பஞ்சதந்திரம் படத்தில் 5 நடிகர்களாலும் கஷ்டம்! அந்த காட்சி வேண்டாம்னு சொன்னேன்- கேஎஸ் ரவிக்குமார்
சென்னை: கே.எஸ் ரவிக்குமார் தமிழ் ஃபிலிமிபீட் யூடியூப் சேனலில் தான் இயக்கிய "பஞ்சதந்திரம் திரைப்படம்" குறித்தும் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் அதில் வந்த கதை குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஒரு சில திரைப்படங்கள் எத்தனை வருடங்கள் கழித்தாலும் பார்க்கும்போதெல்லாம் குபீர் என்று சிரிப்பு வரும். அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூபி சேது, ஸ்ரீமன், ரம்யா கிருஷ்ணன், சிம்ரன், தேவயானி நாகேஷ் ஊர்வசி போன்ற பலர் நடித்த பஞ்சதந்திரம் திரைப்படம் பலருடைய ஃபேவரிட் ஆக இருக்கும்.

அதுவும் திருமணத்திற்கு பிறகும் ஆண் நண்பர்கள் தங்களுடைய மனைவிக்கு தெரியாமல் சில சேட்டைகள் செய்வது பிறகு மாட்டிக்கொள்வதுமாக இந்த திரைப்படத்தின் கதை பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். இந்தத் திரைப்படத்தில் பலருக்கும் தெரியாத பல சுவாரசியமான கதையைப் பற்றி தான் கே எஸ் ரவிக்குமார் ஃபிலிமிபீட் தமிழுக்கு அளித்த பிரத்தியோக பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் பஞ்சதந்திரம் திரைப்படத்தில் நடித்த கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ், யூகி சேது, ஸ்ரீமன் என ஐந்து நடிகர்களும் ரொம்பவே ஜாலியான கேரக்டர் எப்போதும் காட்சிகள் குறித்து பேசி சிரித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களை வைத்துக்கொண்டு எனக்கு சூட்டிங் எடுப்பது ரொம்பவே சவாலாக இருந்தது.
கமல்ஹாசனை நான் எதுவும் திட்ட முடியாது. அவரிடம் எதையாவது நான் சொல்ல வேண்டும் என்றால் நான் ஜெயராமை தான் பயன்படுத்துவேன். அவரிடம் சொல்வது போன்று சொன்னாலே எல்லோரும் சரி என்று அலர்ட் ஆகி விடுவார்கள். இந்த ஐந்து பேரோடு நாகேஷ் சேர்ந்து கொண்டால் சூட்டிங் ஸ்பாட் அவ்வளவுதான்.. நாகேஷ் அந்த நேரத்தில் நல்ல ஆரோக்கியமாக இருந்தார். அதனால் அவரும் சேர்ந்து கொண்டு ரகளை செய்து கொண்டிருப்பார்.
அப்போது நான் நைசாக ஜெயராமிடம் எல்லாம் இருக்கட்டும்... கொஞ்சம் நடிக்கலாமா? டேக் போவோமா என்று கேட்டதும் உடனே எல்லோரும் கிளம்பி வருவார்கள். அதுபோல எனக்கு அந்தப் படத்தில் இன்டெர்வெல் வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இரண்டாவது காட்சி எடுக்கும் போது தான் சில கருத்து வேறுபாடு வந்தது. அதாவது இந்தப் படத்தில் வரும் வைரம் டாப்பிக் எனக்கு பிடிக்கவில்லை.
ராஜ்கிரண் எனக்கு வாய்ப்பு தரல! நான் தான் அவருக்கு 2 முறை வாய்ப்பு கொடுத்தேன்.. நடிகர் ராமராஜன் ஓப்பன்
அதனால் அதை மாற்றலாம் ஏற்கனவே இங்கே வைர பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது என்று சொன்னேன். அதற்கு கமல்ஹாசன் பின் லேடன் இன்னைக்கு கூட வைரம் தான் கடத்துறான் என்று சொன்னார். அந்த படம் முதல் பாதியில் பெரிய அளவில் கலகலப்பாக வரும் பிறகு வைரம் பிரச்சனை வந்ததும் சின்ன கேப் விழுந்து இருக்கும். ஆனாலும் முதலில் இருந்த காமெடியை வைத்து அப்படியே படம் முழுக்க போய்விட்டது என்று அந்த பேட்டியில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications