Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குன்றத்தூர் அபிராமி டூ கோயம்புத்தூர் தமிழரசி.. கள்ளக்காதலனின் செல்ல பெயர் "வசி புருஷ்".. இது எப்போ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மரண தண்டனை என்றால் ஒரு நொடியில் உயிர் போய்விடும்.. இறுதி மூச்சுவரை சிறை என்ற தண்டனையானது, குன்றத்தூர் அபிராமிக்கு தரப்பட்டுள்ள சிறப்பான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.. சமூகத்தில் அனைவருக்குமே பயத்தை தரக்கூடிய தண்டனை இதுவாகும் என்கிறார் பிரியாணி அபிராமியின் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் சசிரேகா.

Galatta Pink என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார் வழக்கறிஞர் சசிகலா.. அதில், "2 குழந்தைகளை கொன்றதற்கான ஆதாரங்களை பார்த்தவுடனேயே இவர்தான், அந்த செயலை செய்திருப்பார் என்று எனக்கு தெரிந்துவிட்டது..

Television Kundrathur Abhirami Coimbatore

ஆனால், ஒரு தாய் இப்படியிருப்பாரா? நாம் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோமா? என்று அதிர்ச்சியாக இருந்தது.. கோர்ட்டில் இதுதொடர்பான வாதங்கள் நடந்தபோது, நேரடி சாட்சி எதுவும் இல்லையே என்று அபிரமி சொன்னார்..

பொதுவாக இதுபோன்ற கொலைகளில், நோக்கம் + சூழ்நிலை சாட்சிகள் இவை இரண்டும் இருந்தாலே போதும். அந்தவகையில் அபிராமி கேஸில், நோக்கமும், சூழ்நிலை சாட்சிகளும் சாதகமாக இருந்தன. இதைத்தவிர, மெட்டீரியல் எவிடென்ஸ், எலக்ட்ரானிக்கல் எவிடென்ஸ்களும் இருந்தன.. இதுவே இந்த வழக்குக்கு போதுமானதாக இருந்தது.

குழந்தைக்கு மாத்திரை தந்துட்டியா

2ம் குற்றவாளி மீனாட்சி சுந்தரத்துக்கு எதிராகவும் சாட்சிகள் சொல்லப்பட்டன. குறிப்பாக, அபிராமியின் வீட்டுக்கு கீழே குடியிருந்த ஒரு பெண்மணி, அபிராமியும். மீனாட்சி சுந்தரமும் அடிக்கடி சந்தித்து கொண்டதை பார்த்ததாக, சொன்னார்..

"ஒருமுறை மீனாட்சி சுந்தரம் அபிராமியிடம், "குழந்தைக்கு மாத்திரை தந்துட்டியா" என்று கேட்டார்.. அப்போதே எனக்கு சந்தேகம் வந்தது.. உடனே மீனாட்சி சுந்தரம் போனதுமே அபிராமியிடம் , "என்ன மாத்திரை" என்று கேட்டேன்.. குழந்தைக்கு உடம்பு சரியில்லை, அதுக்கான மாத்திரை" என்றார்..

வீட்டில் கணவர் இல்லாதபோது, அந்த பிரியாணிக் கடைக்காரர் இங்கே வருவது சரியில்லை, அவரது பழக்கத்தை விட்டுவிடுமாறு சொன்னேன்... ஆனால், அப்போதிருந்து அபிராமி என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்" என்று அந்த பெண்மணி கோர்ட்டில் சாட்சியம் தெரிவித்தார்.

காருண்யா விடுதிக்கு சென்ற அபிராமி

அபிராமியை இந்த கொலைகளை செய்ய வைத்ததே, திருமணத்தை மீறிய உறவுதான்.. மீனாட்சி சுந்தரம் தேவைப்பட்ட அளவுக்கு குழந்தைகள் அவருக்கு தேவைப்படவில்லை.. அப்படியிருக்கும்போது மனரீதியான பாதிப்பு அபிராமிக்கு இருந்ததாக சொல்ல முடியாது.. மிகத்தெளிவாகவே கொலைகளை செய்திருக்கிறார்..

குழந்தைகளை கொன்றுவிட்டு, டூவீலரில் கோயம்பேடு சென்று அங்கே வண்டியை பார்க் செய்துவிட்டு, நாகர்கோவில் சென்றார் அபிராமி.. அங்கே காருண்யா விடுதியில் தங்க முயற்சிக்கும்போது, மேனேஜர் அங்கு இல்லை.. அதனால், சிறிது நேரம் காத்திருந்துவிட்டு, அங்கிருந்து அபிராமி கிளம்பிவிட்டார்..

கணவரிடமாவது குழந்தைகளை விட்டு சென்றிருக்கலாம்.. தன்னுடைய தேவைக்காக குழந்தைகளை கொன்றதைதான் ஏற்க முடியவில்லை..

கலங்காமல் நின்ற அபிராமி

அபிராமிக்காகவும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடினார்கள்.. அப்போது வழக்கின் போக்கை மாற்ற முயற்சித்து, கணவர் விஜய் மீது பழியை போட்டாங்க. ஆனால், அன்றைய தினம் விஜய் வீட்டிலேயே இல்லை, வேலைக்கு சென்றிருந்தார்.. எனவே, விஜய் மீது சுமத்திய குற்றத்தை அபிராமி தரப்பினரால் முடியவில்லை. ஒரு சாட்சியும் விஜய்க்கு எதிராக வரவும் இல்லை.

மரண தண்டனை என்றால் ஒரு நொடியில் உயிர் போய்விடும்.. இறுதி மூச்சுவரை சிறை என்ற தண்டனையானது, சிறப்பான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.. சமூகத்தில் அனைவருக்குமே பயத்தை தரக்கூடிய தண்டனை இதுவாகும்.

கோயம்புத்தூர் தமிழரசி

ஆனால், அபிராமி வழக்குக்கு தண்டனை கிடைத்தாலும், மறுநாளே கோயம்புத்தூரில் தமிழரசி என்ற பெண், கள்ளக்காதலனுக்காக, தன்னுடைய நாலரை வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்...

விளையாடி கொண்டிருந்த குழந்தையை கொன்று, நாடகமாடி உள்ளார் கோவை தமிழரசி.. இப்படி நாடகமாடினால் தப்பித்துவிடலாம் என்று தமிழரசி நினைத்திருக்கலாம். அல்லது அபிராமி போல தண்டனை கிடைத்துவிடும் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருந்திருக்கலாம். பெண்களுக்கு இதில் விழிப்புணர்வு வரவேண்டுமானால், முதலில் சுயஒழுக்கம் இருக்க வேண்டும்

அபிராமி வழக்கில் தொடர்ந்து பயணப்பட்டு வந்துள்ளேன்.. ஆனால், ஒருமுறைகூட அவரிடம் குற்ற உணர்ச்சியை நான் பார்க்கவில்லை..

வசீகரன் - வசி புருஷ்

தீர்ப்பின்போது அழுததைதான் பார்த்தேனே தவிர இதுவரை சிறையில் அபிராமி அழுது பார்த்ததே இல்லை.. பெரிதாக கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.. ஆனால் வழக்கின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தான் தவறு செய்யவில்லை என்ற வாதத்தைதான் முன்வைத்தபடி இருந்தார் அபிராமி.

அபிராமி - விஜய் இருவருக்குள்ளும் சண்டையே வந்தது கிடையாது.. டிக்டாக் வந்தபிறகுதான், அதிலும் மீனாட்சி சுந்தரத்துடன் பழக்கம் வந்தபிறகுதான், தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.. மீனாட்சி சுந்தரம் வசீகரன் என்ற பெயரை "வசி புருஷ்" என்று தன்னுடைய செல்போனில் save செய்து வைத்திருந்தார் அபிராமி என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+