“கோலங்கள்” சீரியல் ஆனந்தியா? அழகான தலைமுடியை இழந்தது இதற்காகவா? நெகிழ வைத்த நடிகை மஞ்சரி
சென்னை: நடிகை மஞ்சரி கோலங்கள், அண்ணாமலை போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சீரியலில் போல்டான கேரக்டரில் நடித்த மஞ்சரி இப்போது தலைமுடி இல்லாமல் பார்த்ததும் அடையாளம் தெரியாத வகையில் மாறி இருக்கிறார். அவருடைய லேட்டஸ்ட் பேட்டி இணையத்தில் அதிகமான ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றான கோலங்கள் சீரியல் இப்ப வரைக்கும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் நடிகை தேவயானி கதாநாயகியாக நடித்திருந்தார். அவருக்கு சின்ன திரையில் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது கோலங்கள் சீரியல் தான். இதே சீரியலில் ஆனந்தி கேரக்டரில் தேவயானியின் தங்கையாக நடிகை மஞ்சரி நடித்திருந்தார். இந்த கேரக்டர் பெரிய அளவில் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது.

அதுபோல அண்ணாமலை சீரியலிலும் இவர் நெகட்டிவ்வான கேரக்டரில் நடித்து இருந்தார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் youtube சேனல் ஒன்றில் தன்னுடைய தற்போதைய நிலை என்ன என்பதும், தான் எதனால் சீரியலில் இருந்து விலகினேன் என்பது பற்றியும் பேசி இருக்கிறார். அப்போது அவர் தலைமுடி இல்லாமல் இருப்பதை பார்த்ததும் அதிர்ந்து போன தொகுப்பாளர் அவரிடம் அதற்கான காரணத்தை கேட்டிருக்கிறார்.
அதற்கு மஞ்சரி பேசுகையில் நான் இப்போது சிங்கப்பூரில் இருக்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே இங்கிருந்து நான் சீரியலில் நடிப்பதற்காக தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்தேன். கோலங்கள் சீரியலில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது கர்ப்பமாக இருந்ததால் என்னால் விமானத்தில் அதிகமாக பயணம் செய்ய முடியவில்லை என்றுதான் சீரியலில் இருந்து விலகினேன். ஆனால் நான் சீரியலில் இருந்து விலகியதை மக்கள் விரும்பவில்லை.

குழந்தை பிறந்த மூன்று மாதம் கழித்து இயக்குனர் திருச்செல்வம், தேவயானி மேடம், சத்யபிரியா மேடம் என எல்லோரும் என்னை போன் செய்து கூப்பிட்டதால்தான் நான் கோலங்கள் சீரியலில் மீண்டும் நடிக்க வந்தேன் என்று கூறியிருக்கிறார். அதோடு தான் இப்போது தலைமுடி இல்லாமல் இருப்பதற்கு காரணம் இங்கு குழந்தைகள் கேன்சர் சொசைட்டி ஒன்று இருக்கிறது. அங்கிருக்கும் குழந்தைகள் அனைவரும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் சிகிச்சை எடுக்கும் போது அவர்களுடைய தலைமுடி எல்லாம் உதிர்ந்து விடும். அதனால் அவர்கள் தங்களுக்கு முடி இல்லையே என்று வருத்தப்படுவார்கள். அவர்களுக்காக நிறைய பேர் முடியை தானமாக கொடுப்பார்கள். அப்படி கொடுக்கப்படும் முடியை விக்காக செய்து அவர்கள் பயன்படுத்திகொள்வார்கள். அதற்காகத்தான் நான் என்னுடைய தலைமுடியை கொடுத்திருந்தேன்.

நான் கடவுள் இடம் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தேன். அதற்காக தலை முடியை காணிக்கை செலுத்த வேண்டும் என்று இருந்த நேரத்தில் தான் எனக்கு இந்த டொனேஷன் பற்றி தெரிய வந்தது. கடவுளிடம் முடியை கொடுத்து அது வீணாக குப்பை தொட்டிக்கு போவதை விட வருடத்திற்கு இரண்டு முறை கடவுளின் பெயரைச் சொல்லி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு டொனேஷன் செய்து விடுவேன். இது எனக்கு மன நிறைவை கொடுத்திருக்கிறது. இப்போதும் சிலர் நடிக்க கூப்பிடுகிறார்கள். நான் நடிக்க வந்தால் இப்போது இருக்கிற இதே கெட்டப்பில் தான் வருவேன் என்று சொல்லிவிட்டேன் என்று அந்த பேட்டியில் மஞ்சரி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications