CWC செட்டில் நடந்தது இதுதான்.. மணிமேகலை சொன்னது பாதி தான்! குரோஸி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மணிமேகலை கூறியிருந்த நிலையில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை நடந்தது என்பது பற்றி செட்டில் கூட இருந்த குரோஷி வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த சனிக்கிழமையில் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியது குறித்து தான் அதிகமாக இணையத்தில் பேசப்படுகிறது. மணிமேகலை தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு காரணம் ஒரு தொகுப்பாளர் தான். அவர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து என்னை தொகுப்பாளராக வேலை செய்ய விடாமல் தடுக்கிறார் என்று ஒரு பெரிய குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

vijay tv manimegalai

அதற்குப் பிறகு வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் மணிமேகலைக்கு அதிகமானோர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் மணிமேகலை குறிப்பிட்டது பிரியங்கா தான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் பிரியங்காவையும் எல்லோரும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான நிலையில் பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் குரோஸி சம்பவம் நடந்த அன்று செட்டில் என்ன நடந்தது என்பது பற்றி வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி தான் அதிகமாக பேசப்படுகிறது. நானும் இரண்டு நாட்களில் இந்த பிரச்சனை முடிந்து விடும் என்று நினைத்தேன். ஆனால் பிரச்சனை நீண்டு கொண்டே இருக்கிறது.

அதனால் நான் என் கண்ணால் பார்த்த விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். சம்பவம் நடந்த அன்று நடிகை திவ்யா துரைசாமி எலிமினேஷன் செய்யப்பட்டிருந்தார். அவர் வெளியேறுவதற்கு முன்பு எல்லா போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா பற்றியும் பேசி இருந்தார். பிரியங்கா எனக்கு அதிகமான சப்போர்ட் கொடுத்தார் என்று அவரை பாராட்டி பேசிக் கொண்டிருந்தார்.

vijay tv manimegalai

அதை தொடர்ந்து எல்லோரும் திவ்யா துரைசாமி பற்றி பேசினார்கள். அப்போது பிரியங்கா நான் திவ்யா துரைசாமி பற்றி பேசலாமா? என்று எல்லாரிடமும் கேட்டார். நான் கோமாளியாக இருந்தபோது நான் சரி என்று சொன்னேன். அந்த நேரத்தில் மணிமேகலை எதுவுமே சொல்லவில்லை. பிறகு திவ்யா துரைசாமி குறித்து பிரியங்கா பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சில நிமிடங்கள் கழித்து திடீரென்று முன்னே வந்த மணிமேகலை பிரியங்கா இது போதும் நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் யார் தொகுப்பாளர் என்று மக்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் தான் எப்போதும் தொகுப்பாளர் போலவே இந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கிறீங்க என்று பேசிவிட்டார். இது அங்கிருந்த எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அதற்கு பிரியங்கா அவர் என்னைப் பற்றி பேசி இருக்கிறார் என்றால் நான் திவ்யா பற்றி திருப்பி பேச வேண்டுமே எனக்கான உரிமை ஏன் மறுக்கிறீங்க? என்று கேட்க, அதெல்லாம் முடியாது நீங்க இதற்கு மேல பேசக்கூடாது என்று மணிமேகலை சொன்னார். உடனே பிரியங்கா கோபப்பட்டு வெளியே போய்விட்டார். இதுதான் அன்று நடந்தது. பிறகு அடுத்த சூட்டிங் அடுத்த வாரம் என்று இருந்த நிலையில் அதற்கிடையில் பிரியங்கா சேனல் தரப்பில் மணிமேகலை சூட்டிங் ஸ்பாட்டில் அத்தனை பேர் முன்பு என்னை பேசவிடாமல் தடுத்துவிட்டார். அதனால் அடுத்த வாரம் நிகழ்ச்சியில் அவர் இதற்கு ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும், சும்மா ஜாலிக்காக பண்ணுனோம், ஃபன் பண்ணுனோம் என்று ஏதாவது சொன்னாலும் பரவாயில்லை என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு சேனல் தரப்பினரும் நாங்கள் மணிமேகலையிடம் பேசுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். பிறகு அடுத்த வாரம் நிகழ்ச்சி தொடங்கப்படும் போது மணிமேகலை நார்மலாக தான் இருந்தார். அப்போது எப்போதும் போல எல்லா போட்டியாளர்களையும் வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். ஆனால் பிரியங்காவை பற்றி நான் வரவேற்க மாட்டேன் என்று சொல்ல ரக்சன் தான் பிரியங்காவை வரவேற்றது. அதற்குப் பிறகு மணிமேகலை இடம் பிரியங்காவிடம் ஜாலியாக பேசுவது போல நிகழ்ச்சியை கொண்டு போங்க என்று சொல்ல அதற்கு அவர் முடியாது என்று சொல்லிவிட்டு தான் வெளியே வந்திருக்கிறார்.

இதுதான் நிகழ்ச்சியில் நடந்தது. இது தெரியாமல் சிலர் இணையத்தில் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் இவர்கள் இருவரில் யாருக்கு சப்போர்ட்டாகவும் பேசவில்லை. அன்று நிகழ்ச்சியில் என்ன நடந்ததோ அதை அப்படியே பேசுகிறேன் என்று குரோஸி பேசி இருக்கிறார். குரோஸி ஏற்கனவே பல நிகழ்ச்சிகளை மணிமேகலையுடன் தொகுத்து வழங்கி இருக்கிறார். ஆனால் குரோஸி இப்போது பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியிருப்பது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

vijay tv manimegalai

ஏற்கனவே மணிமேகலை தான் நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டேன் என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தபோது முதலாக குரோஸி தான் கமெண்ட் போட்டு இருந்தார். பிறகு அந்த கமெண்டை டெலிட் செய்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது பிரியங்காவிற்கு ஆதரவாக குரோஸி பேசி இருப்பது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.

குரோஸி பேசியது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த பிரச்சனையில் மணிமேகலை மீது தவறா? அல்லது பிரியங்கா மீது தவறா? உங்க கருத்தை உரக்க சொல்லுங்க பாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+