படையப்பா கிளைமாக்ஸில் நடந்த சண்டை.. காரணமே ரஜினி செய்த செயல்! கே.எஸ் ரவிக்குமார் உடைத்த ரகசியம்
சென்னை: இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது தான் இயக்கி, நடித்த "படையப்பா" திரைப்படத்தின் கிளைமாக்ஸ் உருவாக்கத்தின்போது ரஜினிகாந்த்தால், ரமேஷ் கண்ணாவோடு ஏற்பட்ட சண்டை குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தான் இயக்கும் பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து பலருடைய கவனத்தையும் ஈர்த்து இருப்பார். அதுவும் 90ஸ் காலகட்டத்தில் அவருடைய திரைப்படத்திற்கென்று அதிகமான ரசிகர்கள் உண்டு. ஒரு சில திரைப்படத்தில் வில்லனாகவும் சில திரைப்படத்தில் காமெடி கேரக்டரிலும் என்ட்ரி கொடுத்து பலருடைய மனதை கவர்ந்த கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா திரைப்பட அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் கே எஸ் ரவிக்குமார் பேசுகையில் படையப்பா திரைப்படத்தில் ஆரம்பத்தில் இருந்தே சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தது. அதிலும் கிளைமேக்ஸில் நடந்த பிரச்சனை வெளியே யாருக்கும் பெரியதாக தெரியாது. அதில் நீலாம்பரி இறந்ததும் அவருடைய கண்களை மூடிவிட்டு ரஜினிகாந்த் நடந்து போய் வேல் எடுத்துட்டு வருவார்.
அப்போது "வெற்றிக் கொடி கட்டு" பாட்டு வைக்க நான் சொல்லி இருந்தேன். ஆனால் ரஜினிகாந்த், ரமேஷ் கண்ணாவிடம் அந்த பாட்டு செட் ஆகாது. "எம்பேரு படையப்பா பாட்டு வைக்க சொல்லு" என்று ஏத்திவிட அதை வைத்து ரமேஷ் கண்ணாவும் பிரச்சனை செய்தார். அதனால் சின்ன சண்டையும் ஏற்பட்டது. ரஜினிகாந்த் இப்படித்தான் பல நேரங்களில் என்னிடம் எதையும் நேரடியாக சொல்லாமல் ரமேஷ் கண்ணாவிடம் இதை மாற்றினால் நன்றாக இருக்கும். அதை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று எதையாவது ஏற்றி விடுவார்.
ரமேஷ் கண்ணா என்னிடம் வந்து இப்படி செய்வோம் அப்படி செய்வோம் என்று சொல்லி பிரச்சனை செய்வார். அந்த மாதிரி தான் அப்போது கூட நடந்தது. ஆனால் நான் என் பேரு படையப்பா பாட்டு கிளைமேக்ஸில் வைத்தால் சரியாக வராது என்று சொல்லிவிட்டேன். வில்லியாக இருந்தாலும் ஒரு பெண் இறந்து போய்விட்டாள்.. அவள் கண்களை ஹீரோ மூடிவிட்டு நடந்து போகிறார். அந்த நேரத்தில் போய் என் பேரு படையப்பா என்று கேரக்டர் பெயரை வைத்தால் செட் ஆகுமா? அதனால் தான் நான் வைக்கவில்லை.
"வாழ்க்கையில் ஆயிரம் தடை கல்லப்பா.. தடைக்கல்லும் உனக்கு படிக்கட்டப்பா" என்ற வரிகள் வைத்தால் தான் அந்த இடத்திற்கு பொருத்தமாக இருக்கும். நீலாம்பரி போன்று உனக்கு எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் நீ அதை படிக்கட்டாக மாற்றி முன்னேற வேண்டும் என்பது போன்று வார்த்தைகள் இருந்தால் தானே அதை ரசிகர்கள் விரும்புவார்கள்..? என்று நான் சண்டை போட்டு தான் அந்த கிளைமேக்ஸ் பாட்டு மாற்றினேன். அதுபோல இப்படி பிரச்சனைகள் இந்த திரைப்படத்தில் மட்டுமல்ல இதுபோல பல படங்களிலும் பிரச்சனைகள் நடந்திருக்கிறது.. என்று அந்த பேட்டியில் கே எஸ் ரவிக்குமார் பேசி இருக்கிறார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications