லோன்ல தான் மகளுக்காக கார் வாங்கினேன்! ஆனாலும்.. நடந்த விஷயம்! நடிகர் கொட்டாங்குச்சி ஓப்பன் அப்
சென்னை: காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் கொட்டாங்குச்சி தன்னுடைய மகள் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவருடைய 12 வது பிறந்த நாளில் கார் ஒன்றை வாங்கி இருந்தார். அது குறித்து முதல் முறையாக கொட்டாங்குச்சி சில விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.
அந்த வகையில் ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் கொட்டாங்குச்சி தன்னுடைய திறமை இருந்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இப்போது ஒரு சில திரைப்படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் அவருடைய மகள் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதுவும் நடிகை நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் மற்றும் நடிகை திரிஷாவுடன் சதுரங்க வேட்டை போன்ற பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படத்தில் கொட்டாங்குச்சி மற்றும் அவருடைய மகள் இருவரும் நடித்திருந்தனர்.
இப்படியாக இவர்களுடைய சினிமா வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய மகள் ஆசைப்பட்டபடி தன்னுடைய நிலைமையை மீறி கொட்டாங்குச்சி 13 லட்சத்தில் ஒரு கார் வாங்கி இருக்கிறார். அது குறித்த வீடியோவை அவர் பகிர இணையத்தில் பலரும் பாராட்டி வாழ்த்துக்கள் கூறி வந்தனர்.
ஒரு சிலர் அவரை விமர்சித்தும் வருகிறார்கள். இப்படியான நிலையில் தான் எதற்காக கார் வாங்கினேன் என்பது பற்றி கொட்டாங்குச்சி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் ,என்னுடைய பொண்ணுக்கு பெரிய கார் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அவளுக்கு கார்ல ஓபனா நின்னு வானத்தை பாக்குற மாதிரி கார் வாங்கணும்னு ஆசைப்பட்டா. அந்த மாதிரி கார் வாங்கணும்னு அவளுக்கு ஏக்கமாகவே மாறிவிட்டது.
எப்பவும் சூட்டிங் போற இடத்தில் வர்ற காரை விரும்பி பார்ப்பார். அந்த மாதிரி கார்கள் வந்தாலே அதில் டிராவல் பண்ணுவா.. அதுக்காக ஓடிப்போய் நின்னுக்கு வா மற்ற பிள்ளைங்க போகும்போது இவளுக்கும் அந்த காரில் போக வேண்டும் என்று ஆசை வந்துடுச்சு. அதனாலேயே என்கிட்ட அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பா. அதற்கான சூழ்நிலை இப்பதான் வந்திருக்கு. என்கிட்ட இதுக்கு முன்னாடி மாருதி 800 கார் இருந்துச்சு.
அது அடிக்கடி நின்னுடும். ஸ்டார்ட் பண்றதுக்கு ரொம்பவே கஷ்டப்படுவோம். அதனால் ஒரு கார் வாங்க வேண்டும் என்று அவசியம் வீட்டில் ஏற்பட்டபோது மகளுக்கு பிடித்த காரையே வாங்கி கொடுத்துவிடலாம் என்று ஆசைப்பட்டேன். என்னுடைய மகளின் பனிரெண்டாவது பிறந்த நாளில் அவளைக் கூட்டிட்டு போய் காரை சர்ப்ரைஸாக காட்டியதும் அவ அடைஞ்ச சந்தோசத்துக்கு அளவே இல்லை.
Kia sonet கார்ல என் பொண்ணு ஆசைப்பட்டபடி காரில் ஓப்பனா வானத்தை பார்க்கிற மாதிரி எல்லா வசதிகள் இருக்குன்னு தெரிஞ்சது. அதனால்13 லட்சம் ரூபாய்க்கு காரை வாங்கி கொடுத்தேன். எங்களோட வசதிக்கும் மீறி லோன் வாங்கித்தான் இப்ப இந்த காரை வாங்க முடிஞ்சது. ஆனால் என்னுடைய பொண்ணோட சந்தோஷம் எனக்கு ரொம்பவே முக்கியம். எவ்வளவு லட்சமாக இருந்தாலும் என் மகளுக்காக நான் வாங்குவேன்.
அவளை சந்தோஷப்படுத்தி பார்ப்பேன். கஷ்டம் கஷ்டம்னு நினைச்சுட்டே இருந்தா நம்ம வாழ்க்கையில் அந்த கஷ்டம் மட்டும் தான் ஜெயிக்கும். நாம வாழற நாட்களில் சந்தோஷத்தை இழந்து விடுவோம். தாய் தந்தையை சந்தோஷப்படுத்தி பார்க்க அவங்க இப்போ உயிரோட இல்ல. தாய் தந்தையா என்னுடைய மகள்தான் இருக்கிறா. அவளை சந்தோஷப்படுத்தி பார்க்கும்போது அப்பா அம்மாவே சந்தோஷப்பட்ட மாதிரி ஒரு ஃபீல் வருது என்று நடிகர் கொட்டாங்குச்சி எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications