காந்தி கண்ணாடி படத்திற்கு விமர்சகர்கள் இதனால்தான் ரிவ்யூ கொடுக்கவில்லை! அந்தணன் சொன்ன விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் கேபிஒய் பாலா. நகைச்சுவை மட்டுமல்லாமல், சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி, ஒரு பன்முகத்திறமையாளராகத் திகழ்ந்து வருகிறார். தனது பன்முகத் திறமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, காந்தி கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். பாலா நடித்த காந்தி கண்ணாடி படத்திற்கு அதிகமான விமர்சனங்கள் கொடுக்கப்படவில்லை என்று எழுந்த சர்ச்சைக்கு திரைப்பட விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

கமர்ஷியல் படமாக காந்தி கண்ணாடி
ஷெரீஃப் இயக்கிய காந்தி கண்ணாடி திரைப்படம், கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெறும் ₹3 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில், நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஒரு மெசேஜ் கமர்ஷியல் படமாக உருவாகி, சமூக விழிப்புணர்வையும் நல்ல நோக்கம் கொண்டதாகவும் இருந்தது. படத்தில் தனது நகைச்சுவை பாணியில் இருந்து விலகி, பாலா உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி ஒரு நடிகராக வெற்றி பெற்றுள்ளார் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. படம் வெளியான சில நாட்களில் ₹4 கோடியை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
விமர்சகர்களால் புறக்கணிக்கப்பு
காந்தி கண்ணாடி படத்தின் வெளியீட்டில் பல பிரச்சனைகளைச் சந்தித்ததாகப் பாலா வேதனையுடன் தெரிவித்துள்ளார். படத்திற்குப் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றும், வைக்கப்பட்ட கட் அவுட்கள் உடைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பெரிய படங்களுக்கு ரிவ்யூ கொடுக்கும் விமர்சகர்கள் சிறிய படங்களுக்கு ரிவ்யூ கொடுப்பதில்லை என்றும், அதுவே படம் மக்களிடம் சென்று சேராததற்கு காரணம் என்றும் பாலா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வலைப்பேச்சு அந்தணன் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர், "பாலா ஒரு நல்ல மனிதர். அவருக்கு ஒரு பெரிய மனசு உண்டு. பாலா ஜெயித்தால், அவரை நம்பி இங்குள்ள நிறைய மனிதர்கள் பிழைப்பார்கள்" என்று பாராட்டினார்.
விமர்சகர்கள் ஏன் இந்தப் படத்தைப் புறக்கணித்தார்கள் என்பது குறித்துப் பேசிய அந்தணன், "விமர்சகர்கள், பாலாவின் மனதை புண்படுத்தக்கூடாது என்பதற்காகவே இந்த படத்திற்கு ரிவ்யூ கொடுக்கவில்லை" என்று ஒரு புதிய கோணத்தை முன்வைத்துள்ளார். படம் எதிர்பார்த்த அளவு நன்றாக இல்லாவிட்டால், அதை நேர்மையாக விமர்சித்தால் அது பாலாவின் மனதை புண்படுத்தும் என்பதால், விமர்சகர்கள் அமைதி காத்ததாக அவர் கூறுகிறார்.
அதே சமயம், படத்தின் இயக்குந ர் தொடர்ந்து, "படத்தை முடக்க ஒரு சதி நடக்கிறது" என்று கூறி வருகிறார். அதற்குப் பதிலளித்த அந்தணன், "பாலாவுக்கு எதிரிகள் இல்லை. தேவை இல்லாமல் யார் மீதும் பழியைப் போடக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
காந்தி கண்ணாடி திரைப்படம், விமர்சகர்களால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதா? அல்லது ஒரு சிறிய படத்தின் வெற்றிக்கு விமர்சனங்கள் மட்டும் போதுமா? என்பதைப் பற்றித் திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஒரு விவாதம் தற்போது எழுந்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications