KPY Bala: வீண்பழி வேண்டாம்! Kpy பாலாவுக்கு பிளான் போட்டுக் கொடுத்ததே நான் தான்! அமுதவாணன் ஓபன்
சென்னை: சின்னத்திரை உலகில் தனது இயல்பான நகைச்சுவையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் கேபிஒய் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தனது தனித்துவமான கவுண்டர்கள் மூலம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இவர், இப்போது மக்களின் வாழ்வில் நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்றி, ஒரு தனி மனித அரசாங்கமாக வலம் வருகிறார். ஆனால் அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் கேபிஒய் பாலாவுக்கு சப்போர்ட் செய்து அமுதவாணன் பேசி இருக்கிறார்.

ஒரு கலைஞனின் பெருந்தன்மை
வாய்ப்புகளைத் தேடி அலைந்த பாலா, தனது திறமையால் விஜய் டிவியில் தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, ஒரு தவிர்க்க முடியாத கலைஞராக உயர்ந்தார். ஒரு கட்டத்தில், பாலா இல்லாத விஜய் டிவி நிகழ்ச்சி இல்லை என்ற நிலை உருவானது. இவரது திரைப்பயணம் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் தொடங்கியது. இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய பாலா, தான் மக்களுக்குச் செய்யும் உதவிகளை சேவை என்று சொல்ல மாட்டேன், அது என்னுடைய கடமை என்றுதான் கூறுவேன் என்று தெரிவித்தார். இது, தமிழக மக்களின் மனங்களில் அவருக்கு நீங்கா இடத்தைப் பெற்றுத் தந்தது. மேலும், மக்கள் நலனில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட கேப்டன் விஜயகாந்த் வழியில் பயணிக்க விரும்புவதாகவும் அவர் கூறியது பலரின் பாராட்டுகளைப் பெற்றது.
கேபிஒய் பாலா - அமுதவாணன் நட்பு
பாலாவுடன் நெருக்கமாகப் பயணித்து வரும் நடிகர் அமுதவாணன், பாலாவின் பெருந்தன்மை குறித்துப் பேசியது பலரையும் நெகிழ வைத்தது. "பாலா என்னிடம் முதல் நாள் எப்படி மரியாதையாக, பணிவோடு வந்தானோ, அதே பாலாவாகத்தான் இன்றும் இருக்கிறான். இன்று அவன் பெரிய பிரபலமாக இருந்தாலும், அன்று எப்படி நடந்து கொண்டானோ அதே பாலாவைத்தான் இன்றும் பார்க்கிறேன்" என்று அமுதவாணன் பெருமையுடன் குறிப்பிட்டார்.
மேலும், பாலாவின் கடின உழைப்பையும், உதவும் மனப்பான்மையையும் அமுதவாணன் எடுத்துரைத்தார். "இன்று இளையராஜாவே பாராட்டும் அளவிற்கு பாலா உயர்ந்திருக்கிறான். அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. ஏனென்றால் அவன் வறுமையில் இருந்து வந்தவன். இன்று அவன் சம்பாதிக்கும் காசு அனைத்தையும் மக்களுக்காகச் செலவழிக்கிறான் என்றால், சிறுவயதில் அவன் பட்ட கஷ்டங்கள்தான் அதற்குக் காரணம்" என்று கூறினார். இந்த உதவிகள் விளம்பரத்திற்காகவோ, பிறரின் பணத்தாலோ இல்லை என்றும், அது அவனது சொந்த உழைப்பு என்றும் அமுதவாணன் உறுதியாகத் தெரிவித்தார். பாலாவுக்குப் பக்கபலமாக அவரது பெற்றோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வறுமையில் இருந்து வந்து, தன்னுடைய உழைப்பால் உயர்ந்த பாலா, தான் அனுபவித்த கஷ்டங்களை மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணத்தில், வசதியில்லாத ஏழைக் குழந்தைகளை படிக்க வைப்பது, வயதில் பெரியோர்களுக்கு உதவுவது, மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுப்பது எனப் பல உதவிகளைச் செய்து வருகிறார் இன்று அமுதவனை பேசி இருக்கிறார். நேற்றிலிருந்து பாலா பற்றிய சில செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது இன்னொருவரின் கைக்கூலி அவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி அரசாங்கத்தையே கலைக்கும் அளவிற்கு அவர் செல்வாக்கு மிக்க நபராக மாற வைக்க வேண்டும் என்று தான் ஒரு சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்றெல்லாம் சிலர் பேசிக் கொண்டிருந்தனர் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்போது அமுதவாணன் பேசி இருக்கிறார். அமுதவாணனை போலவே மதுரை முத்துவும் பாலாவுக்கு சப்போர்ட் செய்திருக்கிறார். பாலா செய்த உதவியை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் இப்படி அசிங்கப்படுத்தாதீர்கள், தேவையில்லாத வீண்பழி போடாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
ஒரு சாதாரண மனிதன் தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்து, தனது செயல்களால் வாழ வைக்கும் இந்த அசாத்தியப் பயணம், பலருக்கும் ஒரு உத்வேகமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications