மீண்டும் சீரியலுக்கு திரும்பிய குண்டு கல்யாணம்..அந்த நிலையில் கிடைத்த வாய்ப்பு..உருக வைத்த வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவை நடிகரான குண்டுகல்யாணம் 22 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் இவருக்கு கிடைத்த வாய்ப்பை இவர் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட பயன்படுத்தியுள்ளார்.

குண்டு கல்யாணம் சினிமா வாழ்க்கை

குண்டு கல்யாணம் சினிமா வாழ்க்கை

சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி ஒரு சில நடிகர்களின் பெயரை சொன்னதும் ரசிகர்களுக்கு டக் என்று நினைவுக்கு வந்துவிடும். அந்தவகையில் பிரபலமானவர் தான் குண்டு கல்யாணம். இவர் திரைப்படங்களில் காமெடி நடிகராக தன்னுடைய திறமையை வெளிக்காட்டியுள்ளார். அதிகமான உடல் எடையோடு இருந்தாலும், அதையும் அசால்டாக காமெடியாக காட்டி அடுத்தவர்களை சிரிக்க வைப்பதில் இவர் வல்லவராக இருந்துள்ளார். அதனால்தான் தொடர்ந்து பல படங்களில் இவருடைய நடிப்பை ரசிகர்கள் ரசித்து வந்தனர். ஆனால் இவர் அரசியலில் சேர்ந்த பிறகு சினிமாக்களில் அதிகமாக நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனை

உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனை

இவருக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும், தான் எந்த சொத்துக்களையும் தனக்காக வாங்கி வைக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். காரணம் இப்ப இருக்கிற மாதிரி அப்போ அதிகமான சம்பளம் கிடையாது. அப்போது கிடைத்ததெல்லாம் செலவுக்கு மட்டும் தான் சரியாக இருந்தது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு இருந்தது அனைவருக்கும் தெரியும். சிறுநீரக சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் இவர் தன்னுடன் நடித்த பிற நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரிடம் உதவி கேட்டு இருந்தார். ஆனால் உதவி கிடைக்காததால் ஆபரேஷனை தள்ளி வைத்துள்ளார்,

சினிமாவில் இருந்து விலகிய காரணம்

சினிமாவில் இருந்து விலகிய காரணம்

இவர் இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து உள்ளாராம். சினிமாவை தாண்டி இவர் ஒரு தீவிரமான அதிமுக தொண்டராக இருந்துள்ளார். தன்னுடைய மேடைப்பேச்சு திறமையின் மூலமாக அதிமுக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி உள்ளாராம். 1998ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது வேறு எந்த வேலையாக இருந்தாலும் ஒதுக்கி விட்டு தேர்தலுக்கான பணிகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்களாம். அப்போது இவர் தான் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். முழுக்க தேர்தலுக்காக உழைத்துள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது கூட பெரிய நடிகர்களிடம் நீங்கள் எனக்கு பண உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. என்னை போல் உள்ள நலிந்த நடிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதை வைத்து உடம்பு சரி செய்வதற்காக தான் நாங்கள் கேட்கிறோம். மீண்டும் தனக்கு சினிமாவில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மீண்டும் கிடைத்த சீரியல் வாய்ப்பு

மீண்டும் கிடைத்த சீரியல் வாய்ப்பு

இவர் தன்னுடைய ஆசையை தெரிவித்து ஒரு சில நாட்களில் இவருக்கு விஜய் டிவியிலிருந்து சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 22 ஆண்டுகள் கழித்து சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கியிருக்கும் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன்2 ஒரு சிறப்பு விருந்தினராக தான் நடிக்க இருக்கிறாராம். மாறன் மனநிலை மருத்துவமனையில் இருக்கும்போது அங்கே மன நல டாக்டராக இவர் நடிக்க இருக்கிறாராம். சிறிய வேடமாக இருந்தாலும் சரி இதைத்தொடர்ந்து புதிய வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார். ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் போது இதை பார்த்து அடுத்தவர்களும் அழைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்களும் கூறிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+