Kpy பாலா காதலிப்பது இந்த சீரியல் நடிகையா? மேடையிலே ப்ரபோஸ் செய்து விட்டாரே.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சீரியல் நடிகை சோபனாவை தான் காதலிப்பதாக கூறி அவரிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இணையத்தில் அதிகமாகும் கொண்டாடப்படும் நடிகராகவும், சமூக ஆர்வலராகவும் kpy பாலா இருந்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிறகு பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இப்போது திரைப்படங்களிலும் முன்னணி நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தனக்கு கிடைக்கும் சின்ன வருமானத்திலும் அதிகமாக உதவி செய்து வரும் பாலா இணையத்தில் அதிகமானவர்களால் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறார்.

கஷ்டப்படும் பெண்களுக்கு ஆட்டோ, வாகன வசதி இல்லாத ஊருக்கு ஆம்புலன்ஸ், விவசாயிகளுக்கு உதவி என்று பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் பாலா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது சீரியல் நடிகை சோபனா அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் முத்தழகுவாக நடித்துக் கொண்டிருக்கிறாரே அவர்தான். அவரை தான் காதலிப்பதாக பாலா கூறியிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியை தான் அடைந்து இருப்பார்கள்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பாலா ஒரு பொண்ணை காதலித்து வருவதாகவும் ஆனால் அந்த பொன் வீட்டில் பாலா கிடைக்கும் வருமானத்தை எல்லாம் உதவியே செய்து விடுவதால் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாலா என இப்போது சோபனாவிடம் நான் உன்னை காதலிக்கிறேன். உன்னை வாழ்க்கை முழுக்க நன்றாக பார்த்துக் கொள்வேன்.

நம்முடைய திருமணத்திற்கு பிறகு எங்க அம்மா என்ன சொன்னாலும் நான் அதை கண்டு கொள்ள மாட்டேன். அதுபோல நீ எங்க அம்மாவை பற்றி என்ன சொன்னாலும் நான் அதையும் கண்டு கொள்ளாமல் இருவருக்கும் நடுநிலையாக இருப்பேன் உன்னுடைய கனவுகளுக்கு நான் துணையாக தான் எப்போதும் இருப்பேன். நீ என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறியா? என்னுடைய காதலுக்கு நீ சம்மதம் சொன்னால் நம்முடைய திருமணத்திற்கு இன்விடேஷன் அடிக்க சொல்லி விடலாம்.

அதே நேரத்தில் தனியார் சேனலில் நம்முடைய திருமண வீடியோவை விற்று விட்டால் அதில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்துவிடும். அவர்களே நம்ம திருமணத்தில் இலையில் தண்ணீர் தெளிப்பதில் இருந்து கிடா வெட்டுவது, வருகிறவர்களுக்கு பன்னீர் தெளிக்கிறது வரைக்கும் எல்லாவற்றையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டு விடுவார்கள் என்று ரோபோ சங்கரை தாக்கி பேசுவது போல பேசி இருக்கிறார்.
முதலில் இதற்கு கன்வென்சாகாமல் இருந்த ஷோபனா கடைசியில் உன்னை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது என்று தன்னுடைய காதலை பாலாவின் கையில் இருந்த ரோஸை பிடிங்கி அவருக்கே கொடுத்து தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் இது நிஜத்தில் பாலா காதலித்து அந்த நடிகையிடம் தன்னுடைய காதலை சொன்னாரா? அல்லது நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்காக இப்படி பேசினாரா? என்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications