூபாயை வாங்கிக்கொண்டு நேராக தேவி தியேட்டருக்கு அபிஷேக் ராஜா சென்று விடுவாராம். அங்கு படம் பார்த்துவிட்டு அங்கே இருந்து நடந்து சின்மயா நகருக்கு வருவாராம். படம் பார்த்த இரண்டு ரூபாய் 90 காசு போக மீதி பணம் இருக்குமாம். அதை சேர்த்து வைத்துக் கொண்டிருப்பாராம். அந்த நேரத்தில் தான் அபிஷேக் சங்கர் காதலித்துக் கொண்டிருந்தாராம்.
இப்போது அவர் திருமணம் செய்திருக்கும் பெண்ணை தான் எட்டு வருடமாக அபிஷேக் சங்கர் காதலித்திருக்கிறார். அதுபோல அபிஷேக் சங்கரின் மனைவி பெரிய பணக்கார வீட்டு பெண்ணாம். வசதி வாய்ப்புகள் மற்றும் பெரிய அளவில் பின்புலம் இருந்தாலும் அவர் சங்கரை காதலித்திருக்கிறார். அவர் மும்பையில் இருந்ததால் அபிஷேக் சங்கர் ஒவ்வொரு வாரமும் அவரிடம் போன் பேசுவதற்காகவே தான் சேர்த்து வைத்திருந்த காசு எல்லாம் செலவாகிவிடுமாம். ஆனாலும் அந்த ஒரு நாளுக்காகவே நான் காத்திருப்பேன் என்றும் அபிஷேக் சங்கர் பேசி இருக்கிறார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications