KPY நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..கண்கலங்கி அழுத பிரபலங்கள்..மனதை நெருடும் காட்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சாம்பியன் 4 நிகழ்ச்சியில் இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர்களின் உருவம் பொறித்த விருது கேடயங்கள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் மயில்சாமி, மனோபாலா, வடிவேலு பாலாஜி போன்றோரின் புகைப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் கண் கலங்கி அழுதிருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் முதல் சீசன் வெற்றியடைந்ததும் அதைத் தொடர்ந்து அடுத்த அடுத்த சீசன்கள் தொடங்கப்படுவது வழக்கமானது தான். அந்த வகையில் தற்போதும் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சி நான்காவது சீசனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அதை வழங்குவதற்காக பல முன்னணி நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் க்ராண்ட் பின்னாலே நடைபெற காத்திருக்கிறது. இது குறித்து பிரமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் நடந்த நிகழ்வுகள் தான் பலருடைய மனதையும் நெருட செய்திருக்கிறது. அதாவது விருது கேடயங்களில் சில மாதங்களுக்கு முன்பு இறந்த நகைச்சுவை கலைஞர்களான மயில்சாமி, மனோபாலா, வடிவேலு பாலாஜி ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு இவர்களைப் பற்றி பிரபலங்கள் பேசுகையில் மைனா, தாடி பாலாஜி, அமுதவாணன் உட்பட அங்கிருந்து அனைவரும் கண்கலங்கி அழுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் இதற்கு அதிகமான கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதாவது இந்த மாதிரி அழுகாச்சி சீன்களை அடிக்கடி போடாதீங்க என்று கூறியிருக்கின்றனர்.
அதோடு இதில் இந்த வரிசையில் நடிகர் விவேக் புகைப்படம் இல்லையே என்னாச்சு என்றும், இந்தமாதிரி இறந்தவர்களின் போட்டோ போட்டு அவர்களுடைய பெயரால் உங்களுக்கு டிஆர்பி ஏற்றிக் கொள்ளாமல், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று ரசிகர்கள் கமாண்டுகளில் விஜய் டிவிக்கு வேண்டுகோளும் வைத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications